இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Friday, 22 November 2013

இறை பணி அல்லது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பது என்ன?


Whatever work you do, do it as perfectly as you can.

That is the best service to the Divine in man.
          - The Mother


சேவை, தொண்டு, அறப்பணி என இறைவனுக்குச் செய்யும் சேவைகள் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உடலுழைப்பாலோ அல்லது பொருட்செலவு செய்தோ இறைவனுக்குப் பலரும் அவரவரது விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப சேவை செய்கின்றனர். இறைபணி செய்ய எனக்கு நேரமில்லை என்று கூறுபவரும் உண்டு. சேவை என்று கூறப்படும் செயலானது, முழுவதும் சுயநலமில்லாமல், இறைவனின் சிந்தனையுடன் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொய்யின் கறைகள் உள்ள எந்த பணியும், இறைவனை சென்று அடையாது, இல்லையா? அதனை, இறைவனும் ஏற்க முடியாது என்பதும் உண்மை.

அன்னை குறிப்பிடும் இறைப்பணி என்பது சுயநலம், பொய், புகழ், வீண் பெருமை என எந்தவிதமான இருளின் கறைகள் இல்லாத சேவை ஆகும். இப்படித்தான் இறை பணிகளைச் செய்ய வேண்டும் என்று அன்னை, முறைகளைப் பற்றிக் கூறவில்லை. மாறாக, நாம் சிறந்த முறையில் செய்யும் எந்தச் செயலும், மனிதனில் இருக்கும் இறைவனுக்குச் சேவையாகச் சென்றடையும் என்கிறார்.

வாழ்வில், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், அவை சிறியதோ, பெரியதோ அவற்றை நாம் முழு ஈடுபாட்டுடன், உண்மையுடன், அவை நாம் இறைவனுக்குச செய்யும் சேவையாக மட்டுமே நினைத்து செய்யவேண்டும் என்கிறார். அதுதான் நாம் இரைவனுக்குச் செய்யக்கூடிய சிறந்த சேவை ஆகும்.


  • Whatever work you do, do it as perfectly as you can. That is the best service to the Divine in man.
  •  Whatever you do in life must be done as a service to the Divine and nobody else. Whatever you are, think or feel, you are responsible for it to the Divine and to nobody else. He is the sole Master of your being and your life. If in all sincerity you surrender entirely to Him He will take charge of you and your heart will be in peace. All the rest belongs to the world of Ignorance and is governed by ignorance which means confusion and suffering. Blessings.
- ஸ்ரீ அன்னை.

ஆகையால், இறைவனுக்கு சேவை செய்ய, தனியாக சில முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதில்லை, ஒவ்வொரு செயலும், நாம் இறைவனின் கருவியாச் செயல்பட்டு, இறைவனுக்குச் செய்யும் சேவைதான் என்றாகிறது.


நம்மில் பலருக்கும் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் Sincerity, Dedication என்பது உண்டு. மிகவும் நேர்த்தியாக ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். இது நமது வேலை மற்றும் கடமை, நான் எனது Boss - காக இந்த செயலை செய்கிறேன், எனது முழு திறமையுடன், உண்மையாகச் செய்வேன் என்று ஒவ்வொரு செயலையும் நேர்மையாகச் செய்யும் மனிதர்கள், பொய்யின் கறைபடாத அந்த சேவை, இறைவனை அடைகிறது என்று புரிந்து கொண்டு செய்தால், அச்செயலைப் போன்ற மகத்துவமான இறைப்பணி வேறு இல்லை, இல்லையா? நாம் எந்தச் செயலைச் செய்தாலும், நாம் உண்மையாக இருக்கவேண்டியது, அந்த இறைவனுக்கே தவிர, யாருக்கும் இல்லை.

  •  Your service to the Divine must be scrupulously honest, disinterested and unselfish, otherwise it has no value.

  • Personal feelings, grudges and misunderstandings must never interfere with the work which is done as a service to the Divine and not for human interests. Your service to the Divine must be scrupulously honest, disinterested and unselfish, otherwise it has no value.
அன்னை குறிப்பிடும் இந்த இறைபணிக்காக குறிப்பிட்ட காலம், நேரம் என்று ஒன்று இல்லை. இந்த செயலைத்தான் செய்ய வேண்டும் என்ற முறைகள் அல்லது கட்டுப்பாடுகள் இல்லை. ஆகையால், ஒளியின் பாதையை, பின்பற்றி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனுக்கு ஆற்றும் சேவையே.

சத்தியத்துடன் நின்று, அன்னையின் சிந்தனையுடன், ஒவ்வொரு செயலையும் செய்து, இறைப்பணி செய்வோம் எந்நாளும்! ஒம் நமோ பகவதே!

- ஸ்ரீ அன்னை.


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine





No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.