Flowers are extremely receptive. All
the flowers to which I have given a significance receive exactly the
force I put into them and transmit it.
When
I give them, I give you states of consciousness; the flowers are the
mediums and it all depends on your receptivity whether they are
effective or not.
- The Mother
அன்னை
பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை ,
அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக்
கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய
செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Common name: Coral vine, Honolulu creeper, Mexican creeper, Bride's tears, Chain-of-love, Hearts on a chain, Love-vine • Tamil: கொடி ரோஜா Kodi rose
மலரின் ஆன்மீக பலன் :
Harmony - வாழ்வில் முரண்பாடுகள் மறைந்து சுமூகம் வளர உதவும் மலர்.
|
Image Courtesy : digitalfrescos.com |
நமது வாழ்வு என்பது குடும்பத்தையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும், சமூகத்தினையும் சார்ந்தது. அதில் முரண்பாடுகளும், சண்டை சச்சரவுகளும் இல்லாத சூழல் மிக முக்கியம் இல்லையா? இன்றைய மலர், இதனை அன்னை அரவிந்தருக்குச் சமர்பிக்கும் போது "சுமூகம்"என்ற ஆன்மீக பலனைத் தரவல்லது.
இன்றைய செய்தி/ Message of the Day :
The Mother and the Sadhana
And then there are those who are luminous, sunny, happy, smiling and those who are gloomy, dull, misanthropic, dissatisfied, who live in grey shadows. It is the latter who catch all the unpleasant things. Those who are radiant (they may be radiant without it being a spiritual radiance, they may simply radiate good sense, balance, an inner confidence, the joy of living), those who carry
in themselves the joy of living, these are in harmony with Nature and, being in harmony with Nature, generally avoid accidents, they are immune from diseases and their life develops pleasantly as far as it is possible in the world as it is.
வாழ்வில் சுமூகத்தின் முக்கியத்துவத்தை அன்னை மேற்கண்டவாறு கூறுகிறார். வாழ்வில் நிம்மதியின்மை, திருப்தியிலாத தன்மை, சோர்வு, எப்போதும் மகிழ்ச்சியில்லாத மனம், மற்ற மனிதர்களை வெறுக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டவர்கள் - எவையெல்லாம் வாழ்வில் இனிமையாக இல்லையோ, கசப்பைக் கொடுக்குமோ அவற்றை எல்லாம் ஏற்கிறார்கள் என்று எச்சரிக்கிறார் அன்னை.
ஆனால் சந்தோஷம், மகிழ்ச்சி, எப்போது பிரகாசமான மலர்ந்த முகம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் ஒளியின் பாதையில் இருப்பதோடு, அவர்கள் வாழ்கையை மகிழ்ச்சியோடு வாழ்வதை ஏற்கிறார்கள்.
இதன் மூலம் அவர்கள் இயற்கையுடன், சுமூகமாக இருப்பதனால், அவர்கள் விபத்துகளில் இருந்து தப்புகிறார்கள், நோய் நொடி வராத எதிர்ப்புசக்தியினைப் பெறுகிறார்கள், வாழ்வில் முன்னேற்றங்களைப் பெறுகிறார்கள் மற்றும் தங்கள் வாழ்வை மகிழ்வுடன் நடத்துகிறார்கள் என்கிறார் அன்னை.
This is a thing very little known among mystics and religious people: in each part of the being the Divine manifests Himself differently. In the higher parts He manifests as Power, Love, etc., but in the physical He manifests as Harmony and Beauty.
இறைவன் உயர்ந்த பகுதியாக, சக்தியிலும், அன்பிலும் வெளிப்படுறான். Physical ஆக அவன் சுமூகத்திலும், அழகிலும் வெளிப்படுகிறான்.
If everybody expressed the divine Will, there would be no conflict any longer, anywhere, all would be in harmony.
இறைவனின் விருப்பம் செயல்பட்டால், அந்த இடத்தில் அல்லது அந்த விஷயத்தில் எந்த விதமான முரண்பாடுகளோ, சச்சரவுகளோ இல்லாமல் சுமூகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்று சுமூகத்தின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார் ஸ்ரீ அன்னை.
REF : - Questions and Answers by Mother.
-------- |
|
No comments:
Post a Comment