இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday 28 August 2014

அன்னையின் பாதையில் : நமது வாழ்வு இறைவனுடன் கூடிய வாழ்வாக மாற, நமது அறியாமை விலகவேண்டும்


நமது சிந்தனைக்கு:

வாழ்வில் தாழ்ந்தவற்றை அனுமதித்தல், பிறரை மதிப்பிடுதல் என்பது அன்னை அன்பருக்குத் தேவையில்லாதது என்பது பற்றிய கட்டுரையை நாம் முன்பே  பார்த்துள்ளோம். நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நமது வாழ்கையின் பெரும்பகுதியில் போலியாக, பிறரின் Judgement காக மட்டுமே நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்பதும் புரியும். நாமும், தேவையே இல்லாமல் பிறரை Judge செய்வதில் எவ்வளவு நேரம் வீணடித்து உள்ளோம் என்பதும் நமக்குப் புரியும். அன்னையின் சத்தியஜீவிய வாழ்வு, இறைவனை உணர்தல் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டதாகும். சத்தியஜீவியத்தில் (Supramental Life) நாம் நுழைய, சாதாரண வாழ்வில், நாம் பின்பற்றும் பல விஷயங்களைக் கைவிட வேண்டும்.

உண்மை என்னவென்றால், நமது வாழ்வு இறைவனுக்காக மாற, இறைவனின் கருவியாக நாம் மாறுவதற்கு, இறைவனுக்கு உகந்ததை மட்டுமே நாம் ஏற்றாக வேண்டும்.

இறைவனை நோக்கியே சிந்தனை உள்ள சிலரும், தமது சொல், செயல், பண்பு, சிந்தனை, எண்ணம் ஆகிய எல்லாவற்றிலும் தாம் அறிந்தோ, அறியாமலோ தாழ்ந்ததை ஏற்பதால் அல்லது அனுமதிப்பதால், இறைசிந்தனையில் இருந்து, இறைவனின் Consciousness ல் இருந்து விலகுகிறார்கள்.

நம்மை இறைவனில் இருந்து விலக்கும் விஷயங்களைப் பற்றி அறிந்து அவற்றை நம் வாழ்க்கையில் இருந்து விலக்க முயற்சிக்க வேண்டும். சத்தியஜீவிய வாழ்வினை அடைய இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இன்று ஸ்ரீ அன்னை கூறும் ஒரு கருத்தைக் காண்போம்.
"Judging people is one of the first things which must be totally swept away from the consciousness before you can take even a step on the supramental path, because that is not a material progress or a bodily progress, it is only a very little progress of
thought, mental progress. And unless you have swept your mind clean of all its ignorance, you cannot hope to take a step on the supramental path"
ஸ்ரீ அன்னையின் கருத்துகளின் வாயிலாக நாம், பிறரை மதிப்பிடுவது அல்லது இவர் நல்லவர் /  கெட்டவர், இவர் இப்படிதான் என அபிபிராயங்களைக்  கொள்வது என்பது இறை சிந்தனையில் இருந்து நம்மை முற்றிலும் விலக்கி விடுகிறது என்பது நமக்குப் புரிகிறது. இத்தகைய பண்பு நம்மை முற்றிலும் சத்தியஜீவிய வாழ்வில் இருந்தும் விலக்கிவிடுகிறது என்கிறார் அன்னை. இந்த அறியாமையில் இருந்து நாம் முற்றிலும் விலகினால் மட்டுமே, சத்தியஜீவிய வாழ்வில் நாம் அடியெடுத்து வைக்க இயலும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

All these ideas of good and evil, good and bad, higher, lower, all these notions belong to the ignorance of the human mind, and if one really wants to come into contact with the divine
life, one must liberate oneself totally from this ignorance, one must rise to a region of consciousness where these things have no reality. The feeling of superiority and inferiority completely disappears, it is replaced by something else which is of a very different nature—a sort of capacity for filtering appearances, penetrating behind masks, shifting the point of view.

