இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label Mother. Show all posts
Showing posts with label Mother. Show all posts

Friday, 19 June 2015

Savitri - A power is on him from her occult force

வணக்கம்.

நமது வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் சத்திய ஜீவியத்தின் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

ஸ்ரீ அன்னையே வாசிக்கும் Savitri Audio பகுதியினை அன்பர்களுக்கு வழங்குகிறோம். 

  
Audio Courtesy: www.savitrithepoem.com


Click here to play the audio " Mother Reading Savitri"  or

Play this following audio control to listen to the Savitri read by The Mother with Meditation Music


Audio Courtesy: http://savitrithepoem.com

The Mother reads the following...............
Book I - The Book of Beginnings
 Canto IV The Secret Knowledge


A power is on him from her occult force
That ties him to his own creation's fate,
And never can the mighty Traveller rest
And never can the mystic voyage cease
Till the nescient dusk is lifted from man's soul
And the morns of God have overtaken his night.

Book I - The Book of Beginnings

Canto IV - The Secret Knowledge  Page 72


The Mother says about Savitri:

.........Each verse of Savitri is like a revealed Mantra which surpasses all that man possessed by the way of knowledge, and I repeat this, the words are expressed and arranged in such a way that the sonority of the rhythm leads you to the origin of sound, which is OM.
 ...................everything is there: mysticism, occultism, philosophy, the
history of evolution, the history of man, of the gods, of creation, of Nature. How the universe was created, why, for what purpose, what destiny - all is there. You can find all the answers to all your questions there. Everything is explained, even the future of man and of the evolution, all that nobody yet knows. He has described it all in beautiful and clear words so that spiritual adventurers who wish to solve the mysteries of the world may understand it more easily.........

Sri Aurobindo about Savitri:

The tale of Satyavan and Savitri is recited in the Mahabharata as a story of conjugal love conquering death. But this legend is, as shown by many features of the human tale, one of the many symbolic myths of the Vedic cycle. Satyavan is the soul carrying the divine truth of being within itself but descended into the grip of death and ignorance; Savitri is the Divine Word, daughter of the Sun, goddess of the supreme Truth who comes down and is born to save; Aswapati, the Lord of the Horse, her human father, is the Lord of Tapasya, the concentrated energy of spiritual endeavour that helps us to rise from the mortal to the immortal planes; Dyumatsena, Lord of the Shining Hosts, father of Satyavan, is the Divine Mind here fallen blind, losing its celestial kingdom of vision, and through that loss its kingdom of glory. Still this is not a mere allegory, the characters are not personified qualities, but incarnations or emanations of living and conscious Forces with whom we can enter into concrete touch and they take human bodies in order to help man and show him the way from his mortal state to a divine consciousness and immortal life.

Sri Aurobindo

Thursday, 9 April 2015

Message of the Day: இப்பிறவியில் ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் அறிமுகம் ஏன் கிடைத்தது? What has brought me to the Mother’s feet?




ஸ்ரீஅரவிந்தர், இந்தப் பிறவியில் நமக்கு அன்னையின் அறிமுகமும் பக்தியும் கிடைத்ததற்கான காரணங்களை தனது நூலில் குறிப்பிடுகிறார். உங்களது ஆன்மாவின் விருப்பமும், அழைப்புமே அதற்கு காரணம் என்கிறார் பகவான். அன்பரின் கேள்விகளுக்கு அவர் கூறும் விளக்கத்தினை இங்கு காணுங்கள்.

