Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Showing posts with label Prayer. Show all posts
Showing posts with label Prayer. Show all posts
Monday, 3 August 2015
Thursday, 8 January 2015
Message of the Day: Prayer - பிரார்த்தனை
Mother's Prayer to the Divine:
Teach us always more,
-From Prayers and Meditations by Annai
அன்னையிடம் இரு முக்கியமான மாற்றங்களுண்டு. வலுவான பிரார்த்தனைக்கு அதிகப் பலனுண்டு என்பது அன்னையிடமும் உண்மை என்றாலும், அன்னை பிரார்த்தனையின் வலிமையைவிட முக்கியமாக அழைப்பின் ஆர்வத்தைக் கருதுகிறார். ஆர்வமான அழைப்பை அன்னை உடனே ஏற்றுக்கொள்கிறார். நம்பிக்கையிருந்தால், அன்னை மற்றதைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையின் வலிமை, பூஜையின் சிறப்பு ஆகியவற்றைவிடப் பக்தியையும், நம்பிக்கையையும் அன்னை முக்கியமாகக் கருதுகிறார். மேலும் அன்னை மனிதனை நோக்கி வந்தபடியிருக்கின்றார். மனிதன் தன்னை அழைக்கட்டும், பூஜை செய்யட்டும் என இருப்பதில்லை. அவனை நோக்கி வரும் அன்னை, மனிதன் தன்னை நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். மனிதன் நினைத்தால் போதும். அன்னை வந்துவிடுவார். நம்மைச் சுற்றி அவரிருப்பதால் நாம் நினைத்தவுடன் அன்னை பலித்து விடுகிறார். அன்னை செயல்பட ஆரம்பித்தால் சூழ்நிலை மூலம் செயல்படுகிறார். சூழ்நிலையைச் சாதகமாக மாற்றி, சூழ்நிலையிலுள்ள மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் நம் பிரச்சினை தீர உதவும்படி செய்கிறார். நம் சாமர்த்தியத்தின் மூலமாகச் செயல்படுவதை விட இது பலமடங்கு அதிக சக்தியை வழங்குகிறது. நம் சூழ்நிலையே நமக்குச் சாதகமாக மாறுவதாலும், நம் அழைப்பிற்காக அன்னை காத்திருப்பதாலும், சிக்கல் தீராமலிருக்க வழியில்லை. கர்மயோகி அவர்களின் தீராத பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையல்ல என்ற கட்டுரையில் இருந்து.... |
Thursday, 25 December 2014
Message of the Day : Sri Mother's prayer to the DIVINE
Sri Mother's prayer to the DIVINE:
O Divine Master, grant that today may bring to us a completer consecration to Thy Will, a more integral gift of ourselves to Thy work, a more total forgetfulness
of self, a greater illumination, a purer love.
Grant that in a communion growing ever deeper, more constant and entire, we may be united always more and more closely to
Thee and become Thy servitors worthy of Thee.
Remove from us all egoism, root out all petty vanity, greed and obscurity.
May we be all ablaze with Thy divine Love;
make us Thy torches in the world.
A silent hymn of praise rises from my heart like the white smoke of incense of the perfumes of the East. And in the serenity of a perfect surrender, I bow to Thee in the light of the rising day.
.(From Prayers and Meditations The Mother)
*************************
அமைதி, சாந்தி என்பவற்றை பகவான் calm, quiet, stillness, silence என வேறுபடுத்திக் கூறுகிறார். ஓடும் எண்ணம் ஓடுவதை நிறுத்துவது, ஓட்டம் நிற்பது, stillness எண்ணங்கள் மனத்திலிருந்து ஓடாமலிருப்பது நிதானம், quiet. அவை ஓடும் திறமையை இழப்பது அமைதி, calm கீழிருந்து எழுபவை இது. இவை மேலிருந்து வருவது மௌனம் Silence. சமர்ப்பணம் பூர்த்தியாகி, சரணாகதி எழுந்து, அதுவும் பூர்த்தியாக எண்ணமும், சூட்சும எண்ணமும் சமர்ப்பணம் செய்யப்பட்டது போல் உணர்ச்சியும், சூட்சும உணர்ச்சியும் சமர்ப்பணமாக வேண்டும். முடிவாக உடல் என்பதில் சரணாகதி முடியும். உடலுக்கு உணர்வுண்டு; சூட்சுமம் உண்டு. அவைகளும் சமர்ப்பணமாக வேண்டும். சமர்ப்பணத்தில் யோகம் ஆரம்பித்து சரணாகதியில் முடியும். இவை யோக நிலைகளானால், நம்மால் முடிந்ததை முழுவதும் சமர்ப்பணம் செய்வது என்றால் என்ன? அதற்குரிய பலன் என்ன? அவை வாழ்வில் எப்படி பிரதிபலிக்கும் என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. இவற்றிற்கு,
- . குறைந்தபட்ச நிலையுண்டு.
