இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.

- The Mother

Get this widget

Tuesday 29 April 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் -Happy Heart - மகிழ்ச்சியான இதயத்தைப் (மனதைப்) பெற உதவும் மலர்

 மலரும் மலர் கூறும் செய்தியும் -18

Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :
Common name: Lemonia, Limonia, Pink Ravenia,  Ravenia spectabilis 
File:Ravenia spectabilis 01.JPG
Source: Wikicommons                                Photo Courtesy: Vinayaraj
மலரின் பலன் : 
Happy Heart -  மகிழ்ச்சியான இதயத்தைப் (மனதைப்) பெற உதவும் மலர்                              
Smiling, peaceful, radiant, without a shadow.

இன்றைய செய்தி/ Message of the Day :

Mother says about the important role of our heart in Yoga:
Concentrate in the heart. Enter into it; go within and deep and far, as far as you can. Gather all the strings of your consciousness that are spread abroad, roll them up and take a plunge and sink down.
A fire is burning there, in the deep quietude of the heart. It is the divinity in you—your true being. Hear its voice, follow its dictates.
There are other centres of concentration, for example, one above the crown and another between the eye-brows. Each has its own efficacy and will give you a particular result. But the
central being lies in the heart and from the heart proceed all central movements—all dynamism and urge for transformation and power of realisation.
 - The Mother.

ஆழ்ந்த தியானத்தில் செல்லும் பொழுது, நாம் ஒருமுகப்படுத்தும் மையங்கள் பல நம் உடலில் உள்ளன. சகஸ்ரதளம் மற்றும் புருவங்களின் மையத்திலும் அவை உள்ளன. ஆனால் எல்லாவற்றுக்கும் (Central Being) மையமானது இதயத்தில் உள்ளது. அதுவே யோகத்தில் எல்லா விதமான திருவுருமாற்றத்திற்கும், இறைவனை உணர்வதற்கும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.

Mother says some words about being happy...
“My children, it is because this is the divine will. It is due to the divine grace that you are here.

Be happy, be calm, be at peace, do not question, all will be well.”

....One must be a child all one’s life, as much as one can, as long as one can. Be happy, joyful, content to be a child and remain a child, plastic stuff for shaping.
(மகிழ்ச்சியாக, அமைதியாக, சாந்தமாக , கேள்விகளே எழுப்பாமல் இருங்கள். எல்லாம் நன்றாக நடக்கும்)
 - ஸ்ரீ அன்னை 
Ref: Question and Answers 1953

  • தய கமலத்தில் இறைவன் உறைகிறான்.
  • கமலம் மொட்டவிழும் பொழுது இறைவன் - அன்னை - மகிழ்கிறார்.
  • அன்னை ஒருவர் இதயத்தில் பெறும் மகிழ்ச்சி அனைவர் உள்ளமும் பூரிக்கும் செயல்.
  • அது நிகழ்ந்தால் அவருக்கு யோகம் ப-க்கும் எனப் பொருள்.
  • இதுவரை யோகத்திலில்லாத கட்டம் ஒன்றுண்டு. அதை அன்னை அனுபவித்தார்.
    இதயத்தைக் கடந்து, ஜீவனையும் கடந்து உடலில் உள்ள செல்கள் பக்தியால் மலர்வது உடல் ஆன்மாவால் பூரிப்பது.
    அது யோகத்தில் முடிவான நிலை.
        
 - திரு கர்மயோகி அவர்கள்,  பூரணயோகம் - முதல் வாயில்கள்

கட்டுரைகளில் இருந்து

 -------------------------------------------------------------------------------------------------------------------------

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,

Thursday 24 April 2014

Message of the Day - Tamil / English

         Message  of the Day  / இன்றைய சிந்தனைத் துளிகள்

In a general and almost absolute way anything that shocks you in other people is the very thing you carry in yourself in a more or less veiled, more or less hidden form, though perhaps
in a slightly different guise which allows you to delude yourself. And what in yourself seems inoffensive enough, becomes monstrous as soon as you see it in others.

