இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Wednesday, 29 July 2015

Message of the Day - Life has a purpose - வாழ்வின் நோக்கத்தை தெரிந்து கொள்வோம்



Life has a purpose.
This purpose is to find and to serve the Divine.
 (நமது வாழ்வின் நோக்கமே, இறைவனைத் தேடி, அவனுக்குச் சேவை செய்வதுதான்.)



The Divine is not far, He is in ourselves, deep inside and above the feelings and the thoughts.
(இறைவன் தொலைவில் இல்லை. அவன் நமக்குள்ளே, ஆழ்ந்த  இடத்தில், நமது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மேலேயே இருக்கிறான்.)
With the Divine is peace and certitude and even the solution of all difficulties.Hand over your problems to the Divine and He will pull you out of all difficulties.
 (இறைவனில் மட்டுமே நாம் அமைதியையும், மெய்யுருதியையும், நமது அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வுகளையும் காண முடியும்.)
What you must know is exactly the thing you want to do in life. The time needed to learn it does not matter at all. For those who wish to live according to Truth, there is always something to learn and some progress to make.

(நீங்கள் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்பதனை மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகிறது என்பது ஒரு விஷயமே இல்லை. உண்மையைப் பின்பற்றி வாழ விரும்புவர்களுக்கு, எப்பொழுதுமே ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கும், முன்னேறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.)

-The Mother, Words of the Mother II



Thursday, 23 July 2015

Message of the Day - Offering - இறைவனிடம் சமர்ப்பித்தல்


  • The only offering that truly enriches is the one made to the Divine.

  • Offering: the placing of your entire being, with all its movements true and false, good and bad, right and wrong, before the Divine for transformation.
  • Offer sincerely to the Divine your obscurities and you will be able to receive the light.

  • The offering of our being we make to the Divine must be integral and effective.

  • Integral offering: the surest road to realisation.

  • Unconditional integral offering: the joy of offering oneself without asking for anything in return.



-The Mother, Words of the Mother II



Tuesday, 21 July 2015

Message of the Day - Supramental Light - சத்திய ஜீவிய ஒளி


What is the relation between the Supramental Light (சத்திய ஜீவிய ஒளி ) and
the solar light?
The solar light is the symbol of the supramental light.


We invoke the solar light, symbol of the Supreme Lord, to give us the Light of Truth.

Supramental light in the subconscient: essential condition for transformation.

Beyond all question it is the supramental light.
Do not tense yourself, be open, passively allow it to penetrate your body. It has the power to restore you to strength and health.



-The Mother, Words of the Mother III



Monday, 20 July 2015

Message of the Day - Egoism


Physical things are not necessarily more egoistic than mental or
emotional ones. Far from it. They are often much less so. Egoism does not lie in that, egoism lies in the inner attitude. It does not depend on the field in which you are concentrated, it depends on the attitude you have. It does not depend on what you do, it depends on the way you do it.

-The Mother, Words of the Mother



Friday, 17 July 2015

Message of the Day - Mother's Will - நாம் அன்னையின் கருவி


Q: Sweet Mother, I feel that I am doing something against
Your will. This unknown thing is hostile and makes me
feel bad.


Mother says : I am not aware of anything special that is being done against my will. But you must not let yourself be disturbed. You must will to become more and more honest and sincere, and, for the rest, rely on the divine Grace.
.

-The Mother, Words of the Mother



நாம் நம்மை உடலாகக் கருதாமல், உணர்வாகப் புரிந்துகொள்ளாமல், அறிவால் செயல்படும் மனிதனாக அறியாமல், அன்னையின் சேவைக்காகச் சிருஷ்டிக்கப்பட்ட ஆன்மாவைத் தாங்கி உலவும் உடல் எனக் கொள்ள வேண்டும். நம்மை அன்னை என்று உணராதவரை, எவ்வளவுதான் நாம் அன்னையின் கருவி என நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும், நாம் அன்னையிலிருந்து வேறுபட்ட தனி நபர் என்பதும், ஊழியம் செய்யும் ஒருவரே என்பதும் நிலைத்து நிற்கும். அப்படியிருந்தாலும், தான் என்பதைத் தாண்டி வர முடியாவிட்டாலும், செய்யும் காரியங்களை நமக்காகச் செய்யாமல், அன்னைக்கே அர்ப்பணம் செய்து பின்னர் செய்ய வேண்டும். நம்முடைய விருப்பம் களையப்பட வேண்டும். சொந்தப் பலன் கருதும் மனப்பாங்கை அழிக்க வேண்டும். தனக்குரிய பலன் என்ற ஆசையைக் கரைக்க வேண்டும். பலனைக் கேட்கும் குணநலனுக்கு இடமில்லை. பரிசை நாடும் பாங்குக்கு இது அரங்கமில்லை. அன்னையின் திருப்தியே உனக்குரிய பலன். அன்னையின் இலட்சியம் பூர்த்தியாவதே, அதனால் அன்னை பெறும் நிறைவே உனக்குரிய பரிசு. மனித ஜீவியம், தெய்வ ஜீவியமாக மாறுவதே உனக்குக் கிடைத்த கைம்மாறு. அமைதியும், ஆனந்தமும், அவற்றிற்குரிய திறனும் உன் சொத்து. சேவையின் ஆனந்தமும், அகவாழ்வின் மலர்ச்சியில் பூரணமும், தன்னலமற்ற சாதகனுக்குப் போதுமான நிறைவு. பக்தனாயிருந்து, கருவியாக மாறி, அன்னையுடன் ஒன்றி, நாம் வேறு - அன்னை வேறு என்ற நிலையில்லை எனும்வரை மாறுதல்கள் ஏற்படும்.
-கர்மயோகி அவர்கள் 



