Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Monday, 4 May 2015
Thursday, 30 April 2015
Message of the Day : அருள் கர்மத்தை கரைக்கும் - Divine Grace completely contradicts Karma
Question : You have said here that we are “tied to the chain of Karma”, but then sometimes when the Divine Grace acts, that contradicts...
An example may be given that is
-Words of the Mother - The Mother ‘தலைவிதி மாற்ற முடியாத ஒன்றன்று; கர்மவினையை விட்டு ஒழிக்கலாம். அதன் பிடியிலிருந்து தப்ப முடியும்’ என்று அன்னை கூறுகின்றார். அன்னை என்பது பேரொளி; இறைவனின் சக்தி; சக்தி மிக்க ஒளி. ஒருவர் அன்னையை மனத்தில் தெய்வமாக உணர்ந்து ஏற்றுக்கொண்டவுடன், அப்பேரொளியின் ஒரு பொறி அவருடைய ஆன்மாவை வந்தடைந்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றது. இதை அன்னையே சொல்லி இருக்கின்றார். கர்மப் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது முக்காலும் உண்மை. அன்னையின் அருள் அக்கருமப் பலனை முழுவதுமாகக் கரைத்துவிடும் என்பது அன்னையின் அன்பர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவபூர்வமான புதிய உண்மை. அன்னையைத் தெய்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்பவன், கடவுள்களை எல்லாம் சிருஷ்டித்த பரம்பொருளை தன் ஆத்மாவில் பிரதிஷ்டை செய்கின்றான். பரம்பொருளான இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலத்தால் ஏற்பட்ட கர்மாவுக்கும் அப்பாற்பட்டவன். பரம்பொருளின் ஆதீனத்தில் கர்மம் கரைந்து போய்விடுகின்றது பாவத்தைச் செய்த பின்பு நாம் அதை விட்டாலும், அதன் பலன் நம்மைத் தண்டிக்காமல் விடாது. அதுவே ‘கர்ம வினை’எனப்படுவது. நாம் பாவத்தை விட்ட பின்பு, பாவத்தால் தொடரும் வினையை அழிக்க வல்லது அன்னையின் அருள். அவ்வகையில் துறவறத்தின் சிறப்பை இல்லறத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பது அன்னையின் வழி. இப்பெருமையும், திறமையும், கனிவும் நம் மரபில் இல்லாத சிறப்புகளின் பிறப்புகளாகும். -கர்மயோகி அவர்களின் . விதிக்கு விதி செய்யும் அன்னை என்ற கட்டுரையில் இருந்து .. |
Tuesday, 28 April 2015
Message of the Day: Devotion - பக்தி
"Sincere devotion is much more effective than the Ganges water."
A devotion that keeps concentrated and silent in the depths of the heart but manifests in acts of service and obedience, is more powerful, more true, more divine, than any shouting and weeping devotion. -Words of the Mother - The Mother அன்பர்களுக்குத் தேவையானவை மூன்று. அவை: (1) நம்பிக்கை, (2) பக்தி, (3) இடையறாத தெய்வச் சிந்தனை. ‘நாம் வேண்டும் என்று கேட்டதைத் தவறாமல் கொடுக்கும் ஆற்றலுடையது அன்னையின் அருள்’ என உறுதியாக நம்புவது நம்பிக்கை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அன்னையை மனத்தால் பணிந்து செய்வது பக்தி. மனத்தை எப்பொழுதும் அன்னையிடம் பதித்து வைத்திருப்பது இடையறாத தெய்வச் சிந்தனை. உதாரணமாக ‘திருமணம் செய்ய வேண்டும்’ என முடிவெடுக்கும்போது, ‘இந்தத் திருமணம் எவ்விதத் தடையுமின்றி இனிதே முடிய வேண்டும்’என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்து, ‘இந்தக் கோரிக்கையை அன்னை ஏற்றுக் கொண்டு, அதனை நிச்சயம் நிறைவேற்றிவைப்பார்’ என்ற உறுதிப்பாட்டை அடைவது நம்பிக்கையாகும். இந்த உறுதிப்பாட்டைக் குலைக்கும் விதத்தில் அவ்வப்போது சந்தேகங்கள் எழும். அந்தச் சந்தேகங்களுக்கு இடம் கொடாமல், ‘அவை ஏன் ஏற்பட்டன?’ என்பதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை அறவே நீக்கிவிட வேண்டும். அவற்றை ஒவ்வொரு தடவையும் நெஞ்சை விட்டு நீக்கும்போது, அந்த உறுதிப்பாடு மேலும் மேலும் வளர்ந்து நம்பிக்கையை முழுமையாக்கிவிடுகின்றது. முதல் கட்டத்தைத் தொடர்ந்து பல கட்டங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு கட்டத்தையும் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் அன்னையின் திருவருளைத் துணையாகக் கொண்டு செயல்படுவது பக்தியாகும். ‘பஜ்’ என்ற சொல்லிலிருந்து வந்தது ‘பக்தி'. ‘பஜ்’ என்பது ‘பணிதல்’ எனப் பொருள்படும். ஆகவே ‘பக்தி’ எனப்படுவது ‘பணிந்து செயல்படுதல்’ என்பதைக் குறிக்கும். அன்னையைப் பணிந்து செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் பக்தியை வளர்க்கும் செயல்களாகும். ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளோ அல்லது சிக்கல்களோ ஏற்படலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் திருவருளின் துணையை நாடாமல் நாம் செயல்பட்டிருப்பதே அவை ஏற்படுவதற்குக் காரணமாகும். இந்தக் காரணத்தை உணர்ந்தவுடன், ‘நான் செய்தது தவறு’ என்று மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நடுவில் வந்த சிக்கலோ அல்லது இடையூறோ விலகிப்போகும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், மேற்கூறிய சிக்கல்களினால் மனம் குழம்பி, சந்தேகம் எழுந்து, நம்பிக்கை உறுதி இழந்து அழிந்துபோகும் நிலை ஏற்படும். அதற்கு மாறாக, மேற்கூறிய முறைப்படி சிக்கல்களை விலக்கிக் கொண்டால், சந்தேகமும் எழாது; நம்பிக்கையும் தொடர்ந்து உறுதிப்பட்டுவிடும். பக்தியினால் நம்பிக்கை மேன்மேலும் வலுவடைந்து, முழுமையாகிவிடுகின்றது. ஆகவே, நம்பிக்கையும், பக்தியும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை என்பதை நாம் உணர வேண்டும். -கர்மயோகி அவர்களின் நம்பிக்கை, பக்தி, தெய்வச் சிந்தனை என்ற கட்டுரையில் இருந்து .. |
Thursday, 23 April 2015
Message of the Day - Experience the Divine presence - செய்யும் செயல்களில் அன்னை வெளிப்படுவது எவ்வாறு?
Once one begins to live in the presence of the Divine, one does not question any longer. It carries its own certitude—one feels, one knows, and it becomes impossible to question. One lives in the presence of the Divine and it is for you an absolute fact. Till then you ask, because you do not have the experience, but once you have the experience, it has such an authority that it is
One who says, “I think I live in the presence of the Divine but I am not sure”, has not had the true experience, for as soon as one has the inner shock of this experience, no more questioning is possible. It is like those who ask, “What is the divine Will?” As long as you have not glimpsed this Will, you cannot know. One may have an idea of it through deduction, inference, etc., but once you have felt the precise contact with the divine Will, this too is not disputable any longer—you know. -Questions and Answers - The Mother நாம் செய்யும் செயலில் அன்னை வெளிப்படும் விதம் பற்றி கர்மயோகி அவர்கள் ..... ஒருவர் அன்னையை நாள் முழுவதும் நினைவுகூர்ந்தால் அவர் அகவாழ்வு ஒளி பெறும்; சிறக்கும். ஆனால் இக்காரணத்தாலேயே அன்னை செயல்பட ஆரம்பித்துவிடமாட்டார். ஏராளமாகப் படிக்கும் பையனுக்கு அறிவு அதிகமாகும். ஆனால் அப்படிப்பட்ட படிப்பால் ஒரு பட்டத்தை எடுத்துவிட முடியாது. பட்டம் பெற அதற்குரிய புத்தகங்களை ஆழ்ந்து பயில வேண்டும். அதே போல் அன்னையை இடைவிடாது நினைத்தால் மனநிலையை உயர்த்துமே தவிர, எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் அன்னையை வெளிப்படுத்த உதவாது. ஒரு செயலில் அன்னை வெளிப்பட வேண்டுமானால், அச்செயல் அன்னையின் சக்தியால் நிரம்பி வழிய வேண்டும். நம் வாழ்வு பல தரப்பட்டது. ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, சொந்த வேலை என பல வகைகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றும் தனித்தனியானது போல் தோன்றும் அளவுக்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு வேலையிலும் பல பகுதிகள் உள்ளன. கடிதம் எழுதுவது என்பது சொந்த வேலையில் ஒரு பகுதியானாலும், அதுவே ஒரு தனித்தன்மையுடைய முழு வேலை போலிருக்கிறது. குளிப்பது என்பதை ஒரு குறிப்பிட்ட சிறு வேலை எனலாம். அன்றாட வாழ்வில் அதுபோன்ற பல்வேறு வேலைகள் உள்ளன. சாப்பிடுதல், குளித்தல், தூங்குதல், படித்தல், விருந்தினரை வரவேற்றல், நட்பு, உறவு, வேலையிடுதல், கடைக்குப் போவது, பொழுதுபோக்கு, புதிய துணி வாங்குவது, விசேஷம், பயணம் ஆகியவை அத்தன்மையானவை. நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவுகூர்ந்தால் அன்னை அச்செயலில் வெளிப்படுவார். கடைக்குப் போவதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சோதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன் தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், போய் வந்தவுடன் அன்னை அச்செயல் முழுவதுமாகப் புதுமையை நிரப்பித் தம் முத்திரையிட்டது தெரியும். -கர்மயோகி அவர்களின் பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் என்ற கட்டுரையில் இருந்து .. |
Tuesday, 21 April 2015
Message of the Day: Ignorance is not an excuse - நம் அறியாமை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது?