Try to experience this; it will greatly help you to change yourselves. At the same time it will bring a sunny tolerance to your relationships with others, the goodwill which comes from understanding, and it will very often put an end to these completely useless quarrels.

-Sri Aurobindo from On Thoughts and Aphorisms

************************************************

அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள்

நம் கையால் செய்யும் காரியங்கள் பூரணம் பெற வேண்டும். முழுமையான நாணயம்;
மனித உறவுகள் அனைத்தும் இனிமையாகவும், இசைவாகவும் இருக்க வேண்டும்.
காரியங்களில் குறையிருந்தால், ‘நமக்கு மட்டுமே பொறுப்பு' என்ற மனநிலை வேண்டும்.
மற்றவர் குறைகளுக்கு நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளும் தெளிவு வேண்டும்.
அதிகப்பட்ச அறிவுடன் செய்யும் காரியங்களில் 100% அறியாமை கலந்திருப்பது தெரிய வேண்டும்.
பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, குறையில்லை என்றுணர வேண்டும்.
பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, நிறை என்ற அறிவு வேண்டும்.
முழுத் தவறு, பாவம், குற்றம் என்ற அளவில் கண்ணால் கண்ட நிகழ்ச்சி, காதால் கேட்ட சொல், தீர்க்கமாக விசாரித்து முடிவு செய்தது, இவை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அதனுள் முழு உயர்வு, புண்ணியம், சேவை நிரம்பியுள்ளன என்று அறிவு உணர வேண்டும்.
அறிவு உணர்ந்ததை நம்முள் அனைத்தும் யோக ஞானமாக விரும்பி, விழைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம் -
அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள் - திரு. கர்மயோகி அவர்கள்

Tuesday 22 April 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் -17

 மலரும் மலர் கூறும் செய்தியும் -17

Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   : 

Crossostephium  -       Chinese lavender

      Thirst to Understand  (புரிந்து கொள்வதில் ஆர்வம் தரும் மலர் )
      Very useful for transformation.

நாம் பல விஷயங்களை சரியாக புரிந்து கொள்வதே, நமது முன்னேற்றத்திற்கும், திருவுருமாற்றத்திற்கும் உதவும்.

By the understanding we mean that which at once perceives, judges and discriminates, the true reason of the human being not subservient to the senses, to desire or to the blind force of habit, but working in its own tight for mastery, for knowledge. 

- The Mother.

Photo Courtesy :      http://stuartxchange.com/Anjenjo.html

இன்றைய செய்தி/ Message of the Day :

Mother says.....    

Quite naturally we ask ourselves what this secret is, towards which pain leads us. For a superficial and imperfect understanding, one could believe that it is pain which the soul is seeking.

Nothing of the kind. The very nature of the soul is divine Delight, constant, unvarying, unconditioned, ecstatic; but it is true that if
one can face suffering with courage, endurance, an unshakable faith in the divine Grace, if one can, instead of shunning suffering when it comes, enter into it with this will, this aspiration to go
through it and find the luminous truth, the unvarying delight which is at the core of all things, the door of pain is often more
direct, more immediate than that of satisfaction or contentment.

- The Mother

( ஆன்மாவைப் பற்றிய உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஆன்மா துன்பத்தை நோக்கியே செல்கிறது என்ற புரிதல் தவறானது. ஆன்மா தன்னிலையில் இருந்து மாறாத இறைவனின் ஒளியை கொண்டது. )

Mother says about Understanding the God as your best friend...
...........And finally, the best friend one can have
—isn’t he the Divine, to whom one can say everything, reveal everything? For there indeed is the source of all compassion, of all power to efface every error when it is not repeated, to open the road to true realisation; it is he who can understand all, heal all, and always help on the path, help you not to fail, not to falter, not to fall, but to walk straight to the goal. He is the true friend, the friend of good and bad days, the one who can understand, can heal, and who is always there when you need him. When you call him sincerely, he is always there to guide and uphold you—and to love you in the true way.
(இறைவன் ஒருவனே நமக்கு மிகச் சிறந்த நண்பன். அவன் ஒருவனே நம்மை முழுவதுமாக புரிந்து கொண்டவன். நீங்கள் அழைக்கும் பொழுது, உங்களை வழிநடத்தவும், உண்மையான அன்பு செலுத்தவும் அவன் எப்பொழுதும் இருக்கிறான்.)
 - ஸ்ரீ அன்னை 
Ref: Question and Answers 1929

