நாம் எதற்காக பிறந்துள்ளோம்? நமது வாழ்வின் குறிக்கோள் என்ன?
நமது சிந்தனைக்கு:
பிறப்பு, இறப்பு, மனித வாழ்வு பற்றி பல மதங்களும், அவற்றிக்கான காரணங்களையும், மனித வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என சில வழிகளையும் காட்டுகின்றன. நமது கர்ம வினைகள் நம்மை சூழ்ந்துள்ளதால் வாழ்வின் இன்ப துன்பங்களில் நாமும் பங்கு கொள்கிறோம். மேலும் கர்மங்களைச் செய்கிறோம். துன்பம் வந்தால் வருந்துகிறோம். சந்தோஷம் வந்தால் அதனை வரவேற்கிறோம். சாதாரண மனித வாழ்வின் குறிக்கோளாக, பணம் சம்பாதிப்பதையும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதையும், சமூக அந்தஸ்தை நிலை நிறுத்துவதையும் கொள்கிறோம்.
சரி, பிறந்து விட்டோம். நாம் வாழ்வின் ஒவ்வொரு தேவையையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அதில் பணமும் முக்கிய அங்கம் வகிக்கிறது. எதனையும் விலக்க முடியாது. இதுதான் வாழ்வின் உண்மை. இதுதானே மனிதனின் கடமை. இப்படியிருக்க நாம் எப்படி வாழ்வை, நமது பிறவியின் குறிக்கோளை ஆன்மீகமயமாக்குவது என்ற கேள்வி எழலாம்.
ஆனால் இறைவன் எதிர்பார்ப்பது என்ன? நாம் இந்தப் பிறவியில் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார் என்று நாம் எத்தனை நாள் சிந்தித்திருப்போம்?
இறைவனை பற்றிய சிந்தனை, நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருந்தால், நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும், இறைவனின் செயலே என நாம் உணர்ந்தால், ஒவ்வொரு செயலும், இறைவனுக்கு அர்பணிக்கபட்டால் அதுவே நமது ஆன்மீக வாழ்வு, அதுவே நமது வாழ்வின் குறிக்கோள்.
Yes, to live in the consciousness of the Divine Presence is the only thing that matters. -The Mother.
நாம் செய்யும் எந்த ஒரு செயலையும், இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யும் போது, நமது அகங்காரம் அழிவதால், அச்செயலுக்கு உண்டான கர்மபலன்கள், அவை நல்லதோ தீயதோ, நம்மை பாதிப்பதில்லை. இதனையே நம் வாழ்வின் Practice ஆகக் கொண்டால், கர்மபலன்கள் அற்ற ஒரு வாழ்வு நமக்கு கிடைக்கிறது. அதில் இறைவன் அளிக்கும் அருளாகிய பேரானந்தத்தை நாம் பெறுகிறோம். நம் செயல், இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்படும்போது, அந்த செயலில் பொய்யின் பங்கு முற்றிலும் இல்லை. இவ்வுலகில் பொய் வலிமை இழக்கும். உலகமும், நம் ஒவ்வொருவரின் சமர்ப்பணத்தால் நன்மையை பெறுகிறது.
The individual self and the universal self are one; in every world, in every being, in each thing,in every atom is the Divine Presence, and man’s mission is to manifest it.
- The Mother.
நமக்குள் இருக்கும் இறைவனை தேடவேண்டும் என்பதே, நமது வாழ்வின் குறிக்கோள் என்கிறார் அன்னை.
Why are we on earth?
Mother's Answer: To find the Divine who is in each of us and in all things.
Only one thing is important, it is to find the Divine. For each one and for the whole world anything becomes useful if it helps to find the Divine.
Life is meant for seeking the Divine. Life is realised when finding the Divine.
Let this be our one need in life, to realise the Divine.
-The Mother.
வாழ்வின் ஒவ்வொரு செயலிலும், சமர்பணத்தை பின்பற்றி, பொய்யை விலக்கி, அன்னையின் சத்திய ஜீவிய சக்தியின் அருளைப் பெறுவோம். ஆன்மீகத்தில் உயர்வோம்.

இந்த வலைத்தளத்திற்கு தங்களின் வருகைக்கு நன்றி. இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு உதவும் வகையில், அதன் தொடர்பான உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் எழுதிய பல்வேறு நூல்களில், தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யலாம். நன்றி.
ReplyDelete