நமது சிந்தனைக்கு:
வாழ்வில் தாழ்ந்தவற்றை அனுமதித்தல், பிறரை மதிப்பிடுதல் என்பது அன்னை அன்பருக்குத் தேவையில்லாதது என்பது பற்றிய கட்டுரையை நாம் முன்பே பார்த்துள்ளோம். நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நமது வாழ்கையின் பெரும்பகுதியில் போலியாக, பிறரின் Judgement காக மட்டுமே நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்பதும் புரியும். நாமும், தேவையே இல்லாமல் பிறரை Judge செய்வதில் எவ்வளவு நேரம் வீணடித்து உள்ளோம் என்பதும் நமக்குப் புரியும். அன்னையின் சத்தியஜீவிய வாழ்வு, இறைவனை உணர்தல் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டதாகும். சத்தியஜீவியத்தில் (Supramental Life) நாம் நுழைய, சாதாரண வாழ்வில், நாம் பின்பற்றும் பல விஷயங்களைக் கைவிட வேண்டும்.
உண்மை என்னவென்றால், நமது வாழ்வு இறைவனுக்காக மாற, இறைவனின் கருவியாக நாம் மாறுவதற்கு, இறைவனுக்கு உகந்ததை மட்டுமே நாம் ஏற்றாக வேண்டும்.
இறைவனை நோக்கியே சிந்தனை உள்ள சிலரும், தமது சொல், செயல், பண்பு, சிந்தனை, எண்ணம் ஆகிய எல்லாவற்றிலும் தாம் அறிந்தோ, அறியாமலோ தாழ்ந்ததை ஏற்பதால் அல்லது அனுமதிப்பதால், இறைசிந்தனையில் இருந்து, இறைவனின் Consciousness ல் இருந்து விலகுகிறார்கள்.
நம்மை இறைவனில் இருந்து விலக்கும் விஷயங்களைப் பற்றி அறிந்து அவற்றை நம் வாழ்க்கையில் இருந்து விலக்க முயற்சிக்க வேண்டும். சத்தியஜீவிய வாழ்வினை அடைய இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இன்று ஸ்ரீ அன்னை கூறும் ஒரு கருத்தைக் காண்போம்.
ஸ்ரீ அன்னையின் கருத்துகளின் வாயிலாக நாம், பிறரை மதிப்பிடுவது அல்லது இவர் நல்லவர் / கெட்டவர், இவர் இப்படிதான் என அபிபிராயங்களைக் கொள்வது என்பது இறை சிந்தனையில் இருந்து நம்மை முற்றிலும் விலக்கி விடுகிறது என்பது நமக்குப் புரிகிறது. இத்தகைய பண்பு நம்மை முற்றிலும் சத்தியஜீவிய வாழ்வில் இருந்தும் விலக்கிவிடுகிறது என்கிறார் அன்னை. இந்த அறியாமையில் இருந்து நாம் முற்றிலும் விலகினால் மட்டுமே, சத்தியஜீவிய வாழ்வில் நாம் அடியெடுத்து வைக்க இயலும் என்கிறார் ஸ்ரீ அன்னை."Judging people is one of the first things which must be totally swept away from the consciousness before you can take even a step on the supramental path, because that is not a material progress or a bodily progress, it is only a very little progress of
thought, mental progress. And unless you have swept your mind clean of all its ignorance, you cannot hope to take a step on the supramental path"
All these ideas of good and evil, good and bad, higher, lower, all these notions belong to the ignorance of the human mind, and if one really wants to come into contact with the divine
life, one must liberate oneself totally from this ignorance, one must rise to a region of consciousness where these things have no reality. The feeling of superiority and inferiority completely disappears, it is replaced by something else which is of a very different nature—a sort of capacity for filtering appearances, penetrating behind masks, shifting the point of view.
இங்கு அன்னை கூறியதன் அடிப்படையில் பார்த்தால் நன்மை, தீமை, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பன போன்ற அபிபிராயங்கள் எல்லாம் மனித மனத்தின் அறியாமையே. ஆன்மீக வாழ்வில் வர விரும்பும் ஒருவர், இத்தகைய சிந்தனைகளில் இருந்து, தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். இறை உணர்வில் நாம் இருக்கும் போது, இத்தகைய சிந்தனைகள் யாவும் நீக்கப்பட்டு, வெளிலே தெரியும் தோற்றங்களைக் கடந்து, உள்ளே இருக்கும் உண்மையை மட்டுமே காணும் ஞானம் நமக்கு வருகிறது என்கிறார் அன்னை.
All this contact, this ordinary perception of the world loses its reality completely. This is what appears unreal, fantastic, illusory, non-existent. There is something—something very material,
very concrete, very physical—which becomes the reality of the being, and which has nothing in common with the ordinary way of seeing. When one has this perception—the perception of the work of the divine force, of the movement being worked out behind the appearance, in the appearance, through the appearance— one begins to be ready to live something truer than the ordinary human falsehood. But not before.
இங்கு அன்னை மிகவும் விளக்கமாக இது பற்றிக் கூறுகிறார். நமது சாதாரண கண்ணோட்டத்தில் நாம் காண்பவை யாவும் unreal, fantastic, illusory, non-existent என்கிறார். இத்தகைய தடைகள் எல்லாவற்றையும் தாண்டி, நாம் பார்க்கும் perception ஐ, அதாவது அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டால், மனிதன் வாழ்வின் பொய்யில் இருந்து விலகி இறைவனின் உண்மையான கருவியாக வாழலாம் என்கிறார் அன்னை.