(நாங்கள் செய்த எந்த புண்ணியம், இப்போது  இறைவனிடம் எங்களைக் கொண்டு சேர்த்தது?)
அன்பரின் கேள்வி : By what punya of ours has the Grace granted to us, mere humans, this rare privilege of coming here at the Divine’s Feet?
   ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:It is the call of your soul that brought you here and also some aspiration or connection with the Mother and myself in past lives.
 (முற்பிறவியில் நாங்கள் கொண்ட எந்த வகையான பக்தி, இந்தப் பிறவியில் அன்னையின் காலடிகளில் எங்களைக் கொண்டு சேர்த்தது?)
அன்பரின் கேள்வி :What sort of bhakti in my past lives has brought me to the
Mother’s feet?
ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:The aspiration for union with the Divine and perhaps also forthe descent of the Divine on the earth.
(இறைவனை அடைய வேண்டும், இறை ஒளி பூமிக்கு வர வேண்டும் என்ற உங்களின் விருப்பமே என்று பதிலளிக்கிறார் பகவான்.)
அடுத்ததாக, இறைவனை தரிசிக்க மக்கள் பிரயத்தனம் செய்கிறார்கள். அழுது புலம்புகிறார்கள். ஆனால், பெரு முயற்சிகள் இல்லாமல், நாங்கள் எவ்விதம் உங்களிடம் வந்தோம்? எது அழைத்து வந்தது என்று கேட்கிறார் ஒரு அன்பர்.
அன்பரின் கேள்வி : People make all sorts of effort to have God’s darshan; some
even weep and weep, yet they fail to obtain it.We don’t seem to have done very much, and yet we are here with
you. What has brought this about?

ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:There are many things that have brought it about—a connection in past lives with the Mother and myself, the development
of your nature in former births which made it possible for you to seek the Divine, bhakti in those lives bearing its fruit now— finally, the Divine Grace.
- Letters on the Mother - Book by Sri Bhagavan

Tuesday, 27 January 2015

Message of the Day: அன்னையை வழிபட தனிப்பட்ட வழிமுறை ஒன்றும் இல்லை.




Photo Courtesy :   .Mirapuri-Enterprises.com

 
A sadhak wrote that devotees were performing ceremonies much like the worship of deities in front of the photographs of Sri Aurobindo and the Mother. Stating that for proper worship there should be a bija-mantra [seed-mantra] to invoke the deity, he asked whether there was such a mantra for Sri Aurobindo and the Mother.
Mother replied:)

I always advise to let the mantra rise from the depth of the heart as a sincere aspiration.
 ---------------------------
To live the Supreme Truth, if only for a minute, is worth more than writing or reading hundreds of books on the methods or processes by which to find it.


From Words of the Mother
அன்னையை வணங்க ஏதேனும் குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டா?’ என்ற கேள்வி எழுவது இயற்கை.
 அன்னைக்கு இருப்பது தெய்வாம்சம் இல்லை; அன்னையே தெய்வம்; தெய்வத்தின் திருஅவதாரம். அவரை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் தெய்வீக அமைதியும், விவரிக்க இயலாத ஆனந்தமும் ஏற்படுவது வழக்கம். பன்னெடுங்காலம் தவம் இருந்து பெற வேண்டிய பெறற்கரிய மௌனத்தை, அன்னையின் சமாதி முன் பக்தியுடன் வந்து பணியும் எவர்க்கும் அன்னை வரப்பிரசாதமாக வழங்குகின்றார்.

விரைவான செயலும், வேகமான சிந்தனையும் கொண்டு, எப்பொழுதும் அலைகடல் துரும்பாக மனத்தை ஆக்கிக்கொண்டுவிட்ட நாடறிந்த ஓர் எழுத்தாளர், அன்னை சமாதியின் முன் அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்தபொழுது, முதலில் விரைவும், வேகமும் அவரை விட்டு நீங்கின. பிறகு அவர் மனத்தில் எப்பொழுதும் ஓயாமல் கத்திக்கொண்டிருந்த அலைகள் அடங்கின. அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. ‘இதைப் போன்றதோர் அமைதியை இதற்கு முன்னால் நான் பெற்றதே இல்லை. ‘நான்’என்பதை விட முடியாமல், எழுத்தில் ‘நான்', வாழ்க்கையில் ‘நான்’என்று பல ‘நான்'களைச் சுவாசத்தைப்போல இதுவரை எனக்குள் வைத்து, வரவுசெலவு செய்துகொண்டு இருந்த நான், அன்னையின் சமாதியின் முன்னால் அமர்ந்தவுடன், இந்த ‘நானை'த்தான் முதலில் நீக்கினார் அன்னை. பிறகு ‘நான்’இருந்த இடத்தில் ‘அவர்’ இருந்து என்னை எழுதினார். ஆழ்ந்த அமைதியில் நான் திளைக்கத் திளைக்க, அன்னை என்னை எழுதிக்கொண்டே இருந்தார்’ என்று என்னிடம் பக்திப்பரவசத்தோடு விவரித்தார் அந்த எழுத்தாளர். அவர் டாக்டர் வாசவன். இது அன்னை அவருக்கு அளித்த வரம்.