இங்கு அன்னை கூறியதன் அடிப்படையில் பார்த்தால் நன்மை, தீமை, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பன போன்ற அபிபிராயங்கள் எல்லாம் மனித மனத்தின் அறியாமையே. ஆன்மீக வாழ்வில் வர விரும்பும் ஒருவர், இத்தகைய சிந்தனைகளில் இருந்து, தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். இறை உணர்வில் நாம் இருக்கும் போது, இத்தகைய சிந்தனைகள் யாவும் நீக்கப்பட்டு, வெளிலே தெரியும் தோற்றங்களைக் கடந்து, உள்ளே இருக்கும் உண்மையை மட்டுமே காணும் ஞானம் நமக்கு வருகிறது என்கிறார் அன்னை.

All this contact, this ordinary perception of the world loses its reality completely. This is what appears unreal, fantastic, illusory, non-existent. There is something—something very material,
very concrete, very physical—which becomes the reality of the being, and which has nothing in common with the ordinary way of seeing. When one has this perception—the perception of the work of the divine force, of the movement being worked out behind the appearance, in the appearance, through the appearance— one begins to be ready to live something truer than the ordinary human falsehood. But not before.

இங்கு அன்னை மிகவும் விளக்கமாக இது பற்றிக் கூறுகிறார். நமது சாதாரண கண்ணோட்டத்தில் நாம் காண்பவை யாவும் unreal, fantastic, illusory, non-existent என்கிறார். இத்தகைய தடைகள் எல்லாவற்றையும் தாண்டி, நாம் பார்க்கும் perception ஐ, அதாவது அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டால், மனிதன் வாழ்வின் பொய்யில் இருந்து விலகி இறைவனின் உண்மையான கருவியாக வாழலாம் என்கிறார் அன்னை.







Tuesday 26 August 2014

மலரும், அது கூறும் செய்தியும் - இறைவனின் மீதான நம்பிக்கை



Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :

சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட அடுக்குச் செம்பருத்திப் பூ
Hibiscus rosa-sinensis - Chinese hibiscus, Hawaiian hibiscus, Rose- of-China

மலரின் பலன்   :
Faith - நம்பிக்கை 

HIBISCUS ROSA-SINENSIS, Rose-of-China
Image Courtesy : http://www.backyardnature.net,





இன்றைய செய்தி/ Message of the Day :

"Answers from Mother" என்ற நூலில் இருந்து ஒரு சிறிய பகுதி.

I repeat: having faith in yourself cannot take you very far and it is certain that sooner or later you will feel a reaction and be obliged to stop.
First establish the true attitude, which is to find your base, your support and your help in the Divine alone—then all possibility of fatigue will disappear. Until then it is better to let the
servant do at least part of the work, which you can supervise if you like.
(Summary or related thought - Not the Translation ) 
நாம், நம்மீது மட்டும் நம்பிக்கை வைத்து செய்யும், எந்த செயலும் நம்மை  (வாழ்வில் ) வெகு தூரத்திற்கு அழைத்துச் செல்லாது. விரைவிலேயே அதற்கான பலனை நீங்கள் உணர்ந்து, அதனை நிறுத்த வேண்டிய கட்டாயம் வரலாம். 

செய்யும் எந்த செயலிலும், இறைவனை மட்டுமே துணையாக, உதவியாக, அடிப்படையாகக் கொள்ளும் உண்மையான மனப்பாங்கினை நாம் கொண்டால், எந்த செயலினை செய்யும் போது, அதில் ஏற்படும் சோர்வும், களைப்பும் மற்றும் பிரச்சனைகள் நீங்குககின்றன.
 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Sunflower






Friday 15 August 2014

Darshan Day Message - Sri Aurobindo's Birthday

 The Divine is everywhere and in all—but this is a world of Ignorance in which each one is separated from the Divine within him by his ego and he acts according to the ego and not according to the Divine. When he sees the Divine in all, then he begins to have the right consciousness and be free. 

