இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Monday, 18 November 2013

கோபத்தின் விளைவுகளை நீங்கள் உணர்வீர்களா?




 நமது சிந்தனைக்கு:

நம்மில் பலருக்கும் கோபம் கொள்வது என்பது மனிதனுக்கு வேண்டிய நியாயமான உணர்வு என்ற கருத்து உண்டு. ஆனால், ஆன்மீக வாழ்வில் கோபத்திற்கு இடமில்லை. இறை விரோத சக்திகள் (hostile forces)  தம்முடைய செயலை நிறைவேற்றிக் கொள்ள, நம்மிடம் இருக்கும் தாழ்ந்த குணமாகிய கோபத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால், கோபத்தை நாம் வென்றால், இந்த negative forces-ன்  ஆதிக்கத்தில் இருந்து, பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

கோபம் ஒரு சாதாரண மனிதனுக்கு உள்ள கீழ்நிலை  உணர்வு. கோபத்தை வெளிப்படுத்தும் முறைகளும் மனிதரின் குணத்திற்கேற்ப வேறுபடுகின்றன. சிலர் வாய் வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலர் அதற்கு ஒரு படி மேலே போய், கையில் கிடைத்ததை தூக்கி எறிவார்கள். இப்படி பல விதங்களில், கட்டுப்பாட்டை மீறி வெளிவரும் கோபத்ததால், அந்த மனிதர் மட்டுமன்றி, அவரது சூழலும், அவரைச் சுற்றி உள்ளவர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பு அடைகின்றனர். சிலர் கோபம் கொண்டால், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசாமல் தவிர்த்து விடுவர். மனதில் பகையை வளர்ப்பதோடு, தமது Negative Thoughts - களினால் ஒருவருடைய நலனை  மற்றவர்கள் தடை செய்கின்றனர். மனதிலும் நிம்மதியை இழக்கின்றனர். ஆகையால் பேசாமல் தவிர்ப்பதும், கோபத்தை அழிக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும், கோபம் என்பது பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை.

கோபத்தை கட்டுப்படுத்துவது என்பதும் ஒரு சிறந்த முயற்சியே. ஆனால்,ஒருவர் தனது கோபத்தை அளவிற்கு மீறிய கோபத்தை எந்த வகையிலும், வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருந்தால், அது அவரை உடலளவிலும், மனதளவிலும் பலவீனமடையச் செய்யும் என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். சிலர், கோபம் வரும் சமயம், வேறு ஒரு நிகழ்வில் அல்லது செயலில் மனதை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவரவரது, மன மற்றும் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றபடி நாம் வாழ்வில் கோபத்தை வெளிப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ செய்கின்றோம்.

கோபம் ஏன் வருகிறது என்று சிந்தித்தால், பல்வேறு காரணங்களைக் கூறலாம். தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையோ, மனிதர்களையோ கட்டுப்படுத்த முடியாமல் போவது, எதிர்பார்க்கும் அன்போ, அக்கறையோ  கிடைக்காமல் போவது, பொறாமை, இயலாமை, வெறுப்பு, எண்ணங்கள் அல்லது ஆசைகள் நிறைவேறாமல் போவது, தனது குறைகளை மற்றவர்கள் கூறுவது, தனது கோபம் நியாயமானது என நினைப்பது என பல காரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது கோபம், நியாயம் என்றாலும் கூட கோபம் என்பது சிறந்த மனிதனுக்கு உள்ள உணர்வு அல்ல. அன்னையின் வழி, நமக்கு நம் கோபத்தை வேறு வழியில் திருவுமாற்றம் அடைய உதவி செய்கிறது.

அன்னை கோபத்தைப் பற்றிக் கூறும் சில கருத்துக்களைக் காண்போம். கோபமும் வன்முறையின் ஒரு வெளிப்பாடே என்கிறார் அவர்.

.......... anger is a deformation of the vital power, an obscure and wholly unregenerated vital, a vital that is still subject to all the ordinary actions and reactions. When this vital power is used by an ignorant and egoistic individual will and this will meets with opposition from other individual wills around it, this power, under the pressure of opposition, changes into anger and tries to obtain by violence what cannot be achieved solely by the pressure of the force itself.

 Besides, anger, like every other kind of violence, is always a sign of weakness, impotence and incapacity.

...........because anger can only be something blind, ignorant and asuric, that is to say, contrary to the light.


Anger and vengeance belong to a lower humanity, the humanity of yesterday and not of tomorrow.

- The Mother.

நம் குழந்தைகளுக்கும், கோபத்தைத் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்கிறார் அன்னை. ஏனென்றால் குழந்தைகளும், கோபம் கொள்வது என்ற பழக்கத்தை பெற்றோரிடம் இருந்துதான் கற்கின்றனர்.


Two things need to be done. Children must be taught:
a) not to tell a lie, whatever the consequences;
b) to control violence, rage, anger.

- The Mother.

கோபம் என்ற தாழ்ந்த மனிதத் தன்மையை நம்மை விட்டு அகலும்படி செய்ய, ஸ்ரீ அன்னையை பிரார்த்திப்போம். நிம்மதியான வாழ்வைப் பெறுவோம்!

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo



1 comment:

  1. இந்த வலைத்தளத்திற்கு, தங்களின் வருகைக்கு நன்றி. இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு உதவும் வகையில், அதன் தொடர்பான உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் எழுதிய பல்வேறு நூல்களில், தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யலாம். நன்றி.

    ReplyDelete

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.