புரிந்து கொள்ளுதல் பற்றி கர்மயோகி அவர்களின் சில கருத்துகள்....

ஆன்மாவுக்கு மாறுவதற்கு வழிமுறைகள் என்னவென்றால், நம்புவது, புரிந்து கொள்ளுதல், மற்றும் மாறுவது என்பதாகும். ஆன்மா மனதைவிட சக்தி வாய்ந்தது என்று நீ ஏற்றுக் கொள்கிறாயா என்று நீ உன்னையே கேள். அப்படி நம்பமுடியவில்லை யென்றால், ஆன்மாவிற்கும் மனதிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, நம்பிக்கை உண்டாக்கும் வரை அதை புரிந்து கொள்ள முயற்சி செய். எவ்வாறு உடலைவிட மனம் சக்தி வாய்ந்ததோ, அதுபோல் மனத்தைவிட ஆன்மா சக்தி வாய்ந்ததாகும். ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டதும் அந்த நம்பிக்கையை தீவிரப்படுத்தினால், ஆன்மாவின் உயர்ந்த தன்மையை உன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் காணமுடியும்.

சரியாகப் புரிந்து கொள்ளுதல், நம்பிக்கையை வலுப்படுத்தும். அமைதியும் மௌனமும் உள்ளே ஏற்படுவதற்கு, ஏற்கனவே தயாராகிவிட்டது என்பதை அறியலாம். தற்செயலாய் நடக்கக்கூடியது என்று எண்ணாமல், உள்ளே வேலையை ஒரு மனதாய் தீவிரமாக திடமான முயற்சியுடன் ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் அடுத்த கட்டமான உள்ளுரை உயர்ந்த அமைதிக்கு மாற்றவேண்டும். உள்ளே ஏற்பட்ட அமைதி, நீ உன்னுடைய எண்ணத்தை உயர்நிலைக்கு மாற்ற தயார் நிலைக்கு வந்து விட்டாய் என்பதைக் குறிக்கும்.

வெறுமனே சும்மா உட்கார்ந்திருக்காதே. ஏதாவது ஒன்றில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதை முழுமையாக செயல்படுத்து. அப்படி செயல்படும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் எண்ணத்தை மௌனத்திற்கு மாற்றம் செய். அது நகரும். வாழ்வு உன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப இனிமையாக வளைந்து கொடுக்கும். பொறுமையுடன் காத்திரு. ஒரே நாளில் சூழல் முற்றிலும் மாறி உனக்கு சாதகமாகவும் இனிமையானதாகவும் அமையும். இப்பொழுது உனக்கு எப்படி செயல்பட வேண்டுமென்று புரியும்.
        
 - திரு கர்மயோகி அவர்கள்,
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 10 . பகுதி - 9
கட்டுரைகளில் இருந்து

 -------------------------------------------------------------------------------------------------------------------------

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,

Friday 18 April 2014

Message of the day - God has a sense of humour -

They proved to me by convincing reasons that God did not exist, and I believed them. Afterwards I saw God, for He came and embraced me. And now which am I to believe, the reasonings of others or my own experience?
- Sri Aurobindo - Book - On thought and Aphorisms

Mother on Sri Aurobindo's Thought:

Sri Aurobindo is not asking a question, but rather making an ironic comment. It is to bring out clearly the stupidity of the reasonings of the mind, which imagines it can speak of what it does not know. It is nothing else........... 
...........Someone has asked me, “How is it possible for God to reveal Himself to an unbeliever?” That’s very funny; because if it pleases God to reveal Himself to an unbeliever, I don’t see
what would prevent Him from doing so!

