Mother, on January 6 you said, “Give all you are, all you have, nothing more is asked of you but also nothing less.”What is meant by “all you have” and “all you are”?
ஸ்ரீ அன்னையிடம் ஒரு அன்பர் கேட்ட கேள்வி இது. நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ, உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதனை இறைவனுக்கு அர்பணித்து விடுங்கள் என்று அன்னை கூறிய கருத்திற்கான விளக்கத்தினை அன்னை இங்கு கூறுகிறார். கூறுகிறார்.
I am going to tell you in what circumstances I wrote this; that will make you understand: Someone wrote to me saying that he was very unhappy, for he longed to have wonderful capacities to put at the disposal of the Divine, for the Realisation, for the Work; and that he also longed to have immense riches to be able to give them, to put them at the feet of the Divine for the Work. So I replied to him that he need not be unhappy, that each one is asked to give what he has, that is, all his possessions whatever they may be, and what he is, that is, all his potentialities—which corresponds to the consecration of one’s life and the giving of all one’s possessions—and that nothing more than this is asked.
சுருக்கம் : ஸ்ரீ அன்னைக்கு ஒரு அன்பர் எழுதிய கடிதத்தை இங்கு நினைவு கூறுகிறார். இறைவனுக்கு அர்ப்பணிக்க தன்னிடம் அற்புதமான திறமைகளோ, திறன்களோ, அளவுகடந்த செல்வமோ இல்லை என்பதால் தான் மகிழ்ச்சியாக இல்லை என்று எழுதினர் அந்த அன்பர். இதற்கு பதிலாக அன்னை அந்த அன்பரிடம், ஒருவர் எதுவாக இருக்கிறாரோ, அவரிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவரது உடைமைகள், திறமைகள் அதை மட்டுமே அவர் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது அவரவர் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கூடிய பூரண சமர்ப்பணத்தோடு தொடர்புள்ளதே அன்றி, வேறு எதையும் இறைவன் கேட்கவில்லை என்கிறார் அன்னை.
What you are, give that; what you have, give that, and your gift will be perfect; from the spiritual point of view it will be perfect. This does not depend upon the amount of wealth you have or the number of capacities in your nature; it depends upon the perfection of your gift, that is to say, on the totality of your gift.
ஆன்மீக நோக்கில், உன்னுடைய எத்தனை திறமைகளை, எவ்வளவு செல்வத்தை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறாய் என்பது முக்கியம் அன்று. நீ இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் அந்த அன்புக் காணிக்கை எவ்வளவு சிரத்தையுடன், எவ்வளவு உண்மையான சமர்பணத்துடன் அளிக்கப்பட்டது என்பது மட்டும் தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் அன்னை. ஒரு சிறிய கதையையும் கூறுகிறார்.
I remember having read, in a book of Indian legends, a story like this. There was a very poor, very old woman who had nothing, who was quite destitute, who lived in a miserable little hut, and who had been given a fruit. It was a mango. She had eaten half of it and kept the other half for the next day, because it was something so marvellous that she did not often happen to get it —a mango. And then, when night fell, someone knocked at the rickety door and asked for hospitality. And this someone came in and told her he wanted shelter and was hungry. So she said to him, “Well, I have no fire to warm you, I have no blanket to cover you, and I have half a mango left, that is all I have, if you want it; I have eaten half of it.” And it turned out that this someone was Shiva, and that she was filled with an inner glory, for she had made a perfect gift of herself and all she had.
சுருக்கம் :ஒரு வயதான மூதாட்டி ஒருவர் வறுமையில் வாடுகிறார். கிடைத்த ஒரு மாம்பழத்தில், பாதியை உண்டு விட்டு மீதியை மறுநாள் சாப்பிடலாம் என்று வைக்கிறார். அன்று இரவே ஒரு வழிப்போக்கன், தான் தங்குவதற்கு இடமும், உணவும் கேட்கவே, "ஐயா, தாங்கள் குளிர்காய நெருப்பும், போர்த்திக் கொள்ள போர்வையும் தர என்னால் இயலவில்லை. பசியாற, பாதி மாங்கனிதான், அதுவும் நான் பாதியை உண்டுவிட்டு மீதி வைத்த கனிதான் உள்ளது. விருப்பமிருந்தால் உண்ணலாம்! "என்று கனிவுடன் கூறுகிறார். ஏழ்மையிலும், அவளது உண்மையான சமர்ப்பணத்தை, வழிப்போக்கனாக வந்த சிவபெருமான் ஏற்று அருள் பாலித்ததாக கதை முடிகிறது.
I read that, I found it magnificent. Well, yes, this describes it vividly. It’s exactly that. The rich man, or even The rich man, or even people who are quite well-off and have all sorts of things in life and give to the Divine what they have in surplus—for usually this is the gesture: one has a little more money than one needs, one has a few more things than one needs, and so, generously, one gives that to the Divine. It is better than giving nothing. But even if this “little more” than what they need represents lakhs of rupees, the gift is less perfect than the one of half the mango. For it is not by the quantity or the quality that it is measured: it is by the sincerity of the giving and the absoluteness of the giving.
இறைவனுக்குச் சமர்ப்பிப்பதில் அளவு முக்கியமில்லை, அது எத்தகைய உயர்ந்த சமர்ப்பணம் என்பதே முக்கியம் என்கிறார் ஸ்ரீ அன்னை.
|
No comments:
Post a Comment