Tuesday, 14 July 2015

Message of the Day - Protection


Protection is active and can be effective only with faith on your
side, absolute and constant.
*
Let us give ourselves entirely and sincerely to the Divine and we
shall enjoy His protection.
*
Integral protection: that which can be given only by the Divine.
*
Psychic protection: the protection resulting from surrender to
the Divine.
*
Physical protection is possible only with a total surrender to the
Divine and the absence of all desires.
*
Concentrate more constantly on the Divine Presence and the
protection will be more spontaneous.
.

-The Mother, Words of the Mother






Monday, 13 July 2015

Message of the Day : Scepticism and doubt

Men believe that doubt is a sign of superiority, whereas it is really a sign of inferiority.

Scepticism and doubt are two of the greatest obstacles to
progress; they add presumptuousness to ignorance.


-The Mother, On Thoughts and Aphorisms





Tuesday, 7 July 2015

Message of the Day - Preparing oneself for Yoga - யோகசக்தி எளிய மனிதனின் வாழ்வில் வெளிப்படும் வகை

What is one to do to prepare oneself for the Yoga?

To be conscious, first of all.We are conscious of only an insignificant portion of our being; for the most part we are unconscious.

It is this unconsciousness that keeps us down to our unregenerate
nature and prevents change and transformation in it. It
is through unconsciousness that the undivine forces enter into
us and make us their slaves. You are to be conscious of yourself,
you must awake to your nature and movements, you must
know why and how you do things or feel or think them; you
must understand your motives and impulses, the forces, hidden
and apparent, that move you; in fact, you must, as it were,
take to pieces the entire machinery of your being. Once you are
conscious, it means that you can distinguish and sift things, you
can see which are the forces that pull you down and which help
you on. And when you know the right from the wrong, the true
from the false, the divine from the undivine, you are to act strictly
up to your knowledge; that is to say, resolutely reject one and
accept the other. The duality will present itself at every step and
at every step you will have to make your choice. You will have
to be patient and persistent and vigilant—“sleepless”, as the
adepts say; you must always refuse to give any chance whatever
to the undivine against the divine.

-The Mother, Questions and Answers





மகான் ஸ்ரீ அரவிந்தர் மகாசமாதி அடைந்தபொழுது அவருடைய உடலில் ஜகஜ்ஜோதியான பொன்னொளி பரவி மூன்று நாட்கள் வரையில் தங்கியிருந்து மறைந்தது. அவரது ஆயுட்காலத்தில் அவருடலில் இருந்திராத இப்பொன்னொளி மகாசமாதி அடைந்தபின், அவர் உடலில் புகுந்தது. மரணம், வறுமை, மூப்பு, நோய், துன்பம் போன்றவற்றையும், இவற்றிற்கெல்லாம் அடிப்படையான பொய்யையும் உலகிலிருந்து நிரந்தரமாகவும், அடியோடும் அழித்துவிடக் கூடிய சக்தி பெற்றது இப்பொன்னொளி. பன்னெடுங்காலம் தவமிருந்து தம் யோக முயற்சியால் இவ்வொளியைத்தான் உலகிற்குக் கொண்டுவரப் பாடுபட்டார் ஸ்ரீ அரவிந்தர்.

‘ஆத்மாவைப் பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து மோட்சம் அடையச் செய்வது’ என்பதே எல்லா யோகங்களின் இலட்சியமாகும். இறைவன் ஆத்மாவைச் சிருஷ்டித்தது உலகில் சத்தியத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைப்பதற்குத்தானே தவிர, அதிலிருந்து விடுபட்டுப் பிறப்பிடமான மோட்ச லோகத்தை வந்து அடைவதற்கன்று. பகவான் புத்தரும், சுவாமி விவேகானந்தரும் மோட்ச லோக வாசலை வந்தடைந்தபொழுது, இறைவனின் இலட்சியத்தை நினைவு கூர்ந்து, ‘உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் மோட்சம் கிடைக்கும்வரை, தங்களுக்கும் அந்த மோட்சம் தேவை இல்லை’ எனக் கூறி, வாராது போல் வந்த மோட்சத்தை மறுத்துவிட்டார்கள்.