On the contrary,He (God) has a sense of humour—Sri Aurobindo has told us many times already that the Supreme has a sense of
humour, that we are the ones who want to make Him into a grave and invariably serious character—and He may find it very amusing to come and embrace an unbeliever. Someone who
has only the day before declared, “God does not exist. I do not believe in Him. All that is folly and ignorance....”, He gathers him into His arms, He presses him to His heart—and He laughs
in his face.

 -The Mother

ஆஸ்திகன் நல்லவன்; நாஸ்திகன் கெட்டவன் என்பது நம் கருத்து. நாஸ்திகனுக்குள்ள தெய்வ நம்பிக்கை ஆஸ்திகனுடைய தெய்வ நம்பிக்கையைவிட உயர்ந்தது என்பது ஆன்மிக உண்மை. புண்ணியத்தை நாம் வரவேற்கின்றோம். பாவத்தை வெறுக்கின்றோம். அவை இரண்டும் ஆன்மிகப் பாதையிலுள்ள இரண்டு கட்டங்கள் என்பது சித்தி பெற்றவர்களுடைய விளக்கம்.
 சிந்தனை மணிகள் -திரு. கர்மயோகி அவர்களின் கட்டுரையில் இருந்து

Tuesday 15 April 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் -16 - Devotional Attitude

 மலரும் மலர் கூறும் செய்தியும் -16

Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   : 
 Devotional Attitude - இறைவனை நோக்கிய பக்திசிந்தனையுடன் கூடிய மனபாங்கைப் பெற உதவும் மலர் மற்றும் பழம்.

Common name: Aegle marmelos, commonly known as bael, Bengal quince, golden apple, stone apple, wood apple, bili,

வில்வ மரப் பூ மற்றும் விளாம்பழம் / வில்வம் மரத்தின் பழம்

இன்றைய செய்தி/ Message of the Day :

Mother says.....    

I even go so far as to affirm that in the zone of immediate influence of each one, the right attitude not only has the power to turn every circumstance to advantage but can change the very circumstance itself.........
( சரியான மனபாங்கு அல்லது மனப்பான்மை மட்டுமே ஒவ்வொரு செயலையும் அல்லது நிகழ்வையும் , சரியாக நடக்க வைக்கும்அல்லது சரியான முறையில் மாற்றியமைக்கும் சக்தி படைத்தது)

" Is it really the best that always happens?... It is clear that all that has happened had to happen: it could not be otherwise— by the universal determinism it had to happen. But we can say
so only after it has happened, not before. For the problem of the very best that can happen is an individual problem, whether the individual be a nation or a single human being; and all depends
upon the personal attitude..
"
- The Mother

(நடக்கும் எந்த நிகழ்விலும் சிறப்பானது மட்டும்தான் நடக்கிறதா? எது நடக்க வேண்டுமோ அது நடந்துவிட்டது என்று ஒரு நிகழ்வு நடந்தபின்தான் கூறுகிறோம். எந்தப் பிரச்சனை ஆனாலும், நடக்கும் நிகழ்வு,  சம்பந்தப்பட்டவருடைய சொந்த மனப்பான்மையினை பொறுத்தது, அது ஒரு தனி மனிதனாகவும் இருக்கலாம் அல்லது ஒரு தேசமாகவே இருக்கலாம். )

"If, in the presence of circumstances
that are about to take place, you can take the highest attitude possible—that is, if you put your consciousness in contact with the highest consciousness within reach, you can be absolutely sure that in that case it is the best that can happen to you. But as soon as you fall from this consciousness into a lower state, then it is evidently not the best that can happen, for the simple reason that you are not in your very best consciousness.
( நடக்கப் போகும் எந்த செயலிலும், நீங்கள் எந்த அளவிற்கு ஒரு உயர்ந்த மனப்பான்மையினைக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு உயர்ந்த ஒரு விழிப்புடன் consciousness இருந்தால், நடக்கும் செயல் அந்த அளவிற்கு உயர்ந்ததாக இருக்கும். ஆனால், நீங்கள் விழிப்புடன் consciousness இல்லாமல் ஒரு தாழ்ந்த மனப்பான்மையைக் கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக நடக்கும் நிகழ்வு அவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில், நீங்கள் உங்களது செயல் உயர்ந்த மனப்பான்மையுடன் attitude உடன் இல்லை என்பதே அதன் காரணம்.)

