இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 6 November 2014

கதையும் சிந்தனையும் - உண்மையான அன்பே உலகில் சிறந்தது

கதையும் சிந்தனையும்

உண்மையான அன்பே உலகில் எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்கிறார் அன்னை. அன்னையின் அஜெண்டா என்ற நூலில் ஒரு புராணக்கதையினைக் கொண்டு அவர் அதற்கு விளக்கமும் அளிக்கிறார். தான் கண்ட ஒரு திரைப்படத்தில் இருந்து, நாரதருக்கும் மற்ற மூன்று தேவியருக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சிறு சவாலினை அடிப்படையாகக் கொண்ட அந்த  சுவையான கதை அன்னை இங்கு பகிர்ந்து கொள்கிறார். அது தரும் சிந்தனைகளையும் இன்று காண்போம்.

இந்தக் கதையின் ஆங்கிலப் பகுதியை இங்கு வழங்குகிறோம்.

Mother Narrates ....................It was only a film story... Oh yes, the story begins like this: one of the three – I believe it was Shiva’s consort, Parvati  was doing her puja. Shiva was in meditation, and she began doing her puja in front of him;she was using an oil lamp for the puja, and the lamp fell down and burned her foot. She cried out because she had burned her foot. So Shiva at once came out of his meditation and said to her, ‘What is it, Devi?’ (laughter) She answered, ‘I burned my foot!’ Then Narada said, ‘Aren’t you ashamed of what you have done? – to make Shiva come out of his meditation simply because you have a little burn on your foot, which cannot even hurt you since you are immortal!’ She became furious and snapped at him, ‘Show me that it can be otherwise!’ Narada replied, ‘I am going to show you what it is to really love one’s husband – you don’t know anything about it!’

Then comes the story of Anusuya and her husband (who is truly a husband ... a very good man,
but well, not a god, after all!), who was sleeping with his head resting upon Anusuya’s knees. They
had finished their puja (both of them were worshippers of Shiva), and after their puja he was
resting, sleeping, with his head on Anusuya’s knees. Meanwhile, the gods had descended upon
earth, particularly this Parvati, and they saw Anusuya like that. Then Parvati exclaimed, ‘This is a
good occasion!’ Not very far away a cooking fire was burning. With her power, she sent the fire
rolling down onto Anusuya’s feet – which startled her because it hurt. It began to burn; not one cry,
not one movement, nothing ... because she didn’t want to awaken her husband. But she began
invoking Shiva (Shiva was there). And because she invoked Shiva (it is lovely in the story), because
she invoked Shiva, Shiva’s foot began burning! (Mother laughs) Then Narada showed Shiva to
Parvati: ‘Look what you are doing; you are burning your husband’s foot!’ So Parvati made the
opposite gesture and the fire was put out.

கதையின் சுருக்கத்தினைக்  காண்போமா? ஒருமுறை பார்வதி தேவி, கைலாயத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். விளகேற்றிக் கொண்டிருந்த போது, பார்வதி தேவியின் பாதங்களில் நெருப்பு பட்டு, சுட்டுவிட்டதால் அவர் உடனே அபயக் குரல் எழுப்புகிறார். சிவனின் தியானமும் கலைந்து, என்ன ஆயிற்று, தேவி?"என்கிறார். "காலைச் சுட்டுக் கொண்டுவிட்டேன்!"" என்கிறார் பார்வதி தேவி. " அழிவே இல்லாத உடலினைப் பெற்ற உங்களை நெருப்பும் சுட முடியாது. அப்படியிருக்க, இச்சிறு விஷயத்திற்காக தங்களுடைய கணவரின் தியானத்தினை கலைத்து விட்டீர்களே?"என்று கேட்கிறார் அங்கு வந்த நாரத முனிவர். "உண்மையான அன்பு என்ன என்பதைக் காட்டுகிறேன்" என்று அவர் அவர்களை பூலோகத்திற்கு கூட்டி வருகிறார்.

அங்கு அனுசுயா என்ற பெண் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். ஒருநாள் சிவனுக்குப் பூஜையை முடித்த பின், அவளது கணவர், அவளது மடியில் தலை வைத்து, உறங்குகிறார். பூவுலகிற்கு வந்த பார்வதி தேவி, அவளைச் சோதிக்க எண்ணுகிறார். பக்கத்தில் எரிந்து கொண்டு இருந்த அடுப்பில் இருந்து , சிறு தீப் பிழம்பை வெளிப்படுத்தி,அனுசியாவின் காலில் சுடச் செய்கிறார். தீ சுட்டெரிக்க ஆரம்பித்தது. அவள் வலியில் கத்தவும் இல்லை, அவள் கண்ணில் இருந்து கண்ணீரும் இல்லை. அவள் எழுந்தால் கணவரின் தூக்கம் தடைபடும் என்று எண்ணி எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். ஆனால், தனது தெய்வமான சிவனை,  இத்துன்பத்தில் இருந்து விடுவிக்கப்  பிரார்த்திக்கிறாள். அவளது பிரார்த்தனை ஏற்று, அவளைக் காக்க, வலியை சிவன்  ஏற்கிறார். நெருப்பு அவரது காலைச் சுடுகிறது. "தேவி ! அங்கே காணுங்கள், நீங்கள் உங்களது செயாலால் உங்களது கணவரது காலைச் சுட்டு விட்டீர்கள்! " என்கிறார் நாரதர். தனது வலிமையால் அத்தீயை அணைத்து விடுகிறார் பார்வதி தேவி. இவ்வாறு அனுசுயா தனது பதி பக்தியால், இறை சக்தியையே வெல்கிறார்.