யோகத்தை நாடுபவர்க்கு யோகத்தையும், வாழ விரும்புவோர்க்கு வாழ்க்கைச் சிறப்பையும் அளிப்பவர் அன்னை.

அன்னையை வழிபட தனிப்பட்ட வழிமுறை ஒன்றும் இல்லை. பக்தியுடன் அன்னையை நினைப்பதும், நினைத்துக்கொண்டே செயல்படுவதும் மட்டுமே வழிபாட்டு முறைகளாகும். பக்தனுடைய நினைவுக்குப் பலனாக, அவனுடைய செயலில் அன்னை தம்மை வெளிப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். முதலாகவும், முடிவாகவும் அன்னைக்கு நினைவே வழிபாடு. அன்னையை ஏற்றுக்கொள்ள விழைபவர்கள், அதற்கு முன்னால் மனத்தூய்மையையும், நல்லெண்ணத்தையும், அமைதியான நடைமுறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆரவாரமற்ற அமைதியான பேச்சு, சிறந்த செயல்முறை, தூய்மையான சுற்றுப்புறம், இடையறாத தெய்வச் சிந்தனை ஆகியவை அன்னைக்கு உகந்தவை. அவையே அன்னைக்கு அர்ச்சனையும், நிவேதனமும் ஆகும்.





- கர்மயோகி அவர்களின் கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய் என்ற கட்டுரையில் இருந்து..


Thursday, 25 December 2014

Message of the Day : Sri Mother's prayer to the DIVINE





Sri Mother's prayer to the DIVINE:

O Divine Master, grant that today may bring to us a completer consecration to Thy Will, a more integral gift of ourselves to Thy work, a more total forgetfulness
of self, a greater illumination, a purer love.

Grant that in a communion growing ever deeper, more constant and entire, we may be united always more and more closely to
Thee and become Thy servitors worthy of Thee.

Remove from us all egoism, root out all petty vanity, greed and obscurity.
May we be all ablaze with Thy divine Love;
make us Thy torches in the world.

A silent hymn of praise rises from my heart like the white smoke of incense of the perfumes of the East. And in the serenity of a perfect surrender, I bow to Thee in the light of the rising day.

.(From Prayers and Meditations The Mother)

*************************

அமைதி, சாந்தி என்பவற்றை பகவான் calm, quiet, stillness, silence என வேறுபடுத்திக் கூறுகிறார். ஓடும் எண்ணம் ஓடுவதை நிறுத்துவது, ஓட்டம் நிற்பது, stillness எண்ணங்கள் மனத்திலிருந்து ஓடாமலிருப்பது நிதானம், quiet. அவை ஓடும் திறமையை இழப்பது அமைதி, calm கீழிருந்து எழுபவை இது. இவை மேலிருந்து வருவது மௌனம் Silence. சமர்ப்பணம் பூர்த்தியாகி, சரணாகதி எழுந்து, அதுவும் பூர்த்தியாக எண்ணமும், சூட்சும எண்ணமும் சமர்ப்பணம் செய்யப்பட்டது போல் உணர்ச்சியும், சூட்சும உணர்ச்சியும் சமர்ப்பணமாக வேண்டும். முடிவாக உடல் என்பதில் சரணாகதி முடியும். உடலுக்கு உணர்வுண்டு; சூட்சுமம் உண்டு. அவைகளும் சமர்ப்பணமாக வேண்டும். சமர்ப்பணத்தில் யோகம் ஆரம்பித்து சரணாகதியில் முடியும். இவை யோக நிலைகளானால், நம்மால் முடிந்ததை முழுவதும் சமர்ப்பணம் செய்வது என்றால் என்ன? அதற்குரிய பலன் என்ன? அவை வாழ்வில் எப்படி பிரதிபலிக்கும் என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. இவற்றிற்கு,