From letters on Yoga 

Wednesday 13 August 2014

மலரும் அது கூறும் செய்தியும் - Sunflower - சூரியகாந்தி பூ



Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :
Sunflower - சூரியகாந்தி பூ 
 
மலரின் பலன்   :
Body-Consciousness undergoing the Supramental Transformation
உடலின் திருவுருமாற்றம்


Photo Courtesy : www.digitalfrescos.com



இன்றைய செய்தி/ Message of the Day :

அன்னை தனது அஜெண்டா என்ற நூலில் தனது ஆன்மீக வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார்.  உடலின் திருவுருமாற்றங்களைப் பற்றிய பல்வேறு செய்திகளையும் அவர் அதில் கூறியுள்ளார். அதில் இருந்து ஒரு சிறிய பகுதி.
Mother says  :


When we speak of transformation, the meaning of the word is still vague to us. It gives us the impression of something that is going to happen which will set everything right. The idea more or less boils down to this: if we have difficulties, the difficulties will vanish; those who are ill will be cured of their illness; if the body has infirmities or incapacities, the infirmities or incapacities will fade away, and so forth ... But as I have said, it is very vague, it is only an impression. Now, what is quite remarkable about the body consciousness is that it is unable to know a thing with precision and in all its details except when it is just about to be realized. Thus, when the process of transformation becomes clear, when we are able to know by what sequence of movements and changes the total transformation will take place, in what order, by which path, as it were, which things will come first, which will follow – when everything is known, in all its details, it will be a sure indication that the hour of realization is near, for each time you perceive a detail accurately, it means that you are ready to carry it out.
(Summary - Not the Translation ) இங்கு அன்னை உடலின் திருவுருமாற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார். Transformation திருவுருமாற்றம் என்ற சொல்லின் அர்த்தமானது நமது தெளிவற்றதாக உள்ளது. எல்லாம் சரியாக நடக்க  ஏதோ ஒன்று நிகழ்வதாக அது நமக்கு ஒரு தோற்றத்தை அல்லது  பிம்பத்தை அளிக்கிறது. அதாவது, உடலின் திருவுருமாற்றம் என்பது எல்லா துன்பங்களையும் மறையச் செய்கிறது, நமது உடல் நோயில் இருந்து விடுபடுகிறது, நமது தகுதியற்ற தன்மைகளையும், பலவீனங்களையும் நம்மிடம் இருந்து விலக்குகிறது என்று நாம் எண்ணுவோம். ஆனால் இது ஒரு தெளிவற்ற எண்ணம் என்று அன்னை கூறுகிறார். நம்மால் எப்பொழுது, நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களையும், அவை எந்த முறையில், எந்த வழியில் நடக்கிறது மற்றும்  எது முதலில் வந்தது, எது நடக்கப்போகிறது என்பதையெல்லாம் உணர முடிகிறதோ, அதுவே இறைவனை உணரும் தருணம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள் இதனை தெளிவாக  உணர்கிறீர்கள் எனில், திருவுருமாற்றத்தினை ஏற்க நீங்கள் தயாராகி விட்டதாகப் பொருள் என்கிறார் அன்னை.

..........

it is quite certain that under the influence of the supramental light, the transformation of the body consciousness will take place first then will come a progress in the mastery and control of all the movements and workings of all the body’s organs; afterwards this mastery will gradually change into a kind of radical modification of the movement and then of the constitution of the organ itself. All this is certain, although rather vague to our perception. But what will finally take place – once the various organs are replaced by centers of concentration of forces, each with a different quality and nature and each acting according to its own special mode – is still a mere conception, and the body does not understand very well, for it is still very far from the realization, and the body can really understand only when it is on the point of being able to do.
 உடலின் திருவுருமாற்றம்  பற்றிக் கூறும் ஸ்ரீ அன்னை, சத்திய ஜீவிய ஒளியின் கீழ்  வரும்போது உடலின் உணர்வானது முதலில் திருவுருமாற்றம் பெறுகிறது. அதன் பின்பே உடலின் இயக்கங்களையும், அதன் ஒவ்வொரு உறுப்பைபையும் கட்டுப்படுத்தும் திறமையாகிய  முன்னேற்றம் வருகிறது என்கிறார். 
REF : Mother's Agenda Volume-1, The Mother,
 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Sunflower






