இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday 27 March 2014

அன்னையின் பாதையில் : நாம் மதிப்பிடுவதை (Judging) தவிர்க்க வேண்டும்

அன்னையின் பாதையில் : நாம் பிறரை மதிப்பிடுவதையும்  (Judging), எந்த ஒரு சந்தர்பத்திலும் தவறான முடிவிற்கு வருவதையும் தவிர்க்க வேண்டும்.


"You have no right to judge a man unless you are capable of doing what he does better than himself."   - The Mother

நமது சிந்தனைக்கு: பிறரை மதிப்பிடுவது அல்லது எடை போடுவது என்பது நமது சமூகத்திற்கு மிகவும் பழக்கமான ஒன்று. சமூகம் என்பதில் நாமும் இருக்கிறோம். ஒருவரது நடை, உடை, பாவனை, பேச்சு  என நாம் அனைத்தையும் வைத்து மட்டுமே ஒருவரை எடை போடுகிறோம். அதன் பிறகே, அவர் சக நண்பரோ அல்லது அக்கம் பக்கத்து வீடுக்காரர்களோ, அவர்களோடு பழக தொடங்குகிறோம்.

நாம் பார்க்கும் சில உதாரணங்களை கொண்டால், பெண்கள் அணியும் நகையின் அளவை வைத்து அவர்களின் சமூக அந்தஸ்தை எடை போடுபவர்கள் உள்ளனர். நம்மில் பல குறை இருந்தாலும்,  அதே குறையை மற்றவர்களிடம் கண்டால் அவர்களை தாழ்வாக கருதுபவர்களையும் - முழுவதுமாக உண்மையைத் தெரிந்து கொள்ளாமல், மற்றவர்களை தவறாக எடை போடுபவர்களையும் - குணமும், செயலும் வீட்டில் எப்படிஇருந்தாலும், போலியாக, வெளியில் உத்தமமான மனிதர்களாக நடந்து கொள்பவர்களையும் நாம் காண்கிறோம்.

இப்படிக் கூறிக் கொண்டே செல்லாம். இவற்றின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்ன? இவை எல்லாவற்றிலும், பொய்தான் முழுமையாக உள்ளது. பிறருடைய மதிப்பீட்டில், Judgement ல் நாம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக நாம் சில போலியான அல்லது பொய்யான செயல்களைச் செய்கிறோம். அது போல, ஒருவரது வெளித்தோற்றம், பேச்சு, நடவடிக்கைகளை வைத்து மட்டுமே அவரை எடைபோடும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அந்த மனிதர்களில் நாமும் உண்டா என்ற கேள்விக்கு, பதில் நமது மனசாட்சிக்கே தெரியும்.

வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், நாம் அறிந்தோ, அறியாமலோ நாம் மற்றவர்களை ஏதோ ஒரு முறையில் எடைபோடுகிறோம், Judge செய்கிறோம். இது நாம் நமது சமூகத்தில் இருந்து கற்றுக் கொண்ட ஒரு தவறான பழக்கம்.

அது போல, பல சந்தர்பங்களிலும் நமது முடிவு சரியானது அல்லது தவறானதாக இருக்கலாம். உண்மையை தெரிந்து கொள்ளாமல் நாம் எடுக்கும், எந்த அவசர முடிவுகளும் நன்மை அளிக்காது. மற்றவர்களின் உண்மையான சூழ்நிலைகளை நாம் அறிந்து கொள்ளாமல் அவர் செய்தது தவறு அல்லது சரி என்று கூறுவது நியாயமாகுமா?


அன்னையின் பாதையில் : அன்னையை நாம் தெரிந்து கொண்ட பிறகு, இது போன்ற சிந்தனைகளை,  மனதில் உண்மையை விதைக்கும் சிந்தனைகளை, ஏற்பது நம் மனதில் அன்னையை, உண்மையை, சத்தியத்தை நிலை பெறச் செய்ய உதவும். அதன் மூலம், அன்னையின் சத்திய ஜீவிய சக்தியை நம் வாழ்வில் பலிக்கச் செய்யலாம்.

அன்னை இது பற்றி  என்ன கூறுகிறார் என்று காண்போம்.


Tell your vital not to judge on appearances and to collaborate.
All is well in the long run.


It is always better to keep a quiet mind and to abstain from rushing
to conclusions before you have the necessary information.


(ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முதலில் மனம் அமைதியாக வேண்டும். அவசரமாக ஒரு முடிவிற்கு வருவதை விட, தேவையான எல்லா தகவல்களை முழுவது பெற்ற பிறகே முடிவெடுப்பது சிறந்ததாகும்.)

- The Mother

Before deciding that something is wrong in others or in circumstances, you must be quite sure of the correctness of your judgment—and what judgment is correct so long as one lives in the ordinary consciousness that is based on ignorance and filled with falsehood?


Only the Truth-Consciousness can judge. So it is better, in all circumstances, to leave the judgment to the Divine.


(முடிவுகளை நாம் எடுக்காமல் இறைவனின், விருப்பத்திற்கு விடுவது சாலச் சிறந்தது)

- The Mother

The mind is incapable of knowing; it judges by appearances and not even by their totality but by what it can perceive of them, and its judgment is necessarily false.

மனம் உண்மையை அறிய முடியாது. அது தோற்றத்தை வைத்தும், அது எதனை புரிந்துகொள்ள முடியுமோ அதை வைத்து மட்டுமே எடைபோடுகிறது. அது பொய்யானதாக மட்டுமே இருக்கும்.



...............The first necessity is to abstain from thinking of anyone in a depreciatory way. When we meet a person, our criticising thoughts give to him, so to say, a blow on the nose which naturally
creates a revolt in him. It is our mental formation that acts like a deforming mirror to that person, and then one would become queer even if one were not. 


Why cannot people remove from their minds the idea that somebody or other is not normal? 
By what criterion do they judge? Who is really normal? I can tell you that not a single person is normal, because to be normal is to be divine.

ஒருவர் சரியாக நடந்து கொள்கிறாரா அல்லது தவறாக நடந்து கொள்கிறாரா என்பதனை எதை வைத்துக் காண்கிறீர்கள். சாதாரணமாக இருப்பது என்பது இறைவனுக்குரியதாகும்.

- The Mother from Words of the Mother – II , Page 271

அன்னையின் பாதையில் செல்வோம்.

1 comment:

  1. Let's practice to be normal I.e. Divine , as nothing can prevent the manifestation of truth and this is the only way to serve the divine.

    ReplyDelete

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.