 - ஸ்ரீ அன்னை 
Ref: Question and Answers 1929
மனப்பான்மை செயலை நிர்ணயிக்கும், அதுவே மனத்தை நிர்ணயிக்கும். அதுவே யோகப்பலனை நிர்ணயிக்கும். அறிவில் தெளிவு தேவை. மனம் தெளிவாக இருக்க வேண்டும். கொள்கை புரிய வேண்டும். ஏன் செய்கிறோம் என அறிய வேண்டும். அதுவே முக்கியம்.                  
 - திரு கர்மயோகி அவர்கள், யோக வாழ்க்கை விளக்கம் கட்டுரைகளில் இருந்து

 -------------------------------------------------------------------------------------------------------------------------

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,

Thursday 10 April 2014

அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.

அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.

நமது சிந்தனைக்கு:

நாம் எல்லோருமே ஏதோ ஒரு வழியில் இறைவனை பற்றி சிந்திக்கிறோம். ஆன்மீகம் கூறும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவர், தம் வாழ்வில் அவற்றை செயல்படுத்த எவ்வளவு தூரம் முயல்கிறார் என்பது கேள்விக்குரியதே. தம்மிடம் உள்ள குறைகளை, பிரச்சனைகளை, குணக்குறைகளால் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தம்மை தாமே சுத்தி செய்து கொள்ள நம்மில் எவ்வளவு பேர் தயாராக உள்ளோம் என்பதும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. நான் அப்படிதான் இருப்பேன், இதுதான் என் குணம் என்று கூறும் கடுமையான குணம் கொண்ட ஒருவர், எத்தனை ஆன்மீக நூல்களைப் படித்தாலும், ஆன்மீக முறைகளை பின்பற்றினாலும், ஆன்மீகத்தின் உண்மையை அவர் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

நம்மை நாம் முழுமையாக அறிவது என்பது நமது குறைகளை விலக்கி, பொய்யை அழித்து இறைவனிடம் நம்மை முழுமையாக நெருங்கச் செய்யும் வழியாகும். இது இறைவனை பற்றிய உண்மையை நாம் அறிந்து கொள்ளும் வழியுமாகும்.

" A single day spent in contemplation of the supreme Truth is worth more than a hundred years lived in ignorance of the supreme Truth. "
                               -The Mother

அன்னையின் பாதையில்:

அன்னையின் பாதையில், நமது போலித்தனமான எந்த எண்ணங்களுக்கும் பொய்களுக்கும் இடமில்லை. நம்மை நாம் உணர்ந்து கொள்ள, வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமக்கு வழிகாட்டும் என்கிறார் அன்னை. நான் நல்லவன், என்னால் யாருக்கும் தீமை இல்லை என்று நம்புபவர், தனக்கு சாதகமில்லாத சந்தர்பங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கவனித்தால் அவரைப் பற்றிய உண்மை விளங்கும்.

You believe you are so good, so kind, so well disposed and always full of good feelings. You wish no harm to anybody, you wish only good—all that you tell yourself complacently. But if you look at yourself sincerely as you are thinking, you notice that you have in your head a collection of thoughts which are sometimes frightful and of which you were not at all aware.

