இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Wednesday 13 November 2013

தியாகத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அதற்கும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

நமது சிந்தனைக்கு:

தியாகத்தைப் பற்றி இந்த உலகில் இந்த உலகில் உள்ள பொதுவான சில கருத்துக்களைக் காண்போம். இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை தியாகம் என்ற பண்பு மிகவும் உயர்ந்ததாகக் காணப்படுகிறது. தன்னை வருத்திக் கொண்டு சிலருக்கு உதவி செய்பவர் சிலர். சிலரிடம் தியாகம் செய்வது என்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. தங்களின் சொந்த நலன்களை இழந்து கூட தியாகம் செய்ய அவர்கள் தயாராகி விடுவார்கள். இதனால் தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் பிரச்சனை வருமா என்று கூட அவர்கள் எண்ணுவதில்லை. மிகவுயர்ந்த செயலை, தங்களை வருத்திக்கொண்டு தாங்கள் செய்வதாக நினைக்கிறார்கள்.

தனது தியாகம் பாராட்டப்படவேண்டும் என்பதற்காகவே பலருக்கும் தெரியும்படி, தியாகத்தைச் செய்பவர் சிலர். தனக்குப் பிடிக்காத பொருளை அடுத்தவருக்காக விட்டு கொடுத்து, தியாகி என பெயர் வாங்குபவர்கள் சிலர். தியாகம் புகழைக் கொடுப்பதால், அதற்காக கூட சிலர் தியாகங்களைச் செய்கின்றனர். தனது சுயநலத்தால், தனக்கு அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், தியாகம் என்ற பெயராக மாற்றிக் கொள்பவர்கள் பலர். இப்படி தியாகி என்ற பெருமையைப் பெற போலித்தனமான தியாகத்தைச் செய்பவர்களும் உலகில் உள்ளனர். தனக்கு ஆகாது என்று ஜோசியர் கூறிய ஒரு பரம்பரைச் சொத்தை, தனது சகோதருக்கு விட்டுக் கொடுக்கிறார் ஒருவர். அவரது சுயநலமிக்க இந்த செயல் கூட அவருக்கு தியாகி என்ற பட்டத்தை வழங்குகிறது. அன்னை கூறும் தியாகம் என்ற செயல் இவ்வுலகில் தியாகி என்ற பட்டத்தைப் பெரும் செயல் அன்று.

ஆன்மீகச் சிந்தனையுடன் கண்டால், உங்களுடைய தியாகம், இறைவனின் எண்ணத்திற்கு எதிரானதாக கூட இருக்கலாம், எதிர்மறையான விளைவுகளைத் தருவதாக கூட இருக்கலாம். ஏனென்றால் தியாகம் என்பது ஒருவருடைய முடிவு. அது எண்ணம் சார்ந்தது. சுயநலமாகவும் இருக்கலாம்.
சரணாகதி என்பது தியாகம் அன்று. விருப்பு வெறுப்புகள் இன்றி இறைவனிடம் ஒரு செயலை ஒப்படைப்பது. நமது சுயநலமற்ற தியாகம் இந்த உலகில் நாம் உடலாலும், நம் உயர்ந்த பண்பாலும் செய்யும் சாதனையாக இருக்கலாம். ஆனால், நமது ஆன்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுமா, இறைவனின் திருவுள்ளத்தை அது நிறைவேற்றுமா என்பதும் ஒரு கேள்விக்குறிதான். நாம் செய்யும் சரணாகதியில், "நான் என் எண்ணங்களை, விருப்பங்களை தியாகம் செய்கிறேன்" என்ற நினைப்பிற்குக் கூட இடமில்லை. இருந்தால் அது சமர்ப்பணமில்லை.
 
  Surrender means a free total giving with all the delight of the giving; there is no sense of sacrifice in it. If you have the slightest feeling that you are making a sacrifice, then it is no longer surrender.

-The Mother

 தியாகத்தின் சில விளைவுகளை பற்றி அன்னை எழுதிய சில கருத்துகள்.

.................As a matter of fact, on one hand this knowledge is incomplete because you do not know that the only way to relieve others, to eliminate a little suffering in this world, is not to allow any sensitivity, however painful it may seem, to arouse suffering in yourself or to disturb your peace and serenity. On the other hand the idea of the work to be accomplished is itself warped by the illusion of personality. The correct idea is not to draw all suffering to yourself, which is unrealisable, but to identify yourself with all suffering, in all others, to become in it and in them a seed of light and love which will give birth to a deep understanding, to hope, trust and peace.

Until this is well understood, the taste for sacrifice rises in the being; and each time an opportunity for it appears, since you are not disinterested in this matter, since you desire this sacrifice, it becomes something sentimental and irrational and results in absurd errors which sometimes have disastrous con- sequences. Even if you are in the habit of reflecting before acting, the reflections preceding the act will necessarily be biased, since they are warped by the taste for suffering, by the desire to have an opportunity to impose a painful sacrifice on yourself.

Thus, consciously or not, instead of sacrificing yourself for the good of others, you sacrifice yourself for the pleasure of it, which is perfectly absurd and of no benefit to anyone. No action should be deemed good, no action should be undertaken until we know its immediate and, if possible, its distant consequences, and until it appears that they must in the end add, however little, to earthly happiness. But to be able to give a sound judgment on the matter, this judgment must in no way be disturbed by any personal preference, and this implies self-detachment.


Words of Long Ago by The Mother.

நாம் மற்றவர்களின் நலனுக்காச் செய்யும் சிறு செயலில் கூட, "நான்"என்ற அகங்காரம் - ego இல்லாமல், அச்செயலை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்து செய்தால் அதுவே நாம் இறைவனின் கருவி என்பதற்கு அடையாளம். 


 Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,நமது தியாகத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அதற்கும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

1 comment:

  1. இந்த வலைத்தளத்திற்கு தங்களின் வருகைக்கு நன்றி. இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு உதவும் வகையில், அதன் தொடர்பான உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் எழுதிய பல்வேறு நூல்களில், தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யலாம். நன்றி.

    ReplyDelete

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.