இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 14 May 2015

Message of the day - மன நிம்மதியை பெறுதல் - Mental Peace


If you want to be peaceful, happy, always satisfied, to have perfect equality of soul, you must tell yourself, “Things are as they should be,” and if you are religious you should tell yourself, “They are as they should be because they are the expression of the divine Will”, and we have only one thing to do, that is to accept them as they are and be very quiet, because it is better
Image Courtesy :www.mirapuri-enterprises.com



to be quiet than to be restless.One who has won inner peace is a herald of deliverance wherever he goes, a bearer of hope and joy.

Most people want to be what they call “quiet”, what they
call “peaceful”, to have a small organisation in their own measure—which is generally microscopic, and consists of a regular routine of almost the same activities always, within almost the same bounds, in almost the same surroundings—and all that repeated without much difference; with a sufficient variety not to become completely boring, but with nothing that might disturb
this regular round which makes what is called a peaceful life. For the vast majority of people this is the ideal.

Words of Long Ago
And yet, consciousness has been given to man so that he can progress, can discover what he doesn’t know, develop into what he has not yet become; and so it may be said that there
is a higher state than that of an immobile and static peace: it is a trust total enough for one to keep the will to progress, to preserve the effort for progress while ridding it of all anxiety, all

care for results and consequences.
-Questions and Answers 1957 - The Mother

மனநிம்மதியின் தலையாய எதிரி யார் என்று ஆராய்ச்சி செய்தால், அது கவலை என்று தெரியும். கவலையை முக்கியமாக உற்பத்தி செய்யும் புற நிகழ்ச்சிகளைத் தற்சமயத்திற்குக் கருதாது, அதன் உற்பத்தி ஸ்தானம் அகவுணர்வில் எது என்று கவனித்தால், அது சந்தேகம் என்று தெரியும். எந்தக் கவலையையும் அலசிப்பார்த்தால், அதனடியில் ஒரு சந்தேகம் புதைந்திருப்பது உண்டு. மனநிம்மதியை அழிக்கும் கவலையை உற்பத்தி செய்யும் சந்தேகத்தை அதன் வேரிலேயே அழிக்கக்கூடியது ஒன்றுண்டு; அது நம்பிக்கை. நம்பிக்கையை முழுவதும் ஏற்படுத்துவது பெரிய வேலை என்பதால் அதை ஒதுக்கி, நமக்குள்ள சந்தேகத்திற்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்று முயன்றால், அது எல்லோராலும் முடியக்கூடியதாகும். எளிமையான மனிதனும் தன்னால் முடியாது என்று சொல்ல முடியாதஒரு முறையாகும். அதுவும் தெய்வ நம்பிக்கையாக அது இருந்தால் பலன் சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கையில் வீடு, பாக்டரி, ஆபீஸ், பொதுவாழ்வு ஆகிய இடங்களில் உள்ள நிம்மதியைக் குலைக்கும் நிகழ்ச்சிகளை எடுத்து, அங்கு எப்படி நிம்மதியை ஏற்படுத்தலாம், அதன் அடிப்படையான சந்தேகத்தை அகற்றலாம், அதன் எதிரியான நம்பிக்கையை உற்பத்தி செய்யலாம் எனக் கருதும் முயற்சியே இது.
அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும் நிலைமையில் மாற்றம் செய்யக்கூடியது ஏதாவது உண்டா? மனதை மாற்றிக்கொள்ள இடம் உண்டா? மனப்பாங்கை மாற்றிப் பலனடைய வழியுண்டா? என்று சிந்தித்து, அங்கெல்லாம் நம்மால் முடிந்தவற்றைச் செய்தால், அதற்குள் கெட்டுப்போன மனநிம்மதி மனதில் மலர ஆரம்பிக்கும். அதன்பின் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை முழுவதுமாகப் பலிக்கும்.
-கர்மயோகி அவர்களின்  மனநிம்மதிஎன்ற கட்டுரையில் இருந்து ..

Tuesday, 12 May 2015

Prayer by Sri Mother

Prayer by Sri Mother

WITH peace in our hearts, with light in our minds, we
feel Thee,OLord, so living within us that we await events
with serenity, knowing that Thy path is everywhere, since
we carry it in our own being, and that in all circumstances
we can become the heralds of Thy word, the servitors of

Thy work.
Image Courtesy :www.mirapuri-enterprises.com

With a calm and pure devotion we hail Thee and
recognise Thee as the sole reality of our being.

