இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Wednesday 27 November 2013

வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் பெற அன்னை என்ன கூறுகிறார்?




Movicon2-happy.gif
Source Wiki Commons 

நமது சிந்தனைக்கு:

உலகின் சாதாரண வாழ்வு இன்பங்களும், துன்பங்களும் நிறைந்தது. பிரச்சனைகளைச் சந்தித்தே பழக்கப்பட்ட சிலருக்கு, எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ளும் துணிவு உண்டு. மிகவும் சிரமப்பட்டாவது அதனைக் கடந்து வருவர். மனதில் துணிவில்லாதவருக்கு, சிறிய பிரச்சனையும் மலை போன்று பெரியதுதான். அப்படி பிரச்சனைகளை மனப்பக்குவதுடனோ, இல்லாமலோ கடந்து தமது வாழ்க்கையை வாழும் மனிதர்களில், எத்தனை பேர் மன நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ்கின்றனர்? பணமும், புகழும், பெறும் செல்வாக்கும் மட்டுமே நிம்மதியாக வாழ போதுமானது என்று ஒருவர் கூற முடியுமா? வாழ்வில் பெறும் எல்லா வெற்றிகளும் நமது மன நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் உறுதி அளிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. எல்லாமே கிடைத்தாலும் மனிதனுக்குள் வெறுமை எழுகிறது. எல்லாம் இருக்கிறது, நிம்மதியில்லை என்பார்கள் சிலர். இந்நிலைமை ஏன் எழுகிறது? உண்மையான சந்தோஷத்தை பெற என்ன செய்ய வேண்டும்.

அன்னை கூறுவது போல் வாழ்வில் எல்லா விஷயங்களும், நாம் படிக்கும் கற்பனைகள் நிறைந்த கதைப் புத்தகங்களில் வருவது போல் இல்லை. சிறியதும், பெரியதுமாக துன்பங்களும், சவால்களும் அடங்கியுள்ளன. மாறாத சந்தோஷத்தை நாம் பெற, நாம் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் கருணையை உணர்வது மட்டுமே சிறந்த வழியாகும். நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் Divine Consciousness - ஐ உணர்வது, அடையாளம் கண்டு கொள்வது மட்டுமே நம்மை மகிழ்வுடனும், நிம்மதியுடனும் வாழ வழிவகுக்கும்.


Do not attach too much importance to all these things; they are the imaginations of a child who knows nothing of life, of its misery and ugliness. For life is not as it is portrayed in novels; day-to-day existence is full of sufferings great and small, and it is only by identification with the Divine Consciousness that one can attain and preserve the true unchanging happiness.

-The Mother

மனச் சோர்வை வெல்வோம் :

உடற்பயிற்சியைப் போல மனப்பயிற்சியும் முக்கியமானது. அன்னையிடம் மனதைச் செலுத்துவது, தியானம் போன்றவை மனச்சோர்வை விலக்க உதவும். சரணாகதியும், சமர்பணமும் பிரச்சனைகளை நம்மிடமிருந்து பிரித்து அன்னையிடம் அவற்றை சரணடையச் செய்கின்றன. ஒவ்வொரு ஷணமும் அன்னை நம்முடன் இருக்கிறார் என்று உணர்வது, நம் மனதில் தெம்பையும் புத்துணர்வையும் வளர்க்கும். மனம் தெளிவடைந்தால் வாழ்வும் தெளிவாகும். அன்னை கூறுவது போல் மனச்சோர்வு, சுய இரக்கம், தாழ்வு மனப்பான்மை என எவ்விதமான உணர்வுகளுக்கும் மனதில் இடமளிக்கக் கூடாது. இது போன்ற எண்ணங்கள் நம்மை அன்னையிடம் இருந்து பிரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.அன்னை கூறுவதைப்  பார்ப்போம்.

Be careful, child, do not open the door to depression, discouragement and revolt—this leads far, far away from consciousness and makes you sink into the depths of obscurity where happiness can no longer enter.

-The Mother 

மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் வர அன்னை கூறும் மற்றொருமொரு விளக்கத்தைக் காண்போம்.


My dear mother, I don’t know why I have lost all my happiness and peace. I don’t know when it will come back to my heart. My sweet mother, what shall I do?


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQpm_LFeAoXQlTcGOfxpeBZKYPdH_USuKaqL9ze476UIltkcJwMy dear child, When one’s attention is always turned towards oneself, one is never happy. When one allows oneself to be ruled by every passing impulse, one is never peaceful. It is through work and self-mastery that one can find happiness and peace.


Ref: Some Answers from the Mother

1 comment:

  1. Dear all, Please share you views and comments on the articles. It will help others to progress. Om Namo Bhagavathe!

    ReplyDelete

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.