For example, your reactions when something has not pleased you: how eager you are to send your friends, relatives, acquaintances, everyone, to the devil! How you wish them all kinds of unpleasant things, without even being aware of it! And how you say, “Ah, that will teach him to be like that!” And when you criticise, you say, “He must be made aware of his faults.” And when someone has not acted according to your ideas, you say, “He will be punished for it!” and so on. You do not know it because you do not look at yourself in the act of thinking.
- ஸ்ரீ அன்னை

"நான் நல்லவன், என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனது அருமையை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்குத்தான் நஷ்டம். ஒருநாள் தகுந்த பாடத்தை அவர்கள் பெறுவர் " என்று ஒருவர் நினைக்கிறார் என்றால், அவரை நல்லவர் என்று கூற முடியுமா? அவரும் மற்றவர்களுக்கு தீமை செய்கிறார் இல்லையா? இங்கு அவருடைய EGO தான் செயல்படுகிறது என்பதையும் நாம் கூற முடியும். இவ்வாறு நினைப்பதன் மூலம், அவர் தன்னை பற்றி, தன்னில் இருக்கும் தீய குணத்தைப் பற்றி அறியவில்லை என்பதும் நமக்கு புலப்படுகிறது.

அன்னை இது போல பலவிதமான எண்ணங்களைக் குறிப்பிடுகிறார். "நான் கூறிய புத்திசாலித்தனமான யோசனையை அவர் ஏற்கவில்லை. இதன் பலனை மற்றவர் அனுபவிக்கவேண்டும்" என்று அறிவாளியான ஒருவர் நினைத்தால், அவர் அன்னையின் கூறும் சத்தியப்பாதையில் இல்லை என்றுதானே பொருள்?
 
Sometimes you know it, when it becomes a little too strong. But when the thing simply passes through, you hardly notice it—it comes, it enters, it leaves. Then you find out that if you truly want to be pure and wholly on the side of the Truth, then that requires a vigilance, a sincerity, a selfobservation, a self-control which are not common.

இது போன்ற பல விஷயங்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். அப்போது நாம் செயல்படும் முறைகளில் நாம் தெரிந்தோ அல்லது நம்மை அறியாமலோ இது போன்ற தவறுகளை செய்யலாம். இதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள என்ன வழி? அன்னையே இது பற்றுக் கூறுகிறார்.

You begin to realise that it is difficult to be truly sincere. You flatter yourself that you have nothing but good feelings and good intentions and that whatever you do, you do for the sake of what is good—yes, so long as you are conscious and have control, but the moment you are not very attentive, all kinds of things happen within you of which you are not at all conscious and which are not very pretty.

ஒவ்வொரு சந்தர்பத்திலும், நாம் உண்மையுடன் செயல்படுகிறோமா என்ற விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த விழிப்பு இல்லாத போது, நம் செயலின்   விளைவுகளும் நன்றாக இருக்காது என்கிறார் அன்னை.

எப்படி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டுமோ அது போல, நாம் நம் மனதை, எண்ணங்களை சுத்தமாக, தூய்மையுடன் வைத்துக் கொள்ள விரும்பினால், விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மில் வரும் எண்ணங்களை ஆளுமை செய்யும் திறனைப் பெறவேண்டும். சத்தியத்துடன் மட்டுமே இருப்பேன் என்ற உறுதியும் வேண்டும். தீய மற்றும் குறுகிய சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் செயல்படவேண்டும் என்கிறார் அன்னை.

If you want to clean your house thoroughly, you must be vigilant for a long time, for a very long time and especially not believe that you have reached the goal, like that, at one stroke, because one day you happened to decide that you would be on the right side. That is of course a very essential and important point, but it must be followed by a good many other days when you have to keep a strict guard on yourself so as not to belie your resolution.
Ref:
Questions and Answers1929-31

Tuesday 8 April 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் -15 - Refinement - மனம், உணர்வு, எண்ணம் தூய்மை பெறுதல்

 மலரும் மலர் கூறும் செய்தியும் -15

Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :
Refinement of habits

Common name: Mexican lilac, Mother of cocoa, Quickstick • Tamil: சீமை அகத்தி Seemai agathi • Malayalam: Seema konna • Telugu: Madri • Bengali: Saranga • Kannada: Gobbarda mara

