இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Friday, 17 July 2015

Message of the Day - Mother's Will - நாம் அன்னையின் கருவி


Q: Sweet Mother, I feel that I am doing something against
Your will. This unknown thing is hostile and makes me
feel bad.


Mother says : I am not aware of anything special that is being done against my will. But you must not let yourself be disturbed. You must will to become more and more honest and sincere, and, for the rest, rely on the divine Grace.
.

-The Mother, Words of the Mother



நாம் நம்மை உடலாகக் கருதாமல், உணர்வாகப் புரிந்துகொள்ளாமல், அறிவால் செயல்படும் மனிதனாக அறியாமல், அன்னையின் சேவைக்காகச் சிருஷ்டிக்கப்பட்ட ஆன்மாவைத் தாங்கி உலவும் உடல் எனக் கொள்ள வேண்டும். நம்மை அன்னை என்று உணராதவரை, எவ்வளவுதான் நாம் அன்னையின் கருவி என நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும், நாம் அன்னையிலிருந்து வேறுபட்ட தனி நபர் என்பதும், ஊழியம் செய்யும் ஒருவரே என்பதும் நிலைத்து நிற்கும். அப்படியிருந்தாலும், தான் என்பதைத் தாண்டி வர முடியாவிட்டாலும், செய்யும் காரியங்களை நமக்காகச் செய்யாமல், அன்னைக்கே அர்ப்பணம் செய்து பின்னர் செய்ய வேண்டும். நம்முடைய விருப்பம் களையப்பட வேண்டும். சொந்தப் பலன் கருதும் மனப்பாங்கை அழிக்க வேண்டும். தனக்குரிய பலன் என்ற ஆசையைக் கரைக்க வேண்டும். பலனைக் கேட்கும் குணநலனுக்கு இடமில்லை. பரிசை நாடும் பாங்குக்கு இது அரங்கமில்லை. அன்னையின் திருப்தியே உனக்குரிய பலன். அன்னையின் இலட்சியம் பூர்த்தியாவதே, அதனால் அன்னை பெறும் நிறைவே உனக்குரிய பரிசு. மனித ஜீவியம், தெய்வ ஜீவியமாக மாறுவதே உனக்குக் கிடைத்த கைம்மாறு. அமைதியும், ஆனந்தமும், அவற்றிற்குரிய திறனும் உன் சொத்து. சேவையின் ஆனந்தமும், அகவாழ்வின் மலர்ச்சியில் பூரணமும், தன்னலமற்ற சாதகனுக்குப் போதுமான நிறைவு. பக்தனாயிருந்து, கருவியாக மாறி, அன்னையுடன் ஒன்றி, நாம் வேறு - அன்னை வேறு என்ற நிலையில்லை எனும்வரை மாறுதல்கள் ஏற்படும்.
-கர்மயோகி அவர்கள் 



No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.