  • . குறைந்தபட்ச நிலையுண்டு.
  • . அதிகபட்ச நிலையுண்டு.
  • அவற்றைக் கடந்த நிலைகளும் உள்ளன.
  • . குறைந்தபட்சம் என்பது முடிந்ததை முழுமையாகச் செய்து முடிப்பது.
  • இதற்குரியது யோகப் பலன்.
  • இதற்கடுத்தக்கட்ட யோகப் பயிற்சி நமக்குப் பலிக்கும் நிலை ஏற்படுவது அதற்குரிய வாழ்க்கைப் பலன்.
  • இன்றுள்ள எல்லாப் பிரச்சினைகளும் மறையும்.
  • இன்று எழக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் எழும்.
  • எழும் வாய்ப்புகளில் நாம் மறுக்காதது, ஒதுக்காதது, வெறுக்காதவை,அத்தனையும் பலிக்கும்.
  • . அதிகபட்சம் என்பது உடலுக்குரிய சூட்சும உணர்வு சமர்ப்பணமாகி சரணாகதியாகப் பலிப்பது.
  • அது நடைபெற்றதற்கு அடையாளம் உடல் நன்றியறிதலால் புல்லரிப்பது.
  • நம் சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அது அடையாளம்.
  • அது நடந்தபின் நமக்குத் தேவையானதுஎன்று ஒன்றில்லை.
  • அதன்பின் நடப்பவை அன்னைச் செயல்என்பதால் நாம் பேசவோ,நினைக்கவோ எதுவுமில்லை.


- கர்மயோகி அவர்களின் மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2007 » 06.முடிந்ததை முழுமையாக முடிப்பது முக்கியமான முறை   என்ற கட்டுரையில் இருந்து..


 

Monday, 22 December 2014

Message of the Day : Mother's Blessings : அன்னை விருப்பம் நிறைவேறட்டும்.






Sri Mother says:

Every day, at each moment, my blessings are with you.
*(ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், எனது ஆசிகள் உன்னுடன் இருக்கிறது)


My child,
My blessings are with you to widen and purify your consciousness so that peace may always be within you.


My love and blessings are with you. Understand that blessings
are for the best spiritual result, not necessarily according to
human wishes.


(எனது அன்பும் ஆசிகளும்  உங்களுக்கு எப்போதும் உண்டு. எனது ஆசிகள், உங்களது ஆன்மீக பலனிற்கு உரியது. அதன் மூலம் மனிதனின் ஆசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை.


My blessings are very dangerous. They cannot be for this one or for that one or against this person or against that thing. It is for... or, well, I will put it in a mystic way: It is for the Will of the Lord to be done, with full force and power.


(தனது ஆசிகள் அனைத்துமே, இறைவனின் விருப்பம் நிறைவேறுவதற்காகவே என்கிறார் ஸ்ரீ அன்னை .

ஆகையால், அதன் பலன் உங்களுக்குத் வெற்றியாக மட்டுமே அமைய வேண்டும் என்பது இல்லை. ஏனெனில், அந்தத் தோல்வியே,  இறைவனின் விருப்பமாக இருக்கலாம். அதனால், எது நடக்கிறதோ, அதுவே மிகச் சிறந்ததாகும் என்கிறார் ஸ்ரீ அன்னை .

 So it is not necessary that there should always be a success. There might be a failure also, if such is the Will of the Lord. And theWill is for the progress, I mean the inner progress. So whatever will happen will be for the best.
(Ref: Question and Answers 1954- The Mother)

*************************

அன்னை விருப்பம் நிறைவேறட்டும்' என்பது  (Let Thy will be done, Not Mine!)  மந்திரம். சக்தி வாய்ந்தது. செயல்படும் பலன் தரும். ஆனால் மனித சுபாவம் அதனினும் வலுவுடையது. அதனால் மனிதனே என்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டாம்" என்று கூறுவது அன்னை விருப்பம் நிறைவேற உதவும். இவற்றிற்குத் துணையாக மனதால் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதாய் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார் அன்னை.     

