நமது சிந்தனைக்கு:
தம்மை நாடி வரும் ஒவ்வொருவருக்கும், அவர்களின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே, அன்னையின் கருணை செயல்படுகிறது. நமது செயல்களின் வெற்றிகளும் தோல்விகளும், நமது எண்ணங்களையும், நாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையையும் பொறுத்தே அமைகின்றன. சிலர் ஏதேனும் செயல் தோல்வி அடையும் போது அல்லது எதிர்பாரதவிதமான விபத்துக்களைச் சந்திக்கும் போது, இறைவனின் பாதுகாப்பு நமக்கு ஏன் அப்போது இல்லை என்று சிந்திப்பதில்லை. மாறாக, இறைவனை குற்றம் சாட்டுகின்றனர்.
இறைவனின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும், சில சமயங்களில் செய்யும் மிகப் பெரிய தவறு இது. இறை நம்பிக்கை என்பது அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். கஷ்டங்கள் நேரும்போது, கவலைகள் சூழும் போது அல்லது உடல் நலன் பாதிக்கப்படும் போது, நாம் சிந்தித்துப் பார்த்தால், நாம் அந்த சமயம் இறைவனின் மீதான நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம், பயம் நம்மை சூழ்ந்து இருக்கலாம் அல்லது அன்னையின் பாதுகாப்பை விட்டு அகலுப்படியான செயல்களைச் நாம் செய்திருக்கலாம்.
அன்னையின் வழியில்:
அன்னையின் பாதுகாப்பு எப்போது நமக்குப் பூரணமாகக் கிடைகிறது, என்பதனையும் இங்கு காணலாம்.
ஒவ்வொரு இடத்திலும் அதற்கே உரிய சட்டங்கள் உள்ளன. சமூகத்திற்கு என்று ஒரு சட்டம். தனிமனித ஒழுக்கத்திற்கு என்று ஒரு சட்டம். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சட்டம் என்று சட்டங்கள் வேறுபடுகின்றன.
நாம், எங்கு இருக்கிறோமோ, அந்த சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், இல்லையா? அதுபோல, அன்னையின் சட்டங்களும், சமூகத்தின் சட்டங்களில் இருந்து வேறுபடுகின்றன. உதாரணமாக, ஒரு தவறான முறையை அல்லது குறுக்கு வழியை கடைப்பிடித்து ஒருவன் பணக்காரனாகிரான் என்று கொண்டால், சிலர் அவனது திறமையை புகழ்கின்றனர். இப்படி செய்தால்தான், அவன் பிழைக்கத் தெரிந்தவன் என்றும் சிலர் கருதுகின்றனர். இந்தக் கலிகாலத்தில் இப்படி செய்தால்தான் முன்னேற முடியும், நேர்மைக்கு ஏது இடம் என்றும் சிலர் எண்ணுகின்றனர். ஆனால், எந்த உண்மைக்கு புறம்பான முறையும், அன்னைக்கு ஏற்புடையதன்று. அன்னையின் சட்டத்தில் இதற்கு இடம் இல்லை.அவர்களின் உலகத்தில் நுழைந்த நாம், உண்மையின் வழி சென்றால் மட்டுமே அவர் தரும் பாதுகாப்பு நமக்கு கிடைக்கிறது.
உடல் நலன் ஏன் பாதிக்கப்படுகிறது அல்லது எதிர்பாராத விபத்துக்களை நாம் ஏன் சந்திக்கின்றோம் என்பற்கான அன்னையின் விளக்கங்களைக் காண்போம்.
There are two factors that have to be considered in the matter [the causes of illness]. There is what comes from outside and there is what comes from your inner condition. Your inner condition becomes a cause of illness when there is a resistance or revolt in it or when there is some part in you that does not respond to the protection; or even there may be something there that almost willingly and wilfully calls in the adverse forces. It is enough if there is a slight movement of this kind in you; the hostile forces are at once upon you and their attack takes often the form of illness.”நமக்குள், இருக்கும் ஏதோ ஒன்று, அன்னையின் பாதுகாப்பை ஏற்க மறுக்கும் போது, நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார் ஸ்ரீ அன்னை.
-The Mother, Questions and Answers 1929–1931 (19 May 1929)
--------- You understand very well, don’t you, what “being under protection” means? You understand also “going out of the protection”? If you do some- thing contrary, for example, if you are under the protection of the Divine and for a moment you have a thought of doubt or ill-will or revolt, immediately you go out of the protection.
-The Mother, Questions and Answer. 1953
இறை அருளை நாம் சந்தேகிக்கும் அல்லது நம்பிக்கை குறையும் மற்றும் தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் அந்த நொடியில், நாம் இறைவனின் பாதுகாப்பில் இருந்து விலகுகிறோம்.
-The Mother, Questions and Answer. 1953
----------There was cholera in the next house and he got so frightened that he caught the illness and without any other reason, there was no other reason for his catching it: it was through sheer fright. And it is a very common thing; in an epidemic, it is so in the majority of cases. It is through fear that the door is opened and you catch the illness. Those who have no fear can go about freely and generally they catch nothing.
பயம் என்ற உணர்வுதான், உடலில் நோய் வர காரணம் என்கிறார் அன்னை. பக்கத்து வீட்டுகாரருக்கு நோய் வந்ததால், தனக்கும் வந்து விடுமோ என்ற பயத்தால் மட்டுமே ஒருவருக்கு நோய் வந்தது என்கிறார். பயம் என்ற உணர்வு நோயின் நுழைவாயில். பயம் கொள்ளாதவருக்கு, எந்த நோயும் வருவதில்லை என்றும் கூறுகிறார் அன்னை.
........... So the protection acts around you to prevent adverse forces from coming upon you or an accident from happening, that is to say, even if you lose consciousness, because of the protection even your lack of consciousness will not produce a bad result immediately. But if you go out of the protection and are not all the time vigilant, then either you will be attacked by the adverse forces or an accident will happen.
நமக்கு அன்னை மீது அளவு கடந்த நம்பிக்கை உள்ளபோது, நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அன்னையின் கருணை நம்மை பல விபத்துகளில் இருந்தும், ஆபத்துகளில் இருந்தும் காக்கிறது. ஆபத்துக் காலங்களில், நமக்கு அன்னையின் நினைவு (Consciousnes) அல்லது விழிப்பு - உணர்வு இல்லாத போது கூட, அவருடைய கருணை செயல்பட்டு நம்மை மிகப் பெரிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
அதே சமயம், நாம் அருளைச் சந்தேகிக்கும் போது அல்லது நம்பிக்கை குறையும் போது, மனதில் தவறான அல்லது Negative எண்ணங்களைக் கொள்ளும் பொது, அன்னையின் பாதுகாப்பை நாமே முனைந்து விலக்குகிறோம். அப்போது, நாம் மிக ஜாக்கிரதையாக செயல்பட்டாலும், விபத்துக்கள் நேரிடலாம்.
முழு நம்பிக்கையை, அன்னையின் மீது கொள்வது ஒன்றே, அன்னையின் பாதுகாப்பை பூரணமாகப் பெற சிறந்த வழி.
அன்னையின் பாதுகாப்பைப் பெற ஸ்ரீ அன்னையே எழுதியுள்ள மந்திரம்/ Prayer
Protection Flower commons.wikimedia.org |
For the sake of the Mother,
By the power of the Mother,
With the strength of the Mother,
To all adverse harmful being or force
I order to quit this place,
At once and forever.
அன்னையின் அருளால் பயத்தை விலக்குவோம். அன்னையின் பாதுகாப்புடன் வாழ்வோம். நன்றி.