ஸ்ரீ அரவிந்தரின் யோகம் ‘பூரண யோகம்’ எனப்படும். இதன் இலட்சியம் இறைவனின் பணியை உலகில் பூர்த்தி செய்வதாகும். அவ்வேலையைச் செய்வதற்கு விடுதலை அடைந்த ஆத்மா, உடலிலேயே தங்கியிருக்க வேண்டும். ஆகையால் இந்த யோகத்தில் ஆத்மாவுக்கு விடுதலை கொடுப்பதற்குமுன்பு, உடலுக்கும் மனத்துக்கும் பொய்ம்மையிலிருந்து பூரண விடுதலை அளிக்க வேண்டும். உடலையும் மனத்தையும் தூய்மைப் படுத்துவதன் வாயிலாக ஆத்மாவுக்குப் பிரகிருதியிலிருந்து விடுதலை கிடைக்க முயல்வது இந்த யோக நெறியின் நோக்கமாகும்.

எளிய மனிதனுடைய வாழ்வில் இந்த ஒளிச் சிறப்பும், யோக சக்தியும் பல வகைகளில் செயல்பட்டாலும், அவை குறிப்பாகவும், சிறப்பாகவும் இரு வகைகளில் வெளிப்படுகின்றன. அவை
  1. கர்ம பலனை (விதியை) அழித்து கர்மத்திலிருந்து மனிதனுக்கு விடுதலை அளிப்பது.
  2. பிரார்த்தனை செய்யாமலேயே-அதாவது கேட்காமலும் கோராமலும் இருக்கும் போதே-தம் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வது.


-  From the articles by Karmayogi Avarkal

Monday, 6 July 2015

இன்றைய சிந்தனை

அலையிடை அகப்பட்ட துரும்பைப் போல அல்லற்படும் மனம் அன்னையை நினைத்தால், ஆறுதலோடு அமைதி கிடைப்பதையும், உள்ளத்தில் குளிர்ச்சி பரவுவதையும் உணர முடியும். தாங்க முடியாத அளவுக்கு இருந்த மனப்பாரம், பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவில் குறைந்து போகும். ‘இந்த ஆறுதல், அமைதி, பொறுமை போன்றவை மனத்திலே எழுந்துவிட்டால், பிரச்சினை விலகுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றிவிட்டன’ என்று பொருள்.

சிலருக்கு உடன் பலன் கிடைக்காமல் நாள் கடந்து போகலாம். அவர்கள் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். அன்னையோடு இடையறாத தொடர்பு கொண்டு பிரச்சினைக்குக் கருவியாக அமைந்த தம் தவற்றை எடுத்துச் சொல்லி, அந்தத் தவற்றை இனிச் செய்யாமல் இருப்பதாகச் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும். முதலில் சமர்ப்பணம்; அடுத்துச் சங்கற்பம். இந்த இரண்டும் கர்ம பலனை அழிக்கும்; பிரச்சினைக்கு எழுவாயாக இருந்த காரணத்தை நீக்கும்.


Thursday, 2 July 2015

Message of the Day - Never forget that you are not alone - ஆன்மாவை வாழ்வில் அழைக்கும் வழி

Never forget that you are not alone. The Divine is with you helping and guiding you. He is the companion who never fails, the friend whose love comforts and strengthens. Have faith and
He will do everything for you.
-The Mother,Words of the Mother III





நாம் எல்லோரும் தெய்வீக அன்னையின் கையில் செயல்படும் கருவிகள்தான். இது எப்படி இருக்கிறது என்றால், நாம் இரயிலில் போகும்போது நம்மை இரயில்தான் சுமந்து செல்கிறது. நம்முடைய மூட்டை முடிச்சு பொருள்களையெல்லாம் நாம் சுமக்கவில்லை. இரயில் பெட்டியின் பரண்தான் சுமக்கிறது. அதுபோல நம்மையும் நமது சுமைகளையும் அன்னைதான் தாங்குகிறார். இது ஒரு அறிவு சார்ந்த விவாதமில்லை. நம் அறிவிற்கு தெரிந்த உண்மையாகும். நாம் நம்பிக்கையால் செயல்பட்டால், ஆன்மாவை நம் வாழ்வில் அழைக்க முடியும். அப்படி அழைத்தால் ஆன்மா நம் வாழ்வில் செயல்படவும் துவங்குகிறது.
ஆன்மா செயல்படும்போது அதன் பலன்கள் பகுத்தறிவுக்கு சவாலாக இருக்கும். நம் வாழ்வின் செயல்பாடு ஒவ்வொன்றும் ஆன்மீக ரீதியில் உயர்ந்து, இறை சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்டு இன்ப வாழ்விற்கு உரியவராகிறோம்.




-  Karmayogi Avarkal -ஆன்மீகமும்ஐஸ்வர்யமும் 

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.