தான் என்பதைத் தாண்டி வர முடியாவிட்டாலும், செய்யும் காரியங்களை நமக்காகச் செய்யாமல், அன்னைக்கே அர்ப்பணம் செய்து பின்னர் செய்ய வேண்டும்.

நம்முடைய விருப்பம் களையப்பட வேண்டும். சொந்தப் பலன் கருதும் மனப்பாங்கை அழிக்க வேண்டும். தனக்குரிய பலன் என்ற ஆசையைக் கரைக்க வேண்டும். பலனைக் கேட்கும் குணநலனுக்கு இடமில்லை. பரிசை நாடும் பாங்குக்கு இது அரங்கமில்லை. அன்னையின் திருப்தியே உனக்குரிய பலன். அன்னையின் இலட்சியம் பூர்த்தியாவதே, அதனால் அன்னை பெறும் நிறைவே உனக்குரிய பரிசு.

மனித ஜீவியம், தெய்வ ஜீவியமாக மாறுவதே உனக்குக் கிடைத்த கைம்மாறு. அமைதியும், ஆனந்தமும், அவற்றிற்குரிய திறனும் உன் சொத்து. சேவையின் ஆனந்தமும், அகவாழ்வின் மலர்ச்சியில் பூரணமும், தன்னலமற்ற சாதகனுக்குப் போதுமான நிறைவு. பக்தனாயிருந்து, கருவியாக மாறி, அன்னையுடன் ஒன்றி, நாம் வேறு - அன்னை வேறு என்ற நிலையில்லை எனும்வரை மாறுதல்கள் ஏற்படும்.



 

Monday, 15 December 2014

Message of the Day: அன்னையை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் திடமான உடல் நலம் ஏற்பட ஒரு வழி



Mother says:
Image Courtesy: FlowersofIndia.net


It is good health, a solid body, well poised; when one does not have the nerves of a little girl that are shaken by the least thing; when one sleeps well, eats well.... When one is quite calm, well balanced, very quiet, one has a solid basis and can receive a large number of forces.
If anyone among you has received spiritual forces, forces of the Divine Ananda, for example, he knows from experience that unless he is in good health he cannot contain them, keep them. He begins to weep and cry, gets restless to expend what he has received. He must laugh and talk and gesticulate, otherwise he cannot keep them, he feels stifled. And so by laughing, weeping, moving about he throws out what he has received.
To be well balanced, to be able to absorb what one receives, one must be very quiet, very calm. One must have a solid basis, good health. One must have a very solid basis. That is very important.

(Ref: Question and Answers 1953- The Mother)


உடல் நலம் : நாடித் துடிப்பு 72, டெம்பரேச்சர் 98.6°, சர்க்கரை 110, இ.ட. 90/110, எடை உயரத்திற்குத் தகுந்தாற்போருக்க வேண்டும் என்பதை இன்று பலரும் அறிவர்.
உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியின் செயலுக்கும், இருக்க வேண்டிய அளவை நிர்ணயித்துள்ளனர்.
• இவை எல்லாம் சரி.
• இவற்றிற்கு மேற்பட்ட உண்மையும் உண்டு.
• அது நிதானம் (inner balance).
• அந்த நிதானமிருந்தால் 5 அடி உயரமுள்ள பெண் 270 பவுண்டு எடையுடன் 87 வயது வாழ்வதும் உண்மையாக இருக்கும். இதுவும் அன்னை வாழ்வில் நடந்ததேயாகும்.
• அதையும் கடந்த உண்மையும் உண்டு.
எந்தச் சட்டம் மாறினாலும் அருள் செயல்
படுவதால் நிதானம் ஏற்பட்டு சட்டத்தைப்
புறக்கணித்து உடல் நலம் பெறும் என்பது
உண்மையானாலும் சட்டத்தை அவசியமாகப்
பின்பற்ற வேண்டும்.
• அன்னையின் ஆன்மீக அருள் தரும் நிதானத்தின் முழுப் பலன் பெற நாம் மருத்துவத் துறைக்குரிய (norms) சட்டத்தை மயிரிழை வழுவாமல் பின்பற்றுதல் அன்னைக்குகந்தது.
• இந்த நிதானமிருப்பதற்கு அடையாளம் சந்தோஷம்.
• சந்தோஷம் தானே உள்ளிருந்து எழுந்து வருமானால், மருத்துவத் துறையின் சட்டங்களைக் கடந்த ஆரோக்கியம் மனிதனுக்குண்டு.