Monday, 11 May 2015

Message of the Day: Surrendering our problems to the Divine- நம் பாரத்தை அன்னையிடம் சேர்ப்பதெப்படி?




"How can a problem be solved when one doesn’t have the necessary knowledge?"

 How can a problem be solved when one doesn’t have the necessary knowledge? And the unfortunate thing is that man believes that he has to resolve all the problems of his life, and
he does not have the knowledge needed to do it. That is the source, the origin of all his troubles—that perpetual question,
“What should I do?...” which is followed by another one still more acute, “What is going to happen?” and at the same time, more or less, the inability to answer. That is why all spiritual disciplines begin with the necessity of surrendering all responsibility and relying on a higher principle. Otherwise peace is impossible.

Image Courtesy :www.mirapuri-enterprises.com


And yet, consciousness has been given to man so that he can progress, can discover what he doesn’t know, develop into what he has not yet become; and so it may be said that there
is a higher state than that of an immobile and static peace: it is a trust total enough for one to keep the will to progress, to preserve the effort for progress while ridding it of all anxiety, all

care for results and consequences.
-Questions and Answers 1957 - The Mother

கணவனுக்குப்  பொறுப்பில்லை;  பிள்ளைக்குப்  படிப்பு  வரவில்லை; வைத்த    நகைகளை    மீட்கவில்லை;    முதலாளியின்    முன்கோபம் என்னைப்    பெரிதும்    பாதிக்கிறது;    வாழ்க்கை    பிரச்சினையாக ஆரம்பித்து,    சிக்கலாக    மாறி,    வேதனையாகவும்,    நரகமாகவும் ஆகிவிட்டது;   ஏன்   பொழுது   விடிகிறது   என்று   கண்ணில்   ஜலம் வருகிறது;   இன்றைய   பொழுது   எப்படிப்   போகும்   என்று   கேள்வி எழுகிறது;  என்பன  போன்று  சிலருக்கு  வாழ்க்கை  அமைந்து  விடும். அவர்களுக்கு  கதி  மோட்சம்  இல்லையா?  ஒரு  கணம்  சிறப்பு  வாராதா? அன்னை   அவர்களுக்கெல்லாம்   ஏதாவது   வழி   காட்டுவாரா?
  • பாரத்தை     நாம்     சுமப்பதற்குப்     பதில்,     அன்னையிடம் கொடுத்துவிட்டால்  இனி  பாரம்  நமக்கில்லை.  அன்னை  பாரத்தை சுமப்பதுடன்,   அந்தப்   பிரச்சினையையும்   தீர்த்து   விடுவார். பாரத்தை   அன்னையிடம்   சேர்ப்பதெப்படி?
  • நகை   பாங்கிலிருப்பது   அடிக்கடி   நினைவில்   உறுத்துகிறது என்றால்,  நகையை  நாம்  நினைத்துக் கொண்டிருப்பதற்குப்  பதில், மனதிலிருந்து   நகையை   (பிரச்சினையை)   ஒதுக்கி,   விலக்கி, அன்னையை   நினைவுகூர   வேண்டும்.   அதன்   பலனாக   மனம் லேசாகிவிடும்.   பிரச்சினை   தீர்ந்துவிடும்.
  • ஒரு   பிரச்சினை   ஒரு   நாளைக்கு   40   முறை   நினைவில்   வந்து கிலேசமடைந்தால்  முதல்  நாள்  அன்னையை  10  முறை  நினைக்க  முடிகிறது.
  • நாள்   செல்லச்   செல்ல  10 நாள்   கழித்து   ஒரு நாளைக்கு   அன்னையை   40   முறையும்   நினைக்க   முடிகிறது. அதாவது      பிரச்சினையை      முழுவதும்      அன்னைக்கு மாற்றியாகிவிட்டது.   அன்று   பிரச்சினை   முழுவதும்   தீரும்.
என்று  ஒரு  பிரச்சினை  மனதில்  தோன்றும்  ஒவ்வொரு  முறையும் அன்னையை    நினைவுகூர    முடிகிறதோ,    அன்று    பிரச்சினை தீர்ந்துவிடும்.
-கர்மயோகி அவர்களின்  பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல் என்ற கட்டுரையில் இருந்து ..