 நமது பண்புகளையும், பழக்கங்களையும் சுத்தி செய்து கொள்ள உதவும் மலர்.
Mexican Lilac
Photo Courtesy: flowersofindia.net                                       Photo: Dinesh Valke

இன்றைய செய்தி/ Message of the Day :

" Surely primitive man was very material, very near the animal. And as the centuries pass, man becomes more mental and more vital; and as he becomes more vital and mental, naturally refinement is possible, intelligence grows, but also  the possibility of perversion and distortion. You see, there is a difference between educating one’s senses to the point of being able to bring in all kinds of refinements, developments, knowledge, all the possibilities of appreciation, taste, and all  that—there is a difference between this, which is truly a development and progress of consciousness, and attachment or greediness."
- The Mother

(ஆதி காலத்து மனிதன் ஜடப் பொருட்களைளைச் சார்ந்து, மிருகங்களைப் போல வாழ்ந்தான். நூற்றாண்டுகள் செல்லச்  செல்ல அவன் மனதையும், உணர்வையும் சார்ந்தவன் ஆனான். அப்போது அவனது பகுத்துணர்வும், அறிவும் வளர்ந்ததால் அவன் தன்னை மாற்றிக்கொள்ள, நல்ல வழியில் சுத்தி செய்து கொள்ள சந்தர்பங்கள் இருந்தாலும், தவறான வழிகளில் செல்லவும் சந்தர்பங்கள் உள்ளன. நமது Consciousness ன் உண்மையான முன்னேற்றம் என்பது, நமது உணர்வுகளையும், மனதையும் சரியான வழியில் திருப்பி, நமது பழக்கங்களையும், எண்ணங்களையும், மனதையும் சுத்தி செய்து கொள்வதில்தான் உள்ளது. )

"Usually all education, all culture, all refinement of the senses and the being is one of the best ways of curing instincts, desires, passions. To eliminate these things does not cure them; to cultivate, intellectualise, refine them, this is the surest means of curing. To give the greatest possible development for progress and growth, to acquire a certain sense of harmony and exactness of perception, this is a part of the culture of the being, of the education of the being. It is like the people who cultivate their intelligence, who learn, read, think, compare, study.

       - ஸ்ரீ அன்னை 
Ref: Question and Answers

  • சுத்தி முக்தி தரும்.
  • மனம் தூய்மைப்பட வேண்டும். அத்துடன் ஆசைக்குட்பட்ட ஆத்மாவும் தூய்மை பெற்றால் முக்தி கிட்டும்.
  • . ஆசையழிந்தால் ஆத்மாவின் பிராணன் (உயிர்) விடுதலை பெறும்.
  • தவறான உணர்வு தன்னையழித்துக்கொண்டால் இதயம் விடுதலை பெறும்.
  • எண்ணம் சிறுமையை இழந்தால் அறிவு விடுதலை பெறும்.
  • ஜடமான அறிவு அழிந்தால் ஞானம் உதயமாகும்.
  • பிராணன், இதயம், அறிவு ஆகியவை கரணங்கள்.
  • கரணங்கள் தூய்மைப்பட்டால், கரணங்கள் விடுதலை பெறும்.
  •  
  • சுத்தம், புறத் தூய்மை, அகத் தூய்மை என இரு பகுதிகளாகும். இரண்டும் இருந்தால் சிறப்பு. வாழ்க்கையில் அது முழு யோகம். அகத் தூய்மை மிக உயர்ந்தது.  
  •  
  • மனம் முறையாக இருந்தால்தான், பொருள்களை முறையாக வைக்க முடியும் (பொருள்களை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்பதன் மூலம், மனத்தை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பொருள்). முறைப்படுத்தப்பட்ட மனத்தில் அன்னையின் சக்தி தீவிரமாகச் செயல்படும்.
                  
 - திரு கர்மயோகி அவர்கள், ஆன்மாவின் விடுதலை, அன்பர் வழிபாடு 
கட்டுரைகளில் இருந்து

 -------------------------------------------------------------------------------------------------------------------------

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,

Tuesday 1 April 2014

 மலரும் மலர் கூறும் செய்தியும் -14

Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :
Realisation
The goal of our efforts.