Tuesday 5 August 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் - Wisdom - ஞானம்



Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :

Common name: Rain Tree, Coco tamarind,  Tamil: Amaivagai, Thoongumoonji maram
மலரின் பலன் :

Wisdom  - ஞானம் 


Rain Tree
flowersofindia.net          Photo : Photo: Dinesh Valke


இன்றைய செய்தி/ Message of the Day :

Mother says  :
My dear child,
The true wisdom is to be ready to learn from whatever source the knowledge can come.
We can learn things from a flower, an animal, a child, if we are eager to know always more, because there is only One Teacher in the world—the Supreme Lord, and He manifests
through everything.

With all my love.
அறிவு என்பது எதன் மூலமாக வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும், அதுவே உண்மையான ஞானம். நாம் எப்போதும் கற்கும் எண்ணம் மற்றும் ஆர்வம் உடையவராக இருந்தால், ஒரு பூ, ஒரு மிருகம் அல்லது ஒரு குழந்தையிடம் இருந்து கூட கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் உலகின் ஒரே ஒரு ஆசிரியரே உள்ளார், அவரே இறைவனாவார்.
True wisdom is to take pleasure in everything one does and that is possible if one takes everything one does as a way to progress. Perfection is difficult to attain and there is always a
great deal of progress to be made in order to achieve it.
 
செய்யும் எந்த செயலிலும் ஆனந்தத்தை அடைவதுதான் உண்மையான ஞானம். மேலும் நாம் செய்யும் எந்த செயலினையும் நமது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 
REF : On Education- The Mother, 

---------------------------------------------------                 ------------------------------------------------                   -------------------------------------------------

அறிவு ஞானமாவது எப்போது?
  • சிறிய காரியங்களில் அறிவு பலன் தரும்படிச் செயல்படும்.
  • பெரிய காரியங்களில் பலன்  பெற ஞானம் தேவை.
  • ஒரு முறைகூட பிரார்த்தனை தவறாதவர்க்கு பிரார்த்தனை தவறினால் அறிவு பீதியுறும், "ஞானம் பிரார்த்தனையைக் கடந்த நிலையை இது காட்டுகிறது'' எனக் கூறும்.
  • இந்த ஊரில் எவரும் செருப்பு அணியவில்லைஎனில் அறிவு இங்கு செருப்புக்கு மார்க்கட்டில்லைஎனக் கூறும். ஞானம் செருப்புக்கு இங்கு அளவு கடந்த மார்க்கட்டுள்ளதுஎனும்.
  • ஐரோப்பாவே சரணானபின் இங்கிலாந்து ஹிட்லர்முன் எம்மாத்திரம்என அறிவு அறிவுரை கூறும்பொழுது ஞானம், "இதுவே பெரிய வாய்ப்பு'' என்று வழி காட்டும்.
  • இனி நம்புவதற்கு ஒருவருமில்லை, ஒரு வழியுமில்லை என்று அறிவு அறுதியிட்டுக் கூறும்பொழுது ஞானம், "இதுவே அன்னையை அழைக்க அற்புதமான தருணம். எந்த நேரத்திலுமில்லாதபடி அன்னை செயல்படுவார்'' எனக் கூறும்.
 -கர்மயோகி அவர்ளின் பூரணயோகம் - முதல் வாயில்கள்
 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Indian Shot






About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.