இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 10 February 2015

Message of the Day: ஆசை என்பது அடங்கக் கூடிய குதிரையே


Mother says:

The Mother :                                   



A wild horse can be tamed but one never puts a bridle on a tiger. Why is that? Because in the tiger there is a wicked, cruel and incorrigible force, so that we cannot expect anything good from him and have to destroy him to prevent him from doing harm.
கட்டுப்படாத காட்டுக் குதிரைக்கு கடிவாளமிடுவர். ஆனால் புலிக்கு அவ்விதம் இடுவதில்லை. ஏனெனில் புலியின் இயற்கையான குணமே மிருகத்தனமானது. அதனிடம் இருந்து நல்லவற்றை எதிர்பார்க்க முடியாது, அதனிடம் இருந்து நமக்கு ஏற்படும் பாதிப்பை விலக்கவே நாம் முயற்சிக்கிறோம். கட்டுபாடாத காட்டுக் குதிரையை சிறிது பொறுமையும், முயற்சியும் இருந்தால் அடக்கி விடலாம். பழகிய சிறிது காலத்தில், அது நமது கட்டளைக்கு கட்டுப்படுகிறது, ஏன் நம்மிடம் அன்பு செலுத்தக் கூட அது ஆரம்பித்து விடுகிறது. 

மனிதர்களிலும் இத்தகைய அடக்க முடியாத ஆசைகளைக் காணமுடிகிறது. சில குணங்கள், ஆசைகள் மிகவும் கடுமையாக உள்ளதைக் காணலாம். ஆனால் இவை புலியின் குணத்தினைப் போன்று கட்டுப்படுத்த முடியாதவை அல்ல. உங்களின் ஆசைகளுக்கு நீங்களே சுயக்கட்டுப்பாடு என்ற கடிவாளத்தினை இடுவதன் மூலம், கட்டுப்படும் குதிரையினைப் போல நமது ஆசைகளையும், குணஇயல்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறார் அன்னை.
But the wild horse, on the other hand, however unmanageable and skittish he may be to begin with, can be controlled with a little effort and patience. In time he learns to obey and even to
love us, and in the end he will of his own accord offer his mouth to the bit that is given to him.
In men too there are rebellious and  unmanageable desires and impulses, but these things are rarely uncontrollable like the
tiger. They are more often like the wild horse: to be broken in they need a bridle; and the best bridle is the one you put on them yourself, the one called self-control.

Photo Courtesy :   .Mirapuri-Enterprises.com

From Words of the Mother
தன்னைச் சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களுக்கு அறிவுரையோ, கண்டிப்போ தேவைப்படாதுஏனென்றால் அந்தச் சுயக்கட்டுப்பாடு பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக உள்ள உணர்ச்சி வயப்பட்ட செயல்பாட்டைத் தடுக்கிறது.
கட்டுப்பாடு வெளியிலிருந்து வருகிறது.

மனம் உணர்வைக் கட்டுப்படுத்துவது சுயக் கட்டுப்பாடு.

உணர்வே தான் கட்டுப்பட முன்வருவது உயர்ந்த கட்டுப்பாடு.

வெளியிலிருந்தாவது, உள்ளிருந்தாவது நம்மீது திணிக்கப்படுவது கட்டுப்பாடு.

அனுபவிப்பதை நாமே நாடுகிறோம். கட்டுப்பாடும், அனுபவமும் ஒரே பலனை நாடுகின்றன.

சக்தி, திறமை, அறிவு குறைவாக இருப்பதால் நாம் கட்டுப்பாட்டை நாடுகிறோம்.

 - கர்மயோகி அவர்களின் பல்வேறு கட்டுரைகளில் இருந்து..


Monday, 9 February 2015

ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பது என்றால் என்ன?

ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பது என்றால் என்ன? விவேகானந்தர் பசியோடு ரயில்வே ஸ்டேஷனில் தூங்கியபொழுது கிருஷ்ணன், பலகாரக்கடை வியாபாரி பகல் தூங்கும்பொழுது அவன் கனவில் வந்து, என் பக்தன் பசியோடிருக்கிறான், அவனுக்குப் பக்ஷணம் எடுத்துக் கொண்டு ஓடு என்றார். அவனும் ஓடி வந்தான். விவேகானந்தருடைய ஆன்மா செயல்பட்டு உணவை அவரிடம் கொண்டுவந்தது. அதுவே வாழ்க்கை நியதியானால் மனிதவாழ்வு, தெய்வீகவாழ்வாகும். விஷம் சாப்பிட்டால் உடல் இறந்துபோகும் என்ற சட்டம் மீரா விஷயத்தில் பலிக்கவில்லை. மீராவின் பக்திக்குள்ள சக்தி விஷத்தின் சக்தியைவிட அதிகமாகி பக்தி, உடலைக் காப்பாற்றியது. உணர்வு, உடலின் வாழ்வை - விஷத்தை மீறி - நிர்ணயிக்கிறது. மந்திரவாதி உச்சரிக்கும் மந்திரம் பாம்பின் விஷத்தால் இறந்து கொண்டிருப்பவனைத் தடுக்கிறது.

மனத்தின் மந்திரசக்தி உடலின் வாழ்வை - பாம்பின் விஷத்தை மீறி - நிர்ணயிப்பதுபோல் ஆன்மா உடலை (ஜடத்தை) நிர்ணயிக்க வேண்டும். தியானத்தில் ஆன்மாவில் எழும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்தால் ஆன்மா செயல்படுவதாக அர்த்தம்.

பிரார்த்தனை பலிப்பதே ஆன்மா ஜடத்தை ஆள்வதாகும். ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பதன்முன், உணர்வை நிர்ணயிக்க வேண்டும், அதற்குமுன் எண்ணத்தை நிர்ணயிக்க வேண்டும். எண்ணம் கட்டுப்படுவது, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதாகும்.

- யோகா வாழ்க்கை விளக்கத்தில் கர்மயோகி அவர்களின் கருத்து.

Thursday, 5 February 2015

Message of the Day: அன்னை மெய் சொல்பவர்க்கு ஒளிமயமான பாதையை வழங்குகிறார்

Sri Aurobindo says:
The Divine is that from which all comes, in which all lives, and to return to the truth of the Divine now clouded over by Ignorance is the soul’s aim in life.

What the Divine wants of you is
that you should grow in the Truth and the higher Nature, reject the false and the lower Nature.

Its realisation brings Bhakti, self-giving, surrender, turning of all the movements
Godward, discrimination and choice of all that belongs to the Divine Truth, Good, Beauty, rejection of all that is false, evil, ugly, discordant, union through love and sympathy with all
existence, openness to the Truth of the Self and the Divine.
-   From Letters on Yoga by Sri Aurobindo
Image Courtesty: www.Mirapuri-Enterprises.com



சத்தியம் பெரியது.
சத்தியம் எரிக்கும்.
நம் பொய்யை சத்தியம் எரிக்கும்.
சத்தியம் நித்தியம்.
அன்னை மெய் சொல்பவர்க்கு (Sunlit path) ஒளிமயமான பாதையை வழங்குகிறார்.
ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் செப்பனிட்ட பாதை நமக்கு இனிமையானது.
கஷ்டம் அவர்களைக் கடந்து போகும் பொழுதுதான்.
சத்தியம் சத்திற்குப் புறம்.
ஜோதி சத்தியத்தின் பகுதி.
ஆன்மீக ஒளிமுன் நடுப்பகல் காரிருளாகத் தோன்றும்.
ஆன்மீக இருட்டுமுன் நள்ளிரவு ஒளிமயமாகும்.
சூரியனுடையது ஒளியன்று. அது ஆன்மீக ஒளியின் பிரதிபலிப்பு.
உள்ளே சூரியன் உதித்தால் உலகமே ஜோதியாகும்.
சத்தியம் பேசி, சத்தியத்தை நினைத்து, சத்தியமாய் வாழ்ந்தால், அகத்தில் சூரியன் உதயமாகும். அது ஞானோதயம், ஆன்மீக சூரியோதயம்.