- . அதிகபட்ச நிலையுண்டு.
- அவற்றைக் கடந்த நிலைகளும் உள்ளன.
- . குறைந்தபட்சம் என்பது முடிந்ததை முழுமையாகச் செய்து முடிப்பது.
- இதற்குரியது யோகப் பலன்.
- இதற்கடுத்தக்கட்ட யோகப் பயிற்சி நமக்குப் பலிக்கும் நிலை ஏற்படுவது அதற்குரிய வாழ்க்கைப் பலன்.
- இன்றுள்ள எல்லாப் பிரச்சினைகளும் மறையும்.
- இன்று எழக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் எழும்.
- எழும் வாய்ப்புகளில் நாம் மறுக்காதது, ஒதுக்காதது, வெறுக்காதவை,அத்தனையும் பலிக்கும்.
- . அதிகபட்சம் என்பது உடலுக்குரிய சூட்சும உணர்வு சமர்ப்பணமாகி சரணாகதியாகப் பலிப்பது.
- அது நடைபெற்றதற்கு அடையாளம் உடல் நன்றியறிதலால் புல்லரிப்பது.
- நம் சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அது அடையாளம்.
- அது நடந்தபின் நமக்குத் தேவையானதுஎன்று ஒன்றில்லை.
- அதன்பின் நடப்பவை அன்னைச் செயல்என்பதால் நாம் பேசவோ,நினைக்கவோ எதுவுமில்லை.
- கர்மயோகி அவர்களின் மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2007 » 06.முடிந்ததை முழுமையாக முடிப்பது முக்கியமான முறை என்ற கட்டுரையில் இருந்து..
Thursday, 4 December 2014
Message of the Day : ஒருவருடைய நம்பிக்கையால், அவருடைய பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா?
கருணையாலும், பாசத்தாலும், அன்பாலும், தேவையாலும் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும். அதுவும் பிறர் சுபாவத்தின் முரண்படாத அளவில் பலிக்கும். அகந்தையாலும், அறியாமையாலும், நிபந்தனை விதிக்கும் மனப்பான்மையாலும் செய்யும் பிரார்த்தனைகள் மாற்றத்தைத் தேடுபவர்கட்குப் பலிக்கா.
ஒருவருடைய நம்பிக்கையால், அவருடைய பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
இவை போன்று ஆயிரம் வேண்டுகோள்கள் அன்னையிடம் வரும். இவர்கள் அர்த்தமற்றவர்கள், வெட்கம் கெட்டவர்கள் என்று அன்னை சொல்வார். தவறான மனிதர்கள் வாழ்வில் திருந்துவதில்லை. அன்னையிடம் வந்த பின் இவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. திருந்த முயன்றால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.
- மனைவிக்கு அடங்கிய கணவன் (hen pecked husband) உயரவேண்டும்.
- திறமையற்ற கணவனுடைய வருமானம் 10 மடங்கு உயர வேண்டும்.
- சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டும்.
- அடங்காப்பிடாரியான மனைவியை அனைவரும் மதிக்க வேண்டும்.
மனைவிக்கு அடங்கிய கணவனுக்குச் சுயமரியாதை வேண்டும். மனைவி, தான் மாறி கணவனுக்கு அடங்க முன் வரவேண்டும்.
திறமையற்ற கணவனுக்கு 10 மடங்கு வருமானம் உயர மனைவிக்குக் கணவன் திறமையற்றவன் ஆனாலும் அவன் மீது மரியாதை 10 மடங்கு உயர வேண்டும்.
சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டியதில்லை. அதுவும் நடக்க வேண்டுமானால் அவனுக்கும் சேர்த்து தங்கை தன் சுயநலத்தை அழித்துக்கொள்ள வேண்டும்.
அடங்காப்பிடாரியை அனைவரும் அவமதிக்க வேண்டும். அவள் மாறி மரியாதை பெற, தன்னிடம் உள்ள எந்தக் குணம் அவளை மனைவியாகப் பெற்றதோ அதை மாற்ற கணவர் முன்வர வேண்டும்.
- பிரார்த்தனை அவரவர்களுக்குப் பலிக்கும்.
- அடுத்தவருக்குக் காரியம் நடக்க வேண்டுமானால் அடுத்தவரே பிரார்த்திக்க வேண்டும்.
- பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் உரிமை நமக்கில்லை, விதிவிலக்கான இடம் உண்டு.
- அங்கு நம் பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்க, அவருடைய குறைகள் நம்மிடமும் இருப்பதை அறிந்து, அவற்றை விலக்கிய பின், பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்பது சட்டம்.
- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற கட்டுரையில் இருந்து..
- The Mother
Tuesday, 2 September 2014
மலரும், அது கூறும் செய்தியும் : Prayer - பிரார்த்தனை பலிக்க உதவும் மலர்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Zephyr flower, Fairy lily, Rain lily மலரின் பலன் : Prayer - பிரார்த்தனை பலிக்க உதவும் மலர்
இன்றைய செய்தி/ Message of the Day :
Sri Mother's Prayer to the DIVINEஇறைவனிடம் ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனை
(Summary - Not the translation ) இறைவனே ! அமைதியாக எரியும் தீபம் போல, அசையாமல் மேலெழும்பிச் செல்லும் ஊதுபத்தியின் புகையினைப் போல போல, உன் மீது மாறாத அன்பு செலுத்துகிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரு குழந்தையினைப் போல, இறைவனின் எண்ணமே நிறைவேறும், இறைவனின் ஒளியே எங்கும் எழும், இறைவனின் அமைதியும், அன்பும் உலகை ஆட்கொள்ளும் என்ற மாறாத நம்பிக்கையோடு இருக்கிறேன். அமைதியான ஓடை, கடலில் கலப்பதைப் போல, இறைவனை அடையும் தருணத்தினை பொறுமையுடன் எதிர் நோக்குகிறேன். உன்னுடைய அமைதி என்னுள் உள்ளது, அந்த அமைதியில் நீ மட்டுமே, முடிவில்லாமல் எங்கும் உள்ளதை நான் காண்கிறேன். REF : -Prayers and Meditations - The Mother, -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Thursday, 23 January 2014
அன்னையின் பாதையில்: அன்னை வழங்கும் பூரண பாதுகாப்பை பெறுவது எப்படி?
நமது சிந்தனைக்கு:
தம்மை நாடி வரும் ஒவ்வொருவருக்கும், அவர்களின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே, அன்னையின் கருணை செயல்படுகிறது. நமது செயல்களின் வெற்றிகளும் தோல்விகளும், நமது எண்ணங்களையும், நாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையையும் பொறுத்தே அமைகின்றன. சிலர் ஏதேனும் செயல் தோல்வி அடையும் போது அல்லது எதிர்பாரதவிதமான விபத்துக்களைச் சந்திக்கும் போது, இறைவனின் பாதுகாப்பு நமக்கு ஏன் அப்போது இல்லை என்று சிந்திப்பதில்லை. மாறாக, இறைவனை குற்றம் சாட்டுகின்றனர்.
இறைவனின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும், சில சமயங்களில் செய்யும் மிகப் பெரிய தவறு இது. இறை நம்பிக்கை என்பது அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். கஷ்டங்கள் நேரும்போது, கவலைகள் சூழும் போது அல்லது உடல் நலன் பாதிக்கப்படும் போது, நாம் சிந்தித்துப் பார்த்தால், நாம் அந்த சமயம் இறைவனின் மீதான நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம், பயம் நம்மை சூழ்ந்து இருக்கலாம் அல்லது அன்னையின் பாதுகாப்பை விட்டு அகலுப்படியான செயல்களைச் நாம் செய்திருக்கலாம்.
அன்னையின் வழியில்:
அன்னையின் பாதுகாப்பு எப்போது நமக்குப் பூரணமாகக் கிடைகிறது, என்பதனையும் இங்கு காணலாம்.
ஒவ்வொரு இடத்திலும் அதற்கே உரிய சட்டங்கள் உள்ளன. சமூகத்திற்கு என்று ஒரு சட்டம். தனிமனித ஒழுக்கத்திற்கு என்று ஒரு சட்டம். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சட்டம் என்று சட்டங்கள் வேறுபடுகின்றன.
நாம், எங்கு இருக்கிறோமோ, அந்த சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், இல்லையா? அதுபோல, அன்னையின் சட்டங்களும், சமூகத்தின் சட்டங்களில் இருந்து வேறுபடுகின்றன. உதாரணமாக, ஒரு தவறான முறையை அல்லது குறுக்கு வழியை கடைப்பிடித்து ஒருவன் பணக்காரனாகிரான் என்று கொண்டால், சிலர் அவனது திறமையை புகழ்கின்றனர். இப்படி செய்தால்தான், அவன் பிழைக்கத் தெரிந்தவன் என்றும் சிலர் கருதுகின்றனர். இந்தக் கலிகாலத்தில் இப்படி செய்தால்தான் முன்னேற முடியும், நேர்மைக்கு ஏது இடம் என்றும் சிலர் எண்ணுகின்றனர். ஆனால், எந்த உண்மைக்கு புறம்பான முறையும், அன்னைக்கு ஏற்புடையதன்று. அன்னையின் சட்டத்தில் இதற்கு இடம் இல்லை.அவர்களின் உலகத்தில் நுழைந்த நாம், உண்மையின் வழி சென்றால் மட்டுமே அவர் தரும் பாதுகாப்பு நமக்கு கிடைக்கிறது.