 இப்படியாக தனக்குப் பிடித்த ஒரு கதையைக் கூறுகிறார் அன்னை.





That’s how it went. Lovely. Oh, the story was very lovely all along. There was one thing after another, one thing after another, and always the power of Anusuya was greater than the power of the gods. I liked that story very much.

It ended in a ... (Oh, the story was very long; it lasted three hours!)
 But really, it was lovely throughout. Lovely in the way it showed that the sincerity of love is much more powerful than anything else.
இக்கதையின் மூலம், உண்மையான அன்பு, அனைத்தையும் வெல்லும் சக்தி படைத்தது என்கிறார் அன்னை.

.........It is more spontaneously natural for me to be the universal Mother and to act in silence
through love.

Ref: Mothers Agenda - Volume 1

Wednesday, 5 November 2014

மலரும் அது கூறும் செய்தியும் - Harmony

மலரும் அது கூறும் செய்தியும்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :
Common name: Coral vine, Honolulu creeper, Mexican creeper, Bride's tears, Chain-of-love, Hearts on a chain, Love-vine • Tamil: கொடி ரோஜா Kodi rose

மலரின் ஆன்மீக பலன் :  
Harmony - வாழ்வில் முரண்பாடுகள் மறைந்து சுமூகம் வளர உதவும் மலர்.

Image Courtesy : digitalfrescos.com




நமது வாழ்வு என்பது குடும்பத்தையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும், சமூகத்தினையும் சார்ந்தது. அதில் முரண்பாடுகளும், சண்டை சச்சரவுகளும் இல்லாத சூழல் மிக முக்கியம் இல்லையா? இன்றைய மலர், இதனை அன்னை அரவிந்தருக்குச் சமர்பிக்கும் போது  "சுமூகம்"என்ற ஆன்மீக பலனைத் தரவல்லது.



இன்றைய செய்தி/ Message of the Day : 

The Mother and the Sadhana

And then there are those who are luminous, sunny, happy, smiling and those who are gloomy, dull, misanthropic, dissatisfied, who live in grey shadows. It is the latter who catch all the unpleasant things. Those who are radiant (they may be radiant without it being a spiritual radiance, they may simply radiate good sense, balance, an inner confidence, the joy of living), those who carry
in themselves the joy of living, these are in harmony with Nature and, being in harmony with Nature, generally avoid accidents, they are immune from diseases and their life develops pleasantly as far as it is possible in the world as it is.

வாழ்வில் சுமூகத்தின் முக்கியத்துவத்தை அன்னை மேற்கண்டவாறு கூறுகிறார்.  வாழ்வில் நிம்மதியின்மை, திருப்தியிலாத தன்மை, சோர்வு, எப்போதும் மகிழ்ச்சியில்லாத மனம், மற்ற மனிதர்களை வெறுக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டவர்கள் - எவையெல்லாம் வாழ்வில் இனிமையாக இல்லையோ, கசப்பைக் கொடுக்குமோ அவற்றை எல்லாம் ஏற்கிறார்கள் என்று எச்சரிக்கிறார் அன்னை.  

ஆனால் சந்தோஷம், மகிழ்ச்சி, எப்போது பிரகாசமான மலர்ந்த முகம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் ஒளியின் பாதையில் இருப்பதோடு, அவர்கள் வாழ்கையை மகிழ்ச்சியோடு வாழ்வதை ஏற்கிறார்கள். 

இதன் மூலம் அவர்கள் இயற்கையுடன், சுமூகமாக இருப்பதனால், அவர்கள் விபத்துகளில் இருந்து தப்புகிறார்கள், நோய் நொடி வராத எதிர்ப்புசக்தியினைப் பெறுகிறார்கள், வாழ்வில் முன்னேற்றங்களைப் பெறுகிறார்கள் மற்றும் தங்கள் வாழ்வை மகிழ்வுடன் நடத்துகிறார்கள் என்கிறார் அன்னை.


This is a thing very little known among mystics and religious people: in each part of the being the Divine manifests Himself differently. In the higher parts He manifests as Power, Love, etc., but in the physical He manifests as Harmony and Beauty.


இறைவன் உயர்ந்த பகுதியாக, சக்தியிலும், அன்பிலும் வெளிப்படுறான். Physical ஆக அவன் சுமூகத்திலும், அழகிலும் வெளிப்படுகிறான்.

 If everybody expressed the divine Will, there would be no conflict any longer, anywhere, all would be in harmony. 
இறைவனின் விருப்பம் செயல்பட்டால், அந்த இடத்தில் அல்லது அந்த விஷயத்தில் எந்த விதமான முரண்பாடுகளோ, சச்சரவுகளோ இல்லாமல் சுமூகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்று சுமூகத்தின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார் ஸ்ரீ அன்னை.

REF : - Questions and Answers by Mother.

                 
 --------






 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு






About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.