இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Monday, 11 May 2015

Message of the Day: Surrendering our problems to the Divine- நம் பாரத்தை அன்னையிடம் சேர்ப்பதெப்படி?




"How can a problem be solved when one doesn’t have the necessary knowledge?"

 How can a problem be solved when one doesn’t have the necessary knowledge? And the unfortunate thing is that man believes that he has to resolve all the problems of his life, and
he does not have the knowledge needed to do it. That is the source, the origin of all his troubles—that perpetual question,
“What should I do?...” which is followed by another one still more acute, “What is going to happen?” and at the same time, more or less, the inability to answer. That is why all spiritual disciplines begin with the necessity of surrendering all responsibility and relying on a higher principle. Otherwise peace is impossible.

Image Courtesy :www.mirapuri-enterprises.com


And yet, consciousness has been given to man so that he can progress, can discover what he doesn’t know, develop into what he has not yet become; and so it may be said that there
is a higher state than that of an immobile and static peace: it is a trust total enough for one to keep the will to progress, to preserve the effort for progress while ridding it of all anxiety, all

care for results and consequences.
-Questions and Answers 1957 - The Mother

கணவனுக்குப்  பொறுப்பில்லை;  பிள்ளைக்குப்  படிப்பு  வரவில்லை; வைத்த    நகைகளை    மீட்கவில்லை;    முதலாளியின்    முன்கோபம் என்னைப்    பெரிதும்    பாதிக்கிறது;    வாழ்க்கை    பிரச்சினையாக ஆரம்பித்து,    சிக்கலாக    மாறி,    வேதனையாகவும்,    நரகமாகவும் ஆகிவிட்டது;   ஏன்   பொழுது   விடிகிறது   என்று   கண்ணில்   ஜலம் வருகிறது;   இன்றைய   பொழுது   எப்படிப்   போகும்   என்று   கேள்வி எழுகிறது;  என்பன  போன்று  சிலருக்கு  வாழ்க்கை  அமைந்து  விடும். அவர்களுக்கு  கதி  மோட்சம்  இல்லையா?  ஒரு  கணம்  சிறப்பு  வாராதா? அன்னை   அவர்களுக்கெல்லாம்   ஏதாவது   வழி   காட்டுவாரா?
  • பாரத்தை     நாம்     சுமப்பதற்குப்     பதில்,     அன்னையிடம் கொடுத்துவிட்டால்  இனி  பாரம்  நமக்கில்லை.  அன்னை  பாரத்தை சுமப்பதுடன்,   அந்தப்   பிரச்சினையையும்   தீர்த்து   விடுவார். பாரத்தை   அன்னையிடம்   சேர்ப்பதெப்படி?
  • நகை   பாங்கிலிருப்பது   அடிக்கடி   நினைவில்   உறுத்துகிறது என்றால்,  நகையை  நாம்  நினைத்துக் கொண்டிருப்பதற்குப்  பதில், மனதிலிருந்து   நகையை   (பிரச்சினையை)   ஒதுக்கி,   விலக்கி, அன்னையை   நினைவுகூர   வேண்டும்.   அதன்   பலனாக   மனம் லேசாகிவிடும்.   பிரச்சினை   தீர்ந்துவிடும்.
  • ஒரு   பிரச்சினை   ஒரு   நாளைக்கு   40   முறை   நினைவில்   வந்து கிலேசமடைந்தால்  முதல்  நாள்  அன்னையை  10  முறை  நினைக்க  முடிகிறது.
  • நாள்   செல்லச்   செல்ல  10 நாள்   கழித்து   ஒரு நாளைக்கு   அன்னையை   40   முறையும்   நினைக்க   முடிகிறது. அதாவது      பிரச்சினையை      முழுவதும்      அன்னைக்கு மாற்றியாகிவிட்டது.   அன்று   பிரச்சினை   முழுவதும்   தீரும்.
என்று  ஒரு  பிரச்சினை  மனதில்  தோன்றும்  ஒவ்வொரு  முறையும் அன்னையை    நினைவுகூர    முடிகிறதோ,    அன்று    பிரச்சினை தீர்ந்துவிடும்.
-கர்மயோகி அவர்களின்  பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல் என்ற கட்டுரையில் இருந்து ..

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.