அன்னையை ஏற்றுக் கொண்டவர்களுக்குத் திடமான உடல் நலம் ஏற்பட ஒரு சுருக்கமான வழியைச் சொல்லலாம். உடல் அன்னையை நினைவில் வைத்துக்கொண்டால் உடல் நலம் பெருகி, உடல் வெண்கலம் போல் அமையும். உடல் அன்னையை நினைப்பது என்றால் என்ன என்று கேள்வி எழும். அப்பைய தீக்ஷிதர் தமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்திலும் சிவனை நினைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று ஒரு செய்தியுண்டு. நமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்தில் நினைவு இருந்தால், அது உடல் நினைவு வைத்திருப்பதாக அர்த்தம். குளிர்காலத்தில் பக்கத்தில் போர்வையை வைத்துவிட்டுப் தூங்கப்போனால் இரவில் குளிர் அதிகமாகும் நேரம் போர்வையை எடுத்து நாம் போர்த்திக்கொள்கிறோம். காலையில் பார்த்தால் போர்த்தியிருப்பது தெரியும். எப்பொழுது போர்த்திக்கொண்டோம் என்றுத் தெரியாது. உடலே தன் தேவையை உணர்ந்து, நமக்குத் தெரியாமல் செய்த செயல் அது. உடலுக்கு நோய் என்று வந்தவுடன், மாத்திரை நினைவு வராமல், டாக்டர் நினைவு வராமல், பயம் ஏற்படாமல், கவலையுண்டாகாமல், அன்னை நினைவு வந்தால் அன்னையை உடல் நினைவு வைத்திருக்கிறதாகக்கொள்ளலாம்.


- கர்மயோகி அவர்களின் 
அருளமுதம் என்ற கட்டுரையில் இருந்து..

Thursday, 9 October 2014

Message of the Day

ஸ்ரீ அன்னை இந்தியாவிற்கும், அனைத்து இந்தியர்களுக்கும் அளித்த செய்தி


A message was asked from me for the whole of India. I have
given it. (Mother hands the text to the disciple.)


Supreme Lord, Eternal Truth
Let us obey Thee alone
and live according to
Truth.


Falsehood என்ற அறியாமை, பொய் மற்றும் இருளில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள ஸ்ரீ அன்னை கூறும் வழி என்ன?

One must rise above, and then (gesture of seeing from
above).


What I have told you is the Truth, it is the only remedy:
To exist only for the Divine. 

(இறைவனுக்காகவே இருப்பது )
To exist only through the Divine.

(இறைவனால்  இருப்பது )
 To exist only in the service of the Divine.
(இறைவனின் சேவைக்காகவே  இருப்பது )
 To exist only... by becoming the Divine.
(இறைவனாகவே மாறுவதற்காக இருப்பது )

Thursday, 11 September 2014

அன்னையின் பாதையில் :அன்னை நமக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் பேறுகள்


அன்னையின் பாதையில் :


அன்னை நம் ஒவ்வொருவருக்கும் அறிமுகமான முறைகள் பல்வேறு வகையானதாக இருக்கலாம். அவரைப் பற்றி அறிந்தும், அவருடைய பெருமைகளை உணராதோரும் உள்ளனர். ஏன் அன்னை நமக்கு அறிமுகமானார் என்று நினைத்து பார்க்காதவர்கள் கூட இருகின்றனர். அன்னையை அறிவதே அதிர்ஷ்டம் என்று கர்மயோகி அவர்கள் தனது நூல்களில் குறிப்பிட்டு உள்ளார். நமது எண்ணங்களும், தேவைகளும் பூர்த்தியாக அன்னையை பிரார்த்தனை செய்தால் அவைகள் நிறைவேறுகிறது என்பதனையும் தாண்டி, சத்திய ஜீவியத்தின் உண்மையான குறிக்கோள் என்ன, பூரண யோகத்தின் மகத்துவம் என்ன என்பனவற்றை நாம் அறிய முயல வேண்டும். அன்னையை நாம் அறியும் பொழுது, அன்னையின் சத்தியஜீவிய சக்தியின் குறிக்கோளை அறிய முற்படுவதும், முக்கியமானது ஆகும்.

 அன்னை, இந்த உலகிற்கு கிடைக்கவேண்டும் என்று விரும்பிய சில விஷயங்களைக் கூறியுள்ளார். அவற்றைக் காண்போம்.

  What I want to bring about in the material world, upon the earth.

1. Perfect Consciousness.
2. Integral Knowledge, omniscience.
3. Power invincible, irresistible, ineluctable; omnipotence.
4. Health, perfect, constant, unshakable; perpetually renewed energy.
5. Eternal youth, constant growth, uninterrupted progress.
6. Perfect beauty, complex and total harmony.
7. Inexhaustible unparalleled riches, control over all the wealth of this world.
8. The gift of healing and giving happiness.
9. Immunity from all accidents, invulnerability against all adverse attacks.
10. Perfect power of expression in all fields and all activities.
11. The gift of tongues, the power of making oneself understood perfectly by all.
12. And all else necessary for the accomplishment of Thy work.
- Words of the Mother – I

தூய்மையான இறை உணர்வு, பூரண ஞானம், அளவில்லாத சக்தி, முழுமையான ஆரோக்கியம், இளமை,  நல்லிணக்கம், செல்வம், சந்தோஷமான வாழ்வு, ஆபத்துகள் இல்லாத வாழ்வு, முழுமையாக  வெளிப்படுத்தும் ஆற்றல், சிறந்த பேச்சுத்திறன், இறைவனின் நோக்கத்தினை நாம் திறம்படச் செய்வதற்கான திறன் ஆகிய அனைத்தையும் இந்தப் பூமியில்   உள்ள அனைவரும் பெற அன்னை விரும்புகிறார். சத்திய ஜீவிய சக்தி உலகில் வெற்றி பெற்று, முழுமையாக வெளிப்பட்டு, திருவுருமார்ரத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம், உலகம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில்  எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்புகிறார் அன்னை.

I wish
1. personally to be eternally the perfect expression of the Supreme Divine.
2. that the supramental victory, manifestation and transformation should take place at once.
3. that all suffering should disappear for ever from the worlds present and future.
 - Words of the Mother – I

எந்த ஒரு நிகழ்வையும், உலகத்திற்கான ஒரு நிகழ்வானதாகவே அன்னை காண்கிறார். எனவே, நாம் செய்யும் ஒரு செயல் கூட, அது சிறியதோ அல்லது பெரிதோ எதுவானாலும், அவை உலகத்தின் நிகழ்வுகளில் பிரதிபலிக்கப்படுகின்றன.

O, my Lord, my Lord!
What you want of me, let me be.
What you want me to do, let me do.

 இது அன்னையின் பிரார்த்தனை. இதுவே நமது பிரார்த்தனையானால், நாம் இறைவனின் நோக்கத்தை நிறைவேற்றும், இறைவனின் கருவியாவோம்.



Tuesday, 8 April 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் -15 - Refinement - மனம், உணர்வு, எண்ணம் தூய்மை பெறுதல்


 மலரும் மலர் கூறும் செய்தியும் -15


Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :
Refinement of habits


Common name: Mexican lilac, Mother of cocoa, Quickstick • Tamil: சீமை அகத்தி Seemai agathi • Malayalam: Seema konna • Telugu: Madri • Bengali: Saranga • Kannada: Gobbarda mara

 நமது பண்புகளையும், பழக்கங்களையும் சுத்தி செய்து கொள்ள உதவும் மலர்.
Mexican Lilac
Photo Courtesy: flowersofindia.net                                       Photo: Dinesh Valke

இன்றைய செய்தி/ Message of the Day :


" Surely primitive man was very material, very near the animal. And as the centuries pass, man becomes more mental and more vital; and as he becomes more vital and mental, naturally refinement is possible, intelligence grows, but also  the possibility of perversion and distortion. You see, there is a difference between educating one’s senses to the point of being able to bring in all kinds of refinements, developments, knowledge, all the possibilities of appreciation, taste, and all  that—there is a difference between this, which is truly a development and progress of consciousness, and attachment or greediness."
- The Mother

(ஆதி காலத்து மனிதன் ஜடப் பொருட்களைளைச் சார்ந்து, மிருகங்களைப் போல வாழ்ந்தான். நூற்றாண்டுகள் செல்லச்  செல்ல அவன் மனதையும், உணர்வையும் சார்ந்தவன் ஆனான். அப்போது அவனது பகுத்துணர்வும், அறிவும் வளர்ந்ததால் அவன் தன்னை மாற்றிக்கொள்ள, நல்ல வழியில் சுத்தி செய்து கொள்ள சந்தர்பங்கள் இருந்தாலும், தவறான வழிகளில் செல்லவும் சந்தர்பங்கள் உள்ளன. நமது Consciousness ன் உண்மையான முன்னேற்றம் என்பது, நமது உணர்வுகளையும், மனதையும் சரியான வழியில் திருப்பி, நமது பழக்கங்களையும், எண்ணங்களையும், மனதையும் சுத்தி செய்து கொள்வதில்தான் உள்ளது. )


"Usually all education, all culture, all refinement of the senses and the being is one of the best ways of curing instincts, desires, passions. To eliminate these things does not cure them; to cultivate, intellectualise, refine them, this is the surest means of curing. To give the greatest possible development for progress and growth, to acquire a certain sense of harmony and exactness of perception, this is a part of the culture of the being, of the education of the being. It is like the people who cultivate their intelligence, who learn, read, think, compare, study.

       - ஸ்ரீ அன்னை 
Ref: Question and Answers

  • சுத்தி முக்தி தரும்.
  • மனம் தூய்மைப்பட வேண்டும். அத்துடன் ஆசைக்குட்பட்ட ஆத்மாவும் தூய்மை பெற்றால் முக்தி கிட்டும்.
  • . ஆசையழிந்தால் ஆத்மாவின் பிராணன் (உயிர்) விடுதலை பெறும்.
  • தவறான உணர்வு தன்னையழித்துக்கொண்டால் இதயம் விடுதலை பெறும்.
  • எண்ணம் சிறுமையை இழந்தால் அறிவு விடுதலை பெறும்.
  • ஜடமான அறிவு அழிந்தால் ஞானம் உதயமாகும்.
  • பிராணன், இதயம், அறிவு ஆகியவை கரணங்கள்.
  • கரணங்கள் தூய்மைப்பட்டால், கரணங்கள் விடுதலை பெறும்.
  •  
  • சுத்தம், புறத் தூய்மை, அகத் தூய்மை என இரு பகுதிகளாகும். இரண்டும் இருந்தால் சிறப்பு. வாழ்க்கையில் அது முழு யோகம். அகத் தூய்மை மிக உயர்ந்தது.  
  •  
  • மனம் முறையாக இருந்தால்தான், பொருள்களை முறையாக வைக்க முடியும் (பொருள்களை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்பதன் மூலம், மனத்தை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பொருள்). முறைப்படுத்தப்பட்ட மனத்தில் அன்னையின் சக்தி தீவிரமாகச் செயல்படும்.
                  
 - திரு கர்மயோகி அவர்கள், ஆன்மாவின் விடுதலை, அன்பர் வழிபாடு 
கட்டுரைகளில் இருந்து




 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,






About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.