இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 17 December 2013

மலரும் அது கூறும் செய்தியும் - 2


Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  

 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம். 

                  

இன்றைய மலர்   :

அரளி பூ  - இளஞ் சிவப்பு நிறம் (Light Pink)
 Surrender of All Falsehood -  
நமது எல்லாப் பொய்களையும் சரணாகதி செய்தல் 
Oleander
Image Courtesy : flowersofindia.net


இன்றைய செய்தி/ Message of the Day :
   One who receives and accepts and lives in the Mother's light, will begin to see the truth on all the planes, the mental, the vital, the physical. He will reject all that is undivine, - the undivine is the falsehood, the ignorance, the error of the dark forces; the undivine is all that is obscure and unwilling to accept the divine Truth and its light and force. The undivine, therefore, is all that is unwilling to accept the light and force of the Mother. That is why I am always telling you to keep yourself in contact with the Mother and with her Light and Force, because it is only so that you can come out of this confusion and obscurity and receive the Truth that comes from above..
அன்னையின் உணர்வே, இறை உணர்வு. அன்னையின் ஒளி, சத்தியத்தின் ஒளி , அன்னையின் சக்தி சத்திய ஜீவியத்தின் சக்தி. அன்னையை உணர்ந்து, வாழ்வில் ஏற்று செயல்படும் ஒருவர் தனது மனம், உடல் மற்றும் உணர்வு அனைத்திலும் சத்தியத்தை பார்க்கலாம். அன்னையை ஏற்ற ஒருவர், இறைவனுக்கு எதிரான பொய், அறியாமை,  இருள் மற்றும் இறைவனின் சத்தியத்திற்கு எதிரான மனப்பான்மையை  விலக்குவர். அதனால்தான் அன்னையின் ஒளியிடனும், சக்தியுடனும் நாம் எப்போதும் தொடர்புடையவர்களாக இருக்கவேண்டும் என அரவிந்தர் வலியுறுத்துகிறார். ஏனெனில், இதன் மூலமாக மட்டுமே நாம் குழப்பத்தில் இருந்தும், அறியாமையில் இருந்தும் விடுபட்டு உண்மையை ஏற்க முடியும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

- Book : On Himself and on The Mother,  Sri Aurobindo


பொய்யை எதிர்க்கும் அன்பருடைய மெய் வெல்லும், பொய்க் கலப்பில்லாமல் வெல்லும்.

அகந்தை பொய்யானது, பொய்யின் கருவியுமாகும். பொய்யின் கருவி மெய்யைத் தேடி வந்தால், அது மெய்யைக் கண்டுபிடிக்காது, பொய்யைக் கண்டு கொள்ளும். யோக சக்தி ஒளியாலானது. ஒளி சத்தியத்தைச் சேர்ந்தது. யோகத்தால் செயல்படும்பொழுது ஒளி வெளிப்படும். அது மெய்யைக் கண்டு கொள்ளும். சத்தியம் ஜெயிக்கும். இறைவனின் இலட்சியம் பூர்த்தியாகும்.

- திரு. கர்மயோகி.


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள், அரளி 


No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.