- கர்மயோகி அவர்களின் அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு 
  என்ற கட்டுரையில் இருந்து..


Tuesday, 3 February 2015

Message of the Day: திறமை கர்மத்தினை சேர்க்கும், சரணாகதி கர்மத்தினை அழிக்கும்


Mother says:

The Mother :                                   

Question :I have faith in my strength and believe I am capable of doing all the work.

Mother's Answer : It is not in your own strength that you should have faith. It is in the divine force, which works in all who are consecrated to the Divine and sustains them in their action.


From More Answers from The Mother

உலக வாழ்வு கர்மத்திற்குட்பட்டது. மனிதன் தன் செயலால் கர்மத்தையும், திறமையையும் வளர்க்கிறான். (faith) தெய்வ நம்பிக்கை கர்மத்திலிருந்து அவனை விடுவிக்கிறது. திறமையால் முன்னேறுகிறான். கர்மம் தடையாக இருந்ததைப்போல் திறமையும் அருளுக்குத் தடை என உணர்ந்தால், திறமையை, சரணம் செய்ய முன் வந்தால் (surrender) அருள் பேரருளாகி முடிவான பலனை, முதலிலேயே கொடுக்கிறது. உழைப்பு (work) கர்மத்தைச் சேகரிக்கும். நம்பிக்கை (faith) கர்மத்தைக் கரைக்கும். (surrender) சரணாகதி திறமையை விலக்கி, அருளைப் பேரருளாக்கி, முடிவான பலனை முதலிலேயே அளிக்கவல்லது.
அன்னையின் அவதாரம் கர்மத்தைக் கரைக்கும். அவர்களைச் சரணடைவதால் முடிவான பலன், முதலிலேயே கிடைக்கும். அன்னையை ஏற்றுக்கொண்டால், கர்மம் கரையும். நம் திறமையை ஏற்க மறுத்தால் பேரருள் செயல்படும், நம்பிக்கை கர்மத்தை அழிக்கும், சரணாகதி பேரருளை அழைக்கும்.

இறைவன் மீது நம்பிக்கையின்றி, (faithless work) உழைப்பை நம்பினால், ஒருபக்கம் திறமையுடன் மறுபக்கம் கர்மமும் சேரும். நம்பிக்கையை இறைவன் மீது வைத்து, உழைப்பைக் கருவியாகக் கருதினால் (work in faith)அருள் செயல்படும், கர்மம் கரையும். நம் திறமையையும், அதன் மீதுள்ள நம்பிக்கையையும் இறைவனுக்குச் சரணம் செய்தால் (surrender) பேரருள் செயல்பட்டு, முடிவான பலன் முதலிலேயே வரும்.




- கர்மயோகி அவர்களின் முடிவான பலன்
  என்ற கட்டுரையில் இருந்து..


Monday, 2 February 2015

Prayer of the Day: Peace, peace upon all the earth!


Mother's Prayer:

The Mother : 


 PEACE, peace upon all the earth!
May all escape from the ordinary consciousness and be delivered from the attachment for material things;may they awake to the knowledge of Thy divine presence, unite themselves with Thy supreme consciousness and taste the plenitude of peace that springs from it.

Lord, Thou art the sovereign Master of our being.
Thy law is our law, and with all our strength we aspire to identify our consciousness with Thy eternal consciousness, that we may accomplish Thy sublime work in each thing and at every moment.

Lord, deliver us from all care for contingencies, deliver us from the ordinary outlook on things. Grant that we may henceforth see only with Thy eyes and act only by Thy will. Transform us into living torches of Thy divine love.

With reverence, with devotion, in a joyful consecration of my whole being I give myself, O Lord, to the fulfilment of Thy law.

Peace, peace upon all the earth!

From Prayers and Meditations by the Mother

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.