-Questions and Answers - The MotherAnd when I speak of making a mistake, ignorance is not an excuse; for whether you touch the fire through ignorance or knowing it, the difference is rather in favour of the stupidity of touching it when one knows, for one can take precautions. But when one touches the fire through ignorance, without knowing, one burns oneself completely. And then one can’t tell Nature: “Oh! I should not have been burnt, for I did not know that it burnt.” It burns, nobody will listen to you! சத்தியஜீவியம் அறியாமையை விலக்காது. அதனுள் ஊடுருவிச் சென்று அறியாமையை அறிவாக மாற்ற முயலும்.
நாம் அடிக்கடி அறியாமையால் செயல்படுகிறோம் என்ற தெளிவே உயர்ந்த அறிவுடைமை.
அறிவுடைமையை விளக்கியது போல் அறியாமையையும் விளக்கலாம். அறியாமை: 1. ஒரு பொருளின் தன்மை என்ன என்று தெரியாமல் அதை வேறொன்றாகக் கருதி அதை நம்புவது. 2. தனக்குத் திறமையில்லாத விஷயத்தில் ஒரு காரியத்தைச் செய்ய முற்படுதல். 3. ஒரு வேலைக்குரியதில் முக்கியமான ஒன்றிரண்டு குறையாக இருக்கும்பொழுது, அவ்வேலையை ஆரம்பிப்பது. 4. தன் உடலின் திறமையை அறியாதது. 5. தன் திறமையின் வரையறையை அறியாதது. 6. இரு விஷயங்களிடையே இல்லாத தொடர்பை இருப்பதாகக் கொள்வது. 7. இரு விஷயங்களிடையே உள்ள தொடர்பை அறியாமல் செயல்படுவது. 8. தான் வெற்றி பெறாத விஷயத்தில் மற்றவருக்குப் புத்திமதி சொல்வது. 9. பொதுவிதி குறிப்பான இடத்தில் செல்லும் என நினைப்பது. 10. ஒரு இடத்தில் பலித்ததால், எல்லா இடத்திலும் பலிக்கும் எனக் கருதுவது. 11. தோற்றத்தை விஷயமாகக் கருதுவது. 12. தோற்றத்திலுள்ள அறிவைக் கொண்டு விஷயத்தைப், பூர்த்தி செய்ய முனைவது. 13. மற்றவருக்கு நாம் செய்யப் பிரியப்படாததை அடுத்தவர் நமக்குச் செய்வார் என நினைப்பது. 14. பெரிய இரகஸ்யத்தை சிறிய உறவை நம்பிக் கொடுப்பது. 15. எதிரி தன் உயர்வுக்குப் பாடுபடுவான் என்று எதிர்பார்ப்பது. 16. ஸ்தாபனத்தை இலட்சியத்திற்குப் பதிலாகப் போற்றுவது. 17. மனிதன் மாறுவான் என எதிர்பார்ப்பது. 18. வாழ்வில் நியாயம் கிடைக்கும் என்ற நினைவு. 19. நன்றியறிதலை எதிர்பார்ப்பது. 20. அறிவுடையவன் என்பதால், தான் நஷ்டப்படும்படி நடப்பான் என்று கருதுவது. 21. அதிர்ஷ்டம் வரும் எனக் காத்திருப்பது. 22. எப்படியாவது விஷயம் கூடிவரும் என்ற நம்பிக்கை. 23. அனுபவிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை மனிதன் விட்டு விடுவான் என்ற நம்பிக்கை. 24. சிரமப்பட்டுச் சாதிக்கவேண்டிய வாய்ப்பை மனிதன் வரவேற்பான் என்ற எண்ணம். 25. தனக்கு அதிகாரமில்லாத இடத்தில் தன் கீழிருப்பவர்கள் விஸ்வாசமாக இருப்பார்கள் என்ற நினைவு. 26. பணம்,பதவியைத் தாண்டி பண்பு செயல்படும் என்ற அறிவு. 27. நம் குறையை பிறரறியார் என்ற கற்பனை. 28. விஷயம் என்று எழுந்தால் நண்பரும் எதிரியாவார், அனைவரும் எதிரியே என்று புரியாதது. -கர்மயோகி அவர்களின் அறிவுடைமை என்ற கட்டுரையில் இருந்து .. |
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