Thursday, 7 May 2015

Message of the Day: Aspiration - ஆர்வம்


......But actually, to tell you the truth, I think your lives are so easy that you don’t exert yourselves very much! How many among you have truly an INTENSE need to find their psychic beings? To find out truly who they are? To find out what their roles are, why they are here? ... You just let yourselves drift. You even complain when things aren’t easy enough! You just take things as they come. And sometimes, should an aspiration arise in you and you encounter some difficulty in yourself, you say, ‘Oh, Mother is there! She’ll take care of it for me!’ And you think about something else.
 
                  - The Mother, Mother's Agenda, Volume -1 

பக்தி, ஆர்வம் (aspiration) என்பதற்கு மனித சக்தி அளவுகடந்து தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பலன் பெற அதைப் பயன்படுத்தாமல், இறைவனை அடைய அதைத் திருப்பினால் அது ஆர்வமாக மாறி, எந்நேரமும் மனம் இறைவனை நினைக்கும்.

ஆர்வம் முதிர்ந்தால், உடலெல்லாம் உள்ள சக்தி உள்ளத்தில் சேர்ந்து பக்தியாகி ஆர்வம் கனலாக மாறும். பக்தி சிறந்தால் நெஞ்சம் திறந்து,

அதன் பின்னுள்ள சைத்தியம் வெளிப்படும். சைத்தியம் இறைவனை மட்டும் நோக்கிப் போவது என்பதால், நம் ஜீவன், வெளிப்பட்ட சைத்தியத்தால் வழி நடத்தப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும். பக்தி யோகம் பக்க லயம் தேவை.

லயித்துவிட்டால் நெஞ்சில் கனலெழுந்து நெஞ்சமே சிவந்துவிடும். ஞானியின் முகம் தேஜஸ் நிரம்பியுள்ளதுபோல், பக்தன் நெஞ்சம் சிவந்து காணப்படும்.

இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும், என் விருப்பம் வேண்டாம், என்பது மேல் மனத்திலிருந்து ஆழத்திற்குப் போக உதவும் சக்தி வாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றால், அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் சக்தி வாய்ந்ததாக அமையும்

Tuesday, 5 May 2015

Message of the day : Education - கல்வி


The business of both parent and teacher is to enable
and to help the child to educate himself, to develop his own intellectual, moral, aesthetic and practical capacities and to grow freely as an organic being, not to be kneaded and pressured into form like an inert plastic material.” 
 
- (Sri Aurobindo, The Human Cycle)

Image Courtesy :www.mirapuri-enterprises.com





-Words of the Mother - The Mother

                                                   ------------------------

குழந்தைக்கு கவனிக்கும் திறமையை வளர்த்தால், தானே குழந்தை வாழ்வைக் கவனித்துக் கற்கும் என்பது அன்னை முறை.

 
மாணவன் ஆன்ம விழிப்புப் பெற்றால், அதிலுள்ள சிரமம் பெரும்பாலும் அழியும். இளம் மாணவர்களை ஆன்மீக கட்டுப்பாட்டை மேற்கொள்ளும்படி கேட்க முடியாது. ஆனால் அவர்களை சத்தியத்தை மேற்கொள்ளும்படிக் கேட்கலாம். கல்லூரி மாணவன், பள்ளி மாணவன் சத்தியம் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று முடிவு செய்தால், அவனால் எவருக்கும் தொந்தரவில்லை.

சத்தியம் சத்தியமாக ஜெயிக்கும்.
மாணவன் சத்தியத்தை மேற்கொண்டால் பரீட்சை
சிம்மசொப்பனமாக இருக்காது. 

இது உயர்ந்த முறை. அதிகப் பலன் தரும் முறை.
ஒரு மாணவன் சத்தியமே தன் வழி என சத்தியத்தை வழிபட்டால்,
  • அவனது புத்திசாலித்தனம் வளரும்.
  • அதிகமாக விளையாடினால், பாடம் அதிகமாகப் புரியும்.
  • பிறரால் படிப்புக்குத் தொந்தரவு வாராது.
  • இயல்பாக இத்தனை நாளிருந்த சிரமங்கள் நாம் நம்ப முடியாத அளவில் கரைந்து மறையும்.
  • பரீட்சை கடுமையாக இருக்காது.
-கர்மயோகி அவர்களின் அன்னை கல்வி  என்ற கட்டுரையில் இருந்து ..

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.