உடல் நலன் ஏன் பாதிக்கப்படுகிறது அல்லது எதிர்பாராத விபத்துக்களை நாம் ஏன் சந்திக்கின்றோம் என்பற்கான அன்னையின் விளக்கங்களைக் காண்போம்.
There are two factors that have to be considered in the matter [the causes of illness]. There is what comes from outside and there is what comes from your inner condition. Your inner condition becomes a cause of illness when there is a resistance or revolt in it or when there is some part in you that does not respond to the protection; or even there may be something there that almost willingly and wilfully calls in the adverse forces. It is enough if there is a slight movement of this kind in you; the hostile forces are at once upon you and their attack takes often the form of illness.”நமக்குள், இருக்கும் ஏதோ ஒன்று, அன்னையின் பாதுகாப்பை ஏற்க மறுக்கும் போது, நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார் ஸ்ரீ அன்னை.
-The Mother, Questions and Answers 1929–1931 (19 May 1929)
--------- You understand very well, don’t you, what “being under protection” means? You understand also “going out of the protection”? If you do some- thing contrary, for example, if you are under the protection of the Divine and for a moment you have a thought of doubt or ill-will or revolt, immediately you go out of the protection.
-The Mother, Questions and Answer. 1953
இறை அருளை நாம் சந்தேகிக்கும் அல்லது நம்பிக்கை குறையும் மற்றும் தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் அந்த நொடியில், நாம் இறைவனின் பாதுகாப்பில் இருந்து விலகுகிறோம்.
-The Mother, Questions and Answer. 1953
----------There was cholera in the next house and he got so frightened that he caught the illness and without any other reason, there was no other reason for his catching it: it was through sheer fright. And it is a very common thing; in an epidemic, it is so in the majority of cases. It is through fear that the door is opened and you catch the illness. Those who have no fear can go about freely and generally they catch nothing.
பயம் என்ற உணர்வுதான், உடலில் நோய் வர காரணம் என்கிறார் அன்னை. பக்கத்து வீட்டுகாரருக்கு நோய் வந்ததால், தனக்கும் வந்து விடுமோ என்ற பயத்தால் மட்டுமே ஒருவருக்கு நோய் வந்தது என்கிறார். பயம் என்ற உணர்வு நோயின் நுழைவாயில். பயம் கொள்ளாதவருக்கு, எந்த நோயும் வருவதில்லை என்றும் கூறுகிறார் அன்னை.
........... So the protection acts around you to prevent adverse forces from coming upon you or an accident from happening, that is to say, even if you lose consciousness, because of the protection even your lack of consciousness will not produce a bad result immediately. But if you go out of the protection and are not all the time vigilant, then either you will be attacked by the adverse forces or an accident will happen.
நமக்கு அன்னை மீது அளவு கடந்த நம்பிக்கை உள்ளபோது, நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அன்னையின் கருணை நம்மை பல விபத்துகளில் இருந்தும், ஆபத்துகளில் இருந்தும் காக்கிறது. ஆபத்துக் காலங்களில், நமக்கு அன்னையின் நினைவு (Consciousnes) அல்லது விழிப்பு - உணர்வு இல்லாத போது கூட, அவருடைய கருணை செயல்பட்டு நம்மை மிகப் பெரிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
அதே சமயம், நாம் அருளைச் சந்தேகிக்கும் போது அல்லது நம்பிக்கை குறையும் போது, மனதில் தவறான அல்லது Negative எண்ணங்களைக் கொள்ளும் பொது, அன்னையின் பாதுகாப்பை நாமே முனைந்து விலக்குகிறோம். அப்போது, நாம் மிக ஜாக்கிரதையாக செயல்பட்டாலும், விபத்துக்கள் நேரிடலாம்.
முழு நம்பிக்கையை, அன்னையின் மீது கொள்வது ஒன்றே, அன்னையின் பாதுகாப்பை பூரணமாகப் பெற சிறந்த வழி.
அன்னையின் பாதுகாப்பைப் பெற ஸ்ரீ அன்னையே எழுதியுள்ள மந்திரம்/ Prayer
| Protection Flower commons.wikimedia.org |
For the sake of the Mother,
By the power of the Mother,
With the strength of the Mother,
To all adverse harmful being or force
I order to quit this place,
At once and forever.
அன்னையின் அருளால் பயத்தை விலக்குவோம். அன்னையின் பாதுகாப்புடன் வாழ்வோம். நன்றி.
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.


