இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 7 May 2015

Message of the Day: Aspiration - ஆர்வம்


......But actually, to tell you the truth, I think your lives are so easy that you don’t exert yourselves very much! How many among you have truly an INTENSE need to find their psychic beings? To find out truly who they are? To find out what their roles are, why they are here? ... You just let yourselves drift. You even complain when things aren’t easy enough! You just take things as they come. And sometimes, should an aspiration arise in you and you encounter some difficulty in yourself, you say, ‘Oh, Mother is there! She’ll take care of it for me!’ And you think about something else.
 
                  - The Mother, Mother's Agenda, Volume -1 

பக்தி, ஆர்வம் (aspiration) என்பதற்கு மனித சக்தி அளவுகடந்து தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பலன் பெற அதைப் பயன்படுத்தாமல், இறைவனை அடைய அதைத் திருப்பினால் அது ஆர்வமாக மாறி, எந்நேரமும் மனம் இறைவனை நினைக்கும்.

ஆர்வம் முதிர்ந்தால், உடலெல்லாம் உள்ள சக்தி உள்ளத்தில் சேர்ந்து பக்தியாகி ஆர்வம் கனலாக மாறும். பக்தி சிறந்தால் நெஞ்சம் திறந்து,

அதன் பின்னுள்ள சைத்தியம் வெளிப்படும். சைத்தியம் இறைவனை மட்டும் நோக்கிப் போவது என்பதால், நம் ஜீவன், வெளிப்பட்ட சைத்தியத்தால் வழி நடத்தப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும். பக்தி யோகம் பக்க லயம் தேவை.

லயித்துவிட்டால் நெஞ்சில் கனலெழுந்து நெஞ்சமே சிவந்துவிடும். ஞானியின் முகம் தேஜஸ் நிரம்பியுள்ளதுபோல், பக்தன் நெஞ்சம் சிவந்து காணப்படும்.

இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும், என் விருப்பம் வேண்டாம், என்பது மேல் மனத்திலிருந்து ஆழத்திற்குப் போக உதவும் சக்தி வாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றால், அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் சக்தி வாய்ந்ததாக அமையும்

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.