Delonix regia - GULMUHAR
Flamboyant, Peacock flower, Flame tree
மலரின் பலன் : Realisation- இறைவனை  உணர்தல் - இறைவனை நாம் உணர, அறிய உதவும் மலர்.

Image Courtesy : digitalfrescos.com
இன்றைய செய்தி/ Message of the Day :

" In all the states of being, in all the modes of activity, in all things, in all the worlds, one can meet Thee (இறைவன்) and unite with Thee, for Thou art everywhere and always present. He who has met Thee in one activity of his being or in one world of the universe, says “I have found Him” (நான் இறைவனை கண்டுவிட்டேன் ) and seeks nothing more; he thinks he has reached the summit of human possibilities.What a mistake! In all the states, in all the modes, in all things, all worlds, all the  elements we must discover Thee and unite with Thee and  if one element is left aside, however small it may be, the  communion cannot be perfect, the realisation cannot be accomplished. "
- The Mother

(இறைவன் இல்லாத உயிர்களில்லை, செயலில்லை, உலகமில்லை, இடமில்லை. இறைவனை நாம் எங்கும் காண முடியும், எப்போதும் அவனைக் காண முடியும். ஒரு செயலில் மட்டுமே  அல்லது தன்னுடைய உலகில் மட்டுமே   இறைவனை கண்ட ஒருவன் "நான் இறைவனைக் கண்டுவிட்டேன்" என்று எப்படிக் கூற முடியும். இது என்ன ஒரு தவறான செயல்! எல்லா நிலைகளிலும், எல்லா முறைகளிலும், எல்லா பொருட்களிலும், எல்லா உலகங்களிலும் இறைவனைக் கண்டு அவனோடு நாம் ஒன்றானால் மட்டுமே, இறைவனை உணர்வது என்பது முழுமை பெறும் .)

Only a realisation independent of all outer circumstances, free from all attachment and all understanding, however high, is a true realisation, a valuable realisation. And the only such realisation is to unite with Thee integrally, closely,
definitively.
       - ஸ்ரீ அன்னை 

Mother says :THERE is no longer an “I”, no longer an individuality, no longer any personal limits. There is only the immense universe, our sublime Mother, burning with an ardent fire
of purification in honour of Thee, O Lord, divine Master, sovereign Will, so that thisWill may meet with no farther obstacle in the way of its realisation.

Ref: Prayers and Meditations

கான் ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்திற்கு ஒரு புதுக் குறிக்கோளையும் அளிக்கின்றார். ‘ஆத்மா என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இறைவனின் பிரதிநிதியாக இருக்கின்றது’ என்பதை நாம் பொதுவாக அறிவோம். யோக மரபுப்படி உலகத்துக்கு ஓர் ஆத்மா உண்டு; பிரபஞ்சத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு (Universal Soul). ஸ்ரீ அரவிந்தர், ‘மனிதனுடைய ஆத்மாவுக்கு இந்த இரண்டு அம்சங்களும் உண்டு’ என்பதை நினைவுபடுத்துவதுடன், ‘மனிதனாகிய தன்னை ஆத்மாவாக அறிந்ததுடன் நில்லாமல் யோகி தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் உணர வேண்டும்’ (A Centre of Universal Soul) என்று கூறுகின்றார். அதோடு, பரம்பொருளை இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவும் யோகி உணர வேண்டும் என்றும் கூறுகிறார். தன்னையும், பிரபஞ்சத்தையும், அப்பாலுக்கும் அப்பால் உள்ள இறைவனையும் ஆத்மாவாக உணர்தல் என்பது ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகத்தின் முதற்படியின் மூன்று பாகங்களாகும்.
                  
 - திரு கர்மயோகி அவர்கள், எல்லாம் தரும் அன்னை  - ஸ்ரீ அரவிந்தரின் யோகம்

 -------------------------------------------------------------